Sunday, November 20, 2016

20 ரூபாயில் மருத்துவம் அதிசய டாக்டர்!

மக்கள் பல பேர் காய்ச்சல் மற்று உடல் உபாதைகள் ஏற்பட்டாலும், மருத்துவர்களிடம் செல்வதில்லை.
ஏனென்றால், பெரும்பாலானோர் உண்மையான மருத்துவர்களாக செயல்படுவதில்லை.
மக்களிடம் எப்படி பணம் பறிக்கலாம் என்பதை தான் நோக்கமாக வைத்துள்ளார்கள்.
மருத்துவர்களை அந்த காலத்தில் கடவுளுக்கு இணையானவர்களாக மக்கள் பார்த்தார்கள்.
இந்த காலத்தில் அப்படிப்பட்ட்வர்கள் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு தான் இருக்கிறார்கள்.
கோடிக்கணக்கில் பணம் செலவழித்து மருத்துவர்கள் ஆகிறார்கள். அவர்களிடம் நாம்
மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியுமா. மருத்துவம் என்பது ஒரு சேவையாய தான் இருந்தது.
ஆனால், இன்று அது வியாபாரமாய் மாறி விட்டது.

இவர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான டாக்டர்.

கோவை ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் டாக்டர். பால சுப்பிரமணியம். ஆவாரம்பாளையத்தில் மருத்துவமனை நடத்தி வந்தார்.
வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு மருத்துவம் செய்ய தொடங்கினார். விலைவாசி ஏறிய காரணத்தினால்
அவர் இரண்டு ரூபாயை உயர்த்த நேரிட்டது. கடைசியாக அவர் வாங்கிய கட்டணம் வெறும் 20 ரூபாய்.
அதையும் கொடுக்க முடியாத ஏழை மக்களுக்கு இலவசமாகவே மருத்துவம் செய்தார். மருந்து மாத்திரைகளையும்
வாங்கி கொடுத்தார். இவரின் பெயரே, “20 ரூபாய் டாக்டர்” என்று மாறியது.

நாடியை பிடித்தாலே நூறு ரூபாய் என்று வசுல் செய்யும் டாக்டர்கள் மத்தியில் 20 ரூபாயில் மருத்துவம் செய்ததால்,
அவரின் புகழ் பரவியது. பக்கத்து கிராமத்து மக்களும் அவரிடம் வந்து சிகிச்சை பெற்றார்கள்.
இவரை நம்பி ஏராளமான மக்கள் வரும் காரணத்தினால், ஒரு நாள் கூட விடுமுறை எடுத்தத்திலை.

18ந் தேதி நடைபயிற்சியில் இருக்கும் போது மாராடைப்பால் மரணம் அடைந்தார்.
வழக்கம் போல் மக்கள் மருத்துவமனைக்கு வந்தார்கள். முடியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.
ஏனென்றால், அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை.
மக்கள் அவர் வீட்டுக்கு சென்று பார்த்த போது தான், அவர் மரணம் அடைந்த செய்தி தெரிந்தது.
மக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

ஆவாரம்பாளையத்தில் பல இடங்களில் 'ஏழைகளின் தெய்வத்திற்கு இதய அஞ்சலி ' என கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
ஏராளமான மக்கள் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இவர்களை போன்ற மனிதர்களால் தான் பூம் இன்னுமும் உத்வேகத்துடன் சுழன்று கொண்டிருக்கிறது.
இவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

------
கடுகு டப்பாவில் இருக்கும் காசு கூட கறுப்பு பணம் என்று பிஜேபி தலைவர் தமிழிசை சொல்கிறார்.
இன்று, ஒரு உடல் உபாதை என்றால், எவ்வளவு பணம் செலவாகிறது, அரசாங்க ஆஸ்பத்திரியில் கூட
காசை பிடுங்குகிறார்களே? காசுக்கு அவன் எங்கே போவான். எங்க வீட்டு கடுகு டப்பாவில் சேர்த்து வைக்கிறோம்.
எங்க வீட்ல கடுகு டப்பாவில்
பணம் இருப்பது உங்கள் கண்களை பறிக்கிறதா? தொழிலதிபர்களின் பல லட்சம் கோடி வராகடனை பார்த்து எங்கள்
நெஞ்சே வெடிக்கிறதே. அதை உங்களால் வசூல் செய்ய முடியுமா?
யோக்கியர்கள் போல் வேஷம் போட்டு சூற்றிக் கொண்டிருக்கும், காங்கிரஸ்காரர்களை கொள்ளையில் மிஞ்சும் மோடியின் கூட்டம்.

செய்திக்கு போகலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot