Sunday, November 20, 2016

மோடிக்கு ரஜினி ஆதரவு - பின்னணி என்ன?


a) நவம்பர் 8ந்தேதி இரவு மோடி 500, 1000 ரூபாய் செல்லாது என்றும் புது நோட்டுகளை பெற்றுக் கொள்ள
வேண்டும் என்று தெரிவித்தார்.

b) செய்தி வெளியான இரண்டு மணி நேரத்தில் டிவிட்டரில் ரஜினி ஒரு தகவலை வெளியிடுகிறார்.
Hats off @narendramodi ji. New india is born #JaiHind

c) பொருளாதார நிபுணர்களுக்கு கூட இந்த திட்டத்தை அலசி ஆராய்ந்து இது கறுப்பு பணத்தையும், கள்ள நோட்டுகளையும்
ஒழிக்குமா என்று அறிந்து கொள்ள நேரம் தேவைப்பட்டது. ஆனால் ரஜின் இரண்டே மணி நேரத்தில் ஏன் பாராட்டு
தெரிவித்தார் என்பதை அவர் ரசிகர்கள் ஆராய மாட்டார்கள். நடுநிலையாய் பார்க்கும்
நாம் தான் ஆராய வேண்டும்.

d) மோடியின் திட்டம் பல மாதங்களுக்கு முன்னரே அரசியல்வாதிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் தெரிந்திருந்தது.
அவர்களின் பணத்தை நிலமாகவோ, தங்கமாகவோ, வெளிநாட்டு பணமாகவோ, வெளிநாட்டு வங்கியில் முதலீடாகவோ செய்து விட்டார்கள்.
அது இன்னொரு வீடியோவில் சொல்லியிருந்தேன். லிங்க் description இல் போடுகிறேன்.

e)இந்த விவரம் ரஜினி அவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏன் மோடிக்கு ரஜினி மீது பாசம் என்று கேட்கலாம்?
   ஏனென்றால், பல மாதங்களாகவே ரஜினியை பிஜேபியில் சேர்க்க வேண்டும் என்று மோடி தீவிர முயற்சி செய்கிறார்
  அதற்காக அவர் பல காரியங்களை செய்து வருகிறார்.
   ஆகஸ்ட் மாதம் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்க பட்டார்.
   செப்டமர் மாதம் - சவுந்தர்யா ரஜினிகாந்த் விலங்குகள் நல வாரிய தூதராக நியமிக்க பட்டார்.
                அதே மாதம், லதா ரஜினிகாந்தை கவர்னராக்க பாரதீய ஜனதா முயற்சி செய்வதாக செய்திகள் வந்தது.

  இப்போதும் தமிழகத்திற்கு பொறுப்பு கவர்னராக தான் வித்யாசாகர் ராவ் செயல்படுகிறார். அதாவது தற்காலிக கவர்னராக செயல்படுகிறார்.
  பிஜேபியில், பல தலைவர்கள் கவர்னர் பதவிக்கு காத்துக் கொண்டு இருக்கும் போது, ஏன் தமிழகத்திற்கு இன்னும் கவர்னரை நியமிக்கவில்லை
  என்ற கேள்வியும் எழுகிறது.

f) இந்த காரணத்தினால் தான் ரஜினிக்கு முன்னரே ரூபாய் நோட்டு மாற்றப்படும் திட்டமும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
   அவர் பெரும்பாலான கறுப்பு பணத்தை நிலமாகவோ, வீடுகளாகவோ, வெளிநாட்டு வங்கி கணக்கிலோ தான் வைத்து இருக்கிறார்.
  எனினும் அவர் ரொக்கமாகவும் பல கோடிகள் வைத்திருக்க கூடும். அதை மோடி அவர்கள் காப்பாற்றியிருக்கிறார்.

g) ரஜினிக்கு சில கேள்விகள்.
  a)காவிரி விவகாரத்தில் அமைதியாக இருந்தீர்கள், பரவாயில்லை. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது
    என்று தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்த மோடிக்கு ஒரு கண்டனம் தெரிவித்தீர்களா. இல்லை வாரியம் அமைக்க வேண்டும்
   என்று வேண்டுகோளாவது வைத்தீர்களா? இல்லையே
  b) மோடியின் திட்டத்திற்கு இரண்டே மணி நேரத்தில் பாராட்டு தெரிவித்ததால், உங்களிடம் கறுப்பு பணம் இல்லை என்று நாங்கள்
   நம்ப வேண்டுமா. சமீபத்தில் வந்த கபாலி படத்தில் கூட, வெள்ளையாய் நீங்கள் எவ்வளவு வாங்குனீர்கள், கறுப்பாய் எவ்வளவு வாங்குனீர்கள்
  என்பதை சினிமா உலகமே அறியுமே!
  c) கபாலி படம் ரீலிசாகும் போது, 120 ரூபாய் தான் அதிகப்பட்ச டிக்கெட் கட்டணம் என்று விதிமுறையை குப்பையில் போட்டு விட்டு,
   1000, 2000 ரூபாய் என்று வாங்குகினார்களே, அது கறுப்பு பணம் இல்லையா. அதை கேள்வி கேட்டீர்களா. உங்களின் நேர்மை அன்று எங்கு போனது?
 
உங்களை போன்ற செல்வந்தர்கள் எல்லா கறுப்பு பணத்தையும் பத்திரப்படுத்துவிட்டீர்கள். அதனால் பாராட்டுகிறீர்கள்.
பாமர்கள் உழைத்து சம்பாதித்து பல வருடங்களாக வீட்டில் சேமித்த காசை எல்லாம் மோடி இன்று கறுப்பு பணம் என்று கூறி பறிக்கிறார்.
இதனால் எத்தனையோ பேர் திருமணத்திற்கு சேர்த்து வைத்த பணத்தை இழக்கிறார்கள்.
வீடு வாங்கலாம் என்று பல வருட கனவு வீணாய் போனதே என்று பல பேர் வருந்துகிறார்கள்.
இப்படி பாமர மக்களின் வாழ்வாதரத்தையே சூரையாடும் இந்த வீணாய் போன மோடியின் திட்டத்திற்கு நீங்கள் பாராட்டு தெரிவிக்கிறீர்கள்.

”கடவுள் இருக்கான் சார்” என்று சொல்லி விடை பெறுகிறேன்.
இதை கேட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot