Saturday, November 26, 2016

கடும் திட்டு வாங்கிய மோடி பக்தன். பகீர் சம்பவம்

”வேலைக்கு போகாம சோறு தண்ணி இல்லாம ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியிலும்,  ஏடிஏம் இலும் மணி கணக்காக நின்னு நின்னு காலு வலிக்குது”
அப்படின்னு நிறைய பேர் சொல்றதை நீங்க கேட்ருபீங்க.

இதுக்கு மோடியின் அபிமானிகள் இண்டர்நெட்டில் என்ன பதில் சொல்வாங்க தெரியுமா, “தேசத்தின் நலனுக்காக நமது எல்லையில் ராணுவ வீரர்கள்
கடும் குளிர், வெயிலை பற்றி கவலைப்படாமல் மணிக் கணக்கில் கால் வலியோடு நின்று கொண்டு தேசத்தை காப்பாத்தறாங்க.
கறுப்பு பணத்தை ஒழிச்சி தேசத்தை சுத்தம் செய்யனும் அப்படின்ற தேச நலனுக்காக ஒன்னு இரண்டு நாள்
நிக்க மாட்டீங்களா” அப்படினு கேப்பாங்க.

“அப்படியா சரி, மோடி அவர்களை காஷ்மீர் எல்லையில் ஒரே ஒரு இரவு ராணுவ வீரரை போல் காவல் காக்க சொல்லுங்கலேன் பார்ப்போம்”
அப்படின்னு மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவாங்க.

இது மட்டுமா, மோடியின் திட்டத்தை விமர்சித்தால், கறுப்பு பணம் வச்சிருக்க அதான் நீ எதிர்க்கற அப்படினு சொல்வாங்க.
அடப்பாவிகளா காசுக்கே வழியில்லை. இதுல கறுப்பு பணம் தாம் மிச்சம் அப்படினு பலர் நொந்துக்கறதையும் பாக்க முடியுது.
இது தவிர தேச விரோதிகள், மூட்டாள்கள் அப்படின்னு விதவிதமா பதில் சொல்வாங்க.

வாங்க செய்தி என்னன்னு பார்ப்போம்.


வட மாநிலத்தில் ஒரு நபர் ஏடிஎம் இல் பணம் எடுப்பதற்காக நீண்ட க்யூவில் நின்று கொண்டிருந்தார்.
கடும் கோபம் அடைந்த அந்த நபர் “என்ன அரசாங்கம் இது? சரியான திட்டமிடாமல் திட்டத்தை செயல்படுத்தி
மக்களை கொடுமை பண்றாங்க” அப்படினு சொல்லியிருக்கார்.

மோடியின் பக்தர் ஒருவர் வழக்கமான பதிலை அவரிடம் சொல்லியிருக்கிறார், “எல்லையில் ராணுவ வீரர்கள்
தேசநலனுக்காக 20 மணி நேரம் கால் கடுக்க நின்று கொண்டு தேசத்தை பாதுகாக்கிறார். நீங்க ஒரு நாள் நிக்க மாட்டிங்களா”
அப்படின்னு அந்த நபரை பார்த்து கேட்டிருக்கிறார்.

”நான் 20 வருடம் எல்லையில் நீங்கள் சொன்னைதை தான் செய்து கொண்டிருந்தேன். இப்போது நான் எனது ஓய்வுதிய
பணத்தை எடுப்பதற்கு மணி கணக்கில் காத்துக் கொண்டு இருக்கிறேன். ஏடிஏம் க்யூவில் தேசபக்தன் சான்றிதழ் கொடுப்பதற்கு பதிலாக, மோடியிடம் சென்று
ராணுவ வீரர்களுக்கு “ஒரே பதவி ஒரே ஓய்வுதியம்” திட்டத்தை செயல்படுத்த சொல்லி உங்கள் தேசபக்தியை காட்டுங்கள்” என்று கோபத்துடன் கூறியிருக்கிறார்.
நம்ம கிட்ட சொன்ன நாம வாயை மூடிட்டு இருப்போம். ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி கிட்டவே சொல்லிருக்கானே இந்த மோடி பக்தன்.
இதுவும் தேவை, இன்னுமும் தேவை.

அது என்ன
”ஒரு பதவி, ஒரு ஒய்வுதியம். One rank one pension.


ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு அவர்கள் வகித்த பதவி, அவர்கள் பணியாற்றிய ஆண்டுகள் அடிப்படையில்
ஒரே மாதிரி ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பது தான் இந்த திட்டம். ஒரு உதாரணம் பார்ப்போம்.
ஒரு மேஜர் ஜெனரல் 1995 இல் 20 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தால், அவரின் ஒய்வு ஊதியம் 30,000 ரூபாய்.
ஆனால், அதே பதவியில் அவருக்கு பிறகு 20 வருடங்கள் பணியாற்றி 2006 இல் ஓய்வு பெற்ற வீரருக்கு 38,000 ரூபாய்
ஒய்வு ஊதியம் கிடைக்கு. இந்த வேறுபாடுகளை கழிந்து, ஓரே மாதிரியான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்.
ஆண்டிற்கு ஒரு முறை அனைவருக்கும் ஒரே மாதிரி ஓய்வு ஊதியம் இருக்கும் வகையில் திருத்தி அமைக்க வேண்டும்.
தேசத்திற்காக தங்களின் குடும்பங்களை எல்லாம் கடுமையாக உழைக்கும் ராணுவ வீரர்களுக்கு இது கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒன்று தான்.

1973 இல் இருந்து இதை அமல்படுத்தாமல் அரசியல் கட்சிகள் தாமதப்படுத்தி வந்தார்கள்.
2014 இல் பிரதமர் ஆவதற்கு முன், பிரதமர் மோடி தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இதை அமல்படுத்துவோம் என்றார்கள்.
இரண்டு வருட இழுத்தடிப்பிற்கு பின்னர் ஏப்ரம் 2016 ஆம் ஆண்டு இதை செயல்படுத்தினார்கள்.
ஆனால் ராணுவ வீரர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.
இவர்கள் செயல்படுத்தியது ஊனமுற்ற திட்டம் என்று கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஓய்வுதியம் கிடைக்க வில்லை என்று ராணவ வீரர் ஒருவர் இம்மாத தொடக்கத்தில்
தற்கொலை செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

52 வருடங்களாக ராணுவ வீரர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவற்ற ஆர்வமில்லாத மோடி அவர்கள்
தேசபக்தி பற்றி பேசுவதற்கும், ராணுவ வீரர்களின் தியாகம் பற்றி பேசுவதற்கும் என்ன தகுதி இருக்கிறது?

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot