Sunday, November 20, 2016

ஜல்லிக்கட்டிற்கு எதிராக பிஜேபி?

15 நவம்பர் - குஜராத்தில் நடந்த ஒரு விழாவில் பிஜேபியின் தலைவர் அமித் ஷா சில கருத்துகளை வெளியிட்டார்.
பத்து ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், மாதா மாதம் ஒரு ஊழல் நடந்தது. 2G, CWG, நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் ஊழல் மற்றும் பல ஊழல்கள் செய்தார்கள்.
அதன் மூலம் அவர்கள் சேர்த்த அடைந்த பணம் 12 லட்சம் கோடி ரூபாய்.

இனிமேல் தான் தமாஷ் ஆரம்பிக்குது.

காங்கிரஸ் காரர்கள் அந்த 12 லட்சம் கோடி பணத்தை வீட்டிலும், குடோனிலும், நண்பர்கள் வீட்டிலும் பதுக்கி வைத்தார்கள்.
மோடி அவர்கள் ஒரே இரவில் அவை அனைத்தையும் குப்பைகளாக்கி விட்டார். காங்கிரஸ் காரர்களின் முகத்தில்
இருந்து மகிழ்ச்சியை எடுத்து விட்டார்.

இது சம்பந்தமாய் ஒரு தகவல்.
8ந்தேதி இரவு மோடி பேசியதற்கு பின் இந்த ரிசர்வ் வங்கி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள்.
எத்தனை 500, 1000 ரூபாய் நோட்டுகள் புழகத்தில் இருக்கிறது என்ற தகவலை வெளியிட்டார்கள்.

500 ரூபாய் நோட்டுகள்  - 1650 கோடி , மதிப்பு 8,25,000 crore rupees
1000 ரூபாய் நோட்டுகள் -  660 கோடி , மதிப்பு 6,60,000 crore rupees
----------------------
மொத்தம் 14,85,000 கோடி ரூபாய் - கள்ள பணம் - 400 கோடி- ஆக கிட்டத்தட்ட 15 லட்சம் கோடி
-------------------

ஆக, 15 லட்சம் கோடி ரூபாய் பணத்தில், 12 லட்சம் கோடி ரூபாய் பணம் காங்கிரஸிடம் இருக்கிறதாம்.
வெறும் 3 லட்சம் கோடி ரூபாய் தான் மக்கள் புழக்கத்தில் இருக்கிறதா.
இவர்கள் நம்மை ஏன் மூட்டாள்கள் ஆக்கிறார்கள்?
இவங்க ஒரு புழுகு மூட்டை என்பதற்கு வேறு ஏதாவது சாட்சி வேண்டுமா.

1) சில மக்கள் என்ன நினைக்கிறார்கள் - எனக்கு கஷ்டம் தான். ஆனால், செல்வந்தர்கள் பணம் வீணாக போகுதே அப்படின்னு அல்ப சந்தோசம் அடையறான்.
  அந்த ஒரு எண்ணம் பாமரனுக்கு தானாக தோன்றவில்லை. அமித் ஷா, மோடி போன்றவர்கள் விதைக்கிறார்கள்.
  ஆனால், அது உண்மையே கிடையாது. ஊரை ஏமாத்தி பணம் சம்பாதிக்கறவனுக்கு, அதை பாதுக்காக தெரியாதா.
  ஹவாலா கும்பல்கள், ஆடிட்டர்கள், ஏஜெண்டுகள் என்று பல வழிகளில் அவர்கள் சுலபாக பணத்தை மாற்றி விடுவார்கள்.

2) ஒரு பேச்சுக்கு 12 லட்சம் கோடி இருக்குனே வச்சிக்கிலாம். அப்படி இருக்கும் போது, அவங்க கிட்ட தான நீங்க அத பறிமுதல் பண்ணனும்.
  125 கோடி மக்களை ஏன் தெருவில் நிக்க விடறீங்க?
  அந்த பணத்தை ஒரு தேசிய கட்சிக்கு எப்படி பாதுகாப்பான முதலீடாக மாத்தனுமுனு தெரியாதா.
  அதை எந்தெந்த எஜெண்டுகள் எப்படி செய்யறாங்கனும் பாஜகவிற்கு தெரியாதா?
  எல்லாமே தெரியும். அப்புறம் எதுக்கு எங்களை இப்படி ஏமாத்தறீங்க?

இவர்களின் பேச்சை கேட்கும் மக்கள் கண்மூடித்தனமாய் நம்பி விடாதீரக்ள்.
அலசி ஆராய்ந்து ஒரு திட்டத்தின் நல்லது கெட்டதை அறிய வேண்டும்.
அப்படி செய்யா விட்டால், இதைப் போன்று பொய்யர்கள் நம்மளை ஏமாத்திட்டே இருப்பாங்க.

மோடியின் இந்த திட்டம் தொடர்பாக இன்னும் சில வீடியோக்களை வருகிற நாட்களில் upload செய்வேன்.
உங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

-----------------------------------------------------------------
3) 1% சதவீத மக்கள் தான் வருமான் வரி கட்டுகிறார்கள். எல்லாரையும் கணகானிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து
  வருமான வரி கட்ட செய்ய வேண்டும். எல்லா வியாபாரிகளின் பண பரிவர்த்தனைகளை கார்ட் மூலம் நடத்துவதால்,
  அவர்களை முறையாக வரி கட்ட வைக்கலாம். அரசாங்கத்திற்கு நிறைய வருவாய் வரும்.

  இது தான் பிஜேபியின் குறிக்கோள். உண்மையானவர்கள் இருந்தால், இந்த உண்மையை தானே சொல்லியிருக்க வேண்டும்.
  ஆனால் கறுப்பு பணம், கள்ள பணம், தீவிரவாத ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, தேசபக்தி என்றெல்லாம் பேசறாங்க. ஏன்?

  நீங்க யாரும் வரி கட்ட மாட்டறீங்க? உங்க எல்லாரின் பண பரிமாற்றங்களை கண்கானிப்பு வளையத்துக்குள் கொண்டு
  வருவோம். உங்களை வரி கட்ட வைப்போம் என்று சொன்னால், நாம் அதை ஏற்றுக் கொள்வது சிரமம்.
  ஒழுங்காக வரி கட்டினால் மட்டும் எங்களுக்கு அரசாங்கம் நல்லது செய்யுதா? ஊழல் தான பண்றாங்க.
  உடம்பு சரி இல்லைனா, காசு கையில் இல்லைனா அரசாங்கமா உதவுமா, நான் சேர்த்து வச்ச காசு தான உதவும்.
  புள்ளை குட்டிக்கு நல்ல படிப்பை கொடுக்க, நான் சேர்த்து வச்ச காசு தான உதவும்.
  நான் எதுக்கு இவனுங்களுக்கு வரி கட்டனும்னு கேப்பாங்க. இப்ப அப்படி இல்லையே.
  நமக்கு நல்லது நடக்க போகுதுனு மக்கள் நம்பறாங்க. ஆனால், இந்த திட்டத்தின் மூலம் எவ்வளவு சிறு வர்த்தகர்கள்
  வாழ்வாதாரத்தையே இழப்பார்கள். கார்ட் சர்வீஸ் சார்ஜ், டெபிட் கார்டி ரீடர் காசு கொடுக்கனும், அதுல ஜிபிஅர் எஸ் சிம் போடனும்.
  அதனால், சிறு வணிகர்கள் விலையை ஏற்ற வேண்டும். ஆனால், கார்ப்பரேட் கம்பெனிகள் மொத்தமாய் வாங்கி வியாபாரம்
  செய்வதால், சிறு வணிகர்களின் வேலையை விட, சிறிதாய் தருவார்கள். சிறு வணிகர்கள் காணாமல் போவார்கள்.
  கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அடிமை வாழ்க்கை வாழ வேண்டும்.

கடைசியில் லாபம் அரசாங்கத்திற்கும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும்.
கார்பரெட்ஸ் ஹாப்பி நா மோடி ஹாப்பி
மோடி பக்தர்களே, உங்களோட கருத்துகளை கேட்க ஆவலாக இருக்கிறேன்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot