Monday, November 28, 2016

அதிர்ச்சி தரும் புது சட்டம்


1) New strict laws which completely contradictory to previous charges:
85% வரி - இன்றைய மோடி செய்தி
புது சட்டம் - யாருக்கு பாதிப்பு?
அதிச்சி செய்தி

Shocking new act|அதிர்ச்சி தரும் புது சட்டம்

0 to 2,50,000 No tax
2,50,001 to 5,00,000 10%
5,00,001 to 10,00,000 20%
Above 10,00,000 30%

ஒவ்வொரு நாளும் மோடி அரசு புது புதி விதிமுறைகள், அறிவிப்புகள் கொடுத்து வருகிறது.
மக்கள் தூங்கி எழுந்தவுடன் இன்னிக்கு என்ன சொல்ல போறாங்களோன்னு என்ற பயத்தில் இருக்கிறார்கள்.
சரியாக திட்டமிடாமல், மக்களை நன்றாக குழப்பி வருகிறார்கள். இன்று என்ன சொல்லியிருக்கிறார்கள்?
வாங்க பார்க்கலாம்.

சில வாரங்களுக்கு முன்னர் அவர்கள் செய்த அறிவிப்பு:
2,50,000 ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தால், வரியும், 200 சதவீத அபராதமும் கட்ட வேண்டும்.
அதாவது, ஒருவர் 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், வரியும், அபராதமும் சேர்த்து 75,000 ரூபாய் கட்ட வேண்டும்.

நேற்று அவர்கள் செய்த அறிவிப்பு:
அருண் ஜெட்லி The Taxation Laws , தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்து மசோதாவை லோக் சபாவில் தாக்கல் செய்தார்.
செய்த திருத்தம் என்னவென்று பார்ப்போம்.

நவம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 31 வரை டிபாசிட் செய்த பணத்தின் அளவு 2,50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால்:
50 சதவீதம் வரி கட்ட வேண்டும். 
மீதமுள்ள பணத்தில், 50% மட்டும் தான் டிபாசிட் செய்தவருக்கு கையில் கொடுப்பார்கள்.
மீதி 50% பிரதம மந்திரியின் Pradhan Mantri Garib Kalyan Yojana என்ற திட்டத்தில் டிபாசிட் செய்து விடுவார்கள்.
4 வருடம் கழித்து தான் இந்த பணம் கைக்கு வரும். 4 வருடத்திற்கு வட்டியும் தர மாட்டார்கள்.

25% பணத்தை நாமே டிபாசிட் செய்ய வேண்டுமா, அல்லது அவர்களே எடுத்து கொள்வார்களா என்ற விவரம் வெளியிட வில்லை.
இந்த மசோதா நிறைவேறியவுடன். அதன் பின்னர் அந்த விவரம் தெரிய வரும்.

5 லட்சத்திற்கு இப்போது எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்று பார்க்கலாம்.
1.25 லட்சத்தை வரியாக கட்ட வேண்டும், 1.25 லட்சம் Pradhan Mantri Garib Kalyan Yojana திட்டத்தில் வட்டி இல்லாமல் 4 வருடம் தங்கி விடும்.
கையில் கிடைக்கும் தொகை வெறும் 2.5 லட்சம் ரூபாய் தான்.

விவரம் அறிந்த மக்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்கள் வங்கி கணக்கில் பணத்தை பிரித்து போடுவார்கள். ஆனால் தெரியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களே.
எவ்வளவோ தாய்மார்கள் பெண்ணின் திருமணத்திற்கோ, பிள்ளைகளின் படிப்பு செலவிற்கோ பணம் சேர்த்து வைத்து இருப்பார்கள்.
நோய்வாய் பட்டவர்கள் நிலத்தை விற்று, கடனை வாங்கி ஆபரேசனுக்கு காசு சேர்த்து வைத்து இருப்பார்கள்.
வியாபாரிகள் சிறுக சிறுக சேர்த்து வைத்து தொழிலை விரிவுபடுத்தலாம் என்ற ஆசையில் இருப்பார்கள்.
அனைவரின் ஆசையில் மண்ணை போட்டது இந்த மோடி அரசு.
நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது என்று சொல்வார்கள்.
ஆனால் மோடியின் திட்டமோ ஒரு குற்றவாளியை தண்டிக்க, நூறு நிரபாரதிகளை தண்டிக்கிறது.

அந்த மசோதாவில் இன்னும் ஒன்றையும் சொல்லி இருக்கிறார்கள்.
தாங்களே முன் வந்து டிபாசிட் செய்யாதவர்களின் பணம் தேடுதல் வேட்டை மூலம் கண்டுபிடிக்கப் பட்டால், 85% வரி விதிக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
செல்லாத பணத்தை எவன் வீட்டில் வச்சி பாதுகாக்க போறான். அதனால் இந்த 85% வரி யாருக்கு பொருந்தும் என்று தெரியவில்லை.

பிஜேபி லோக் சபாவில் பெரும்பான்மையில் இருக்கிறது. ஆனால் ராஜ்ய சபாவில் பெரும்பான்மை இல்லை.
எதிர் கட்சிகள் இதை முடக்கி விடுவார்கள், அதனால் சட்டம் ஆகாது என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், அப்படி நடக்க போவதில்லை.
ஏனென்றால், money bill தொடர்பான மசோதாக்கள் லோக் சபாவில் நிறைவேறினால் போதுமானது. அது ராஜ்ய சபாவில் நிறைவேற வேண்டிய அவசியம் இல்லை.
லோக் சபாவில் பிஜேபிக்கு பெரும்பான்மை கொடுத்த பலனை இப்போது நாம் அனுபவிக்கிறோம்.

மோடி அரசின் திட்டமிட்ட கொள்ளை என்பதற்கு இன்னொரு ஆதாரம்:
இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் 2.5 லட்சத்திற்கு மேல் கையில் பணம் வைத்திருந்தால் அது கறுப்பு பணம் என்பதை எல்லா மக்களுக்கும்
இந்த அரசு கொண்டு சேர்த்ததா? சரியான விளம்பரங்கள் செய்தார்களா? நம் நாட்டில் 25% படிப்பறிவில்லாதவர்கள் என்பது மோடி அரசுக்கு தெரியாதா?

இப்போது திடிரென்று 50 சதவீதம் வரி என்று சொல்கிறார்கள். மீதி தொகையில் 50% பணத்தை 4 வருடத்திற்கு
தர முடியாது என்று சொல்கிறார்கள். பாமரனின் வயிற்றில் அடிக்கும் செயல்.

தொழிலதிபர்களின் வராகடனை வசூலிக்க நாதி இல்லாத அரசு, எங்களிடம் பணம் திருடுவது கண்டிக்கத்தகது.
திரும்பவும் தொழிலதிபர்களுக்கு கடனாய் வாரி இறைப்பார்கள்.
தேசபக்தி, நாட்டு நலன் என்று கூறி திட்டமிட்ட கொள்ளையில் ஈடுபடுகிறார் மோடி.

ஒரு சின்ன சட்ட திருத்தம் செய்ய மனம் இல்லாமல் லோக்பாலை 2.5 வருடங்களாக கிடப்பில் போட்டு இருக்கும் மோடி அரசு கறுப்பு,
இந்த மசோதாவை அவசர அவசரமாய் இயற்றுகிறதே?
இந்த அரசு யாருக்காக செயல்படுகிறது என்ற சந்தேகம் இன்னும் வலுவாகிறது?

இது நிச்சயம் கண்டிக்க தக்க செயல். மக்கள் வீதியில் இறங்கி போராடவில்லை என்றால், மக்கள் எல்லாரும் அரசுக்கு அடிமைகள்
என்று கூட இந்த மோடி அரசு சட்டம் கொண்டு வர தயங்காது.

நான் அடிமையாய் இருக்க விரும்பவில்லை. நீங்க எப்படி?

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot