Sunday, November 20, 2016

மோடியின் திட்டத்தை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்கனும்

அரசியல்வாதியோ, தொழிலதிபர்களோ, சினிமா காரங்களோ க்யூவில் நின்று பணம் மாற்றி சென்றதை நீங்கள் பாத்தீங்களா மக்களே?
அப்படினு கேட்க முடியாது.

இன்னிக்கு மளிகை பொருட்கள் வாங்க காசு இல்லாமல் ராகுல் காந்தி வந்து 4000 ரூபாய் வாங்கி கொண்டு போகிறார்.
நாளை பாஜக ஆட்கள் க்யுவில் நிற்கும் நாடகம் தொடங்கும்.
நாளனிக்கு அம்பானியும், அதானியும் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் க்யூவில் நின்று பணம் மாற்றி செல்வார்கள்.
நல்லா நடிச்சி நடிச்சி எங்களை ஏமாத்துங்க.

மோடி அரசு, இவ்வளவு கோடி சிக்கியது என்று பெருமை பித்திக் கொள்வார்கள்.
அது யார் பணம். உண்மையாய் உழைத்து வீட்டில் சேமித்து வைத்து பாமரனின் பணம் தான் நிறைய இருக்கும்.
வெளிநாட்டில் இருக்கும் பணத்தை கொண்டு வர நாதி இல்லை. எங்கள் பணத்தை பறித்து அரசாங்கம் நடத்த போகிறீர்கள்.
மாநில அரசு எங்கள் பணத்தை டாஸ்மாகில் பறித்து ஆட்சி நடத்துவதை போல்.

தெலங்கானாவில் அதிர்ச்சியில் பெண் தற்கொலை
உடல்நலம் சரியில்லாத கணவரின் சிகிச்சைக்காக நிலம் விற்ற 52 லட்சம் ரூபாயும் செல்லாதா?
அந்த பெண்ணை கொன்ற மோடி அரசாங்கத்திற்கு என்ன தண்டனை?
இது போல் பல சம்பவங்கள் நாடு முழுக்க நடக்கிறது.

எவன் தப்பு பன்ணாலும், என்னிக்கும் பாதிப்பு பாமர மக்களாகிய நமக்கு தான்.
ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு திட்டம் போடும் அதிகாரிகளுக்கும், மோடிக்கும் உண்மை இந்தியாவை பற்றி தெரியாதா?
1000 ரூபாய் முதியோர் பென்சன் வாங்கும் 70,80 வயது படிப்பறிவில்லாத் முதியவர்கள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதை
பற்றி சிந்தித்தீர்காளா? பல கிராமங்களில் வங்கியே இல்லை, வங்கிக்கு போக பல மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.
அவர்கள் கூலி வேலைக்கு போவார்களா, இல்லை விடுப்பு எடுத்து வங்கிக்கு போவாங்களா?
போனாலும், சொன்னபடி 4000 ஆயிரம் கொடுக்கிறீங்களா? வெறும் 1000 ரூபாய் கொடுக்கிறீங்கள்.
அவன் இன்னொரு நாள், வருமானத்தை விட்டுட்டு வங்கிக்கு வரனுமா?

மோடிக்கு ஜெ என்று கோஷமிடும் படித்த அறிவுள்ள மோடி ஆதரவாளர்கள், உங்களுக்கு மக்கள் அவதி படுவது தெரியலையா?
எப்படி தெரியும், உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம், ஏசி ரூமில் வேலை, சத்யம் தியேட்டரில் சினிமா, பார்களில் மது அருந்துதால்,
இண்டர்னெட் பேஸ்புக்கில் புகைப்படம் போட்டு பந்தா பண்ணுதல். உங்கள் வீட்டிற்கு சிறு தொலைவில் ஏழை மக்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் படும் பாடு உங்களுக்கு எப்படி தெரியும்?

இண்டர்னெட்டில் கருத்து சொல்லி விட்டு, ஓட்டு போடுவதற்கு கூட போகாத மக்கள் தான் இன்று மோடியின் நடவடிக்கையில்
இந்தியா வல்லரசு ஆகும் என்று பொய் பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.

என்றைக்கும் நீங்கள் செல்வந்தர்களாய் இருக்க போவதில்லை.
ஒரு நொடி போதும். இறைவன் அனைத்தையும் மாற்றும் சக்தி படைத்தவன்.
பாமரனின் வலியை பாருங்கள். புரிந்து கொள்ளுங்கள்.
வீட்டை விட்டு வெளியே வந்து ஏழைகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்றூ பாருங்கள்.

கறுப்பு பணத்தை ஒழிக்க புறப்பட சிங்கம் மோடி என்று பெருமையா பேசுறீங்களே.
நீங்க வீடு, நலம் வாங்குகிறீங்களே, முழு மதிப்புக்கு நீங்கள் பத்திரம் வாங்குறீங்களா?
முழு பணத்தையும் வங்கி பரிவர்த்தனை மூலமாக தான் கொடுக்கிறீங்களா.
நான் எந்த சொத்தும் வாங்கவில்லை. நான் அரசாங்கத்தை ஏமாற்ற வில்லை என்று கடவுள் மீது ஆணை இட்டு சொல்வேன்.
உங்களால் சொல்ல முடியுமா.

ஒரு சில பேர் எனக்கு இமெயில் அனுப்புறாங்க. மோடியின் இந்த திட்டத்தை விமர்சிக்காதீர்கள்.
தொடர்ந்து விமர்சித்தால் unsubscribe செய்து விடுவோம் என்று சொல்கிறார்கள்.

உங்களுக்கு பிடித்த கருத்துகளை பேச நான் youtube channel தொடங்கவில்லை.
என் மனதில் பட்ட உண்மை கருத்துகளை பேச தான் தொடங்கியிருக்கிறேன்.
உங்களை unsubscribe செய்ய கூடாது என்று நான் கட்டாயப்படுத்தவில்லையே.

மோடி என்ன செய்தாலும் நிறைய youtube channel இருக்கிறது. அங்கு subscribe செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot