Friday, November 25, 2016

துக்ளக் மன்னனின் மறுபிறவியா மோடி?


முகமது பின் துக்ளக் என்பவர் 14ஆம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட சுலதான் மன்னர்.
அவர் சரியாக திட்டமிடாமல் கொண்டு வந்த மூன்று திட்டங்கள் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தின என்று சுருக்கமாக பார்க்கலாம்.

1)
இவரது ஆட்சியில் முதலில் டெல்லி தான் தலைநகராக இருந்தது.
அதை மாற்றிவிட்டு புதிய தலைநகராக தெள லதாபாத் என்ற பகுதியை அறிவித்தார்.
அந்த பகுதி இன்றைய மகாராஷ்டிராவில் இருக்கிறது.

எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாத இந்த முடிவால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளானார்கள்.
அது துக்ளக் மன்னருக்கு சர்வாதிகாரி என்ற பெயரை பெற்றுத் தந்தது.
அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், இது போன்ற பல திட்டங்களை திட்டமிடல்
இன்றி அமல்படுத்தி மக்களை பெரும் சங்கடத்துக்கு உள்ளாக்கினார்.

2)
அவரின் இன்னொரு முடிவு வரலாற்று பேரழிவாக கருதப்படுகிறது.
பழைய காலத்தில் முன்னோர்கள் பண்டமாற்று முறையையே பயன்படுத்தினார்கள்.
அதன் பிற்கு நாணயங்களை பயன்படுத்த தொடங்கினார்கள். நாணயங்கள் பெரும்பாலும் தங்கம், வெள்ளி போன்ற
விலை உயர்ந்த உலோகங்களால் செய்யப்பட்டவையாகவே இருந்தன.

அதன் பின்னர் ஏழாம் நூற்றாண்டில், புதிய நவீன காகிதப் பணத்தை சீனா அறிமுகம் செய்தது.
அதன்படி தங்கம், வெள்ளி, பட்டு போன்றவற்றுக்கு ஈடாக இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று
கூறப்பட்டது.

சீனாவோட இந்த புதிய பணப்பரிமாற்ற முறையை மேலைநாடுகள் பின்பற்றுவதற்கு முன்னரே இந்தியாவில்
செயல்படுத்தியது துக்ளக் மன்னன் தான்.

துக்ளக் மன்னன் 1329ஆம் ஆண்டு தெளலதாபாத்தை தலைநகரமாக அறிவித்த பின்னர்,
பண அமைப்பு முறையை அறிமுகப்படுத்தினார்.
செம்பு மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட இந்த நாணயங்களை குறிப்பிட்ட அளவு தங்கம் மற்றும் வெள்ளிக்கு
மாற்றிக் கொள்ளலாம் என்று விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.
இந்த நாணயங்களுக்கு டாங்கா என்று பெயரிட்டார்கள்.

சுல்தானிய போர் நடவடிக்கைகளுக்கு இந்த வகை நாணயங்கள் உதவியாக இருக்கும்
என்ற காரணத்தினால் தான் இதை உருவாக்கினார்கள்.
ஆனால் அது, இந்திய துணைக்கண்டத்தை மிகப்பெரும் ஆபத்தில் ஆழ்த்தியது

துக்ளக் மன்னன் தனது ஆட்சியில் இந்த புதிய பணப்பரிமாற்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது,
மக்களுக்கு சிறிதும் அறிமுகமில்லாத திட்டமாக இருண்டது.
அதை எதிர்கொள்வதற்கு பல சிரமங்களுக்கு உள்ளானார்கள்.

அப்போதுவரை இந்த புதிய திட்டத்தைச் சீனாவுக்கு வெளியே ஒரே ஒரு மன்னர் மட்டுமே நடைமுறைப்படுத்தியிருந்தார்.
13ஆம் நூற்றாண்டின் பாரசீக மன்னராக இருந்த கேய்கது (Gaykhatu) என்பவர்தான் அவர்.
அவர், இந்தத் திட்டத்தை அமல்படுத்திய பின்னர் மக்கள் பட்ட துன்பங்களை பார்த்து, அறிமுகப்படுத்திய எட்டு நாட்களுக்குள் அவர் அதை
திரும்பப் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர், மிகச்சில நாட்களுக்குள்ளாகவே அவர் படுகொலை செய்யப்பட்டது வேறு கதை.

இப்படியான சிக்கல்கள் நடைமுறைப்படுத்துவதில் சிரமங்கள் கொண்ட இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில்
வெற்றி பெற்ற துக்ளக் மன்னர் அதை செயல்படுத்துவதில் தோல்வியைச் சந்தித்தார்.
காரணம் என்னவெனில், துக்ளக் வெளியிட்ட நாணயம் போலவே போலியாக நாணயங்கள்
தயாரிக்கப்பட்டு வெளியாயின்.

இதன் காரணமாக துக்ளக் அரசு, ரூபாய் நோட்டுத் தயாரிப்பில் புதிய உத்திகளை கையாள
தொடங்கியது. அதன்படி போலி நாணத் தயாரிப்பை தடுப்பதற்காக, பிரேத்யகமான பல
அடையாளங்களை கொண்ட நாணயங்கள் அச்சிட முடிவு செய்தார்கள்.

எனினும், மோசமான திட்டமிடல் காரணமாக புதிய நாணயங்களில் எந்த விதமான
பாதுகாப்பு அம்சங்களையும் சேர்க்க நேரமில்லாமல் போனது.

போலிகல் தயாரிக்க முடியாதளவுக்கு பாதுகாப்பான வகையில் நாணயங்கள் இல்லாததால்,
நிறைய போலி நாணயங்கள் உருவாக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது.
அது பணவீக்கத்துக்கு வழிவகுத்தது. அதன் பின்னர், டாங்கா எனப்படும்
துக்ளக் அறிமுகப்படுத்திய நாணயம் மதிப்பிழந்து போனது.

3) அதிரடி அறிவிப்பு

இதனால், நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதை சரி செய்ய
துக்ளக் தலைமையிலான அரசு மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

டாங்கா நாணயங்களை வைத்திருப்பவர்கள் அவரது நாணயங்களை கொடுத்து விட்டு
அதற்கு நிகரான தங்கம் மற்றும் வெள்ளியை பெற்றுக் கொள்ளலாம் என்பது தான் அந்த திட்டம்.
அதிலும் ஒரு குளருபடி நடந்தது. ஏராளமான போலி நாணயங்கள் புழங்கியதால், இந்த பரிமாற்றத்தை
நிறைவேற்ற பல ஆண்டுகள் ஆனது. அந்த நாணய குளறுபடிகள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு
பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தின.

துக்ளக் மன்னனின் ஆட்சி கவிழ்ந்ததற்கும் அது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
1351இல் துக்ளக் இறந்த பிறகு, அவரது ராஜ்யத்தின் முக்கியப் பகுதிகளான வங்காளம் மற்றும் டெக்கான்
போன்றவை சுல்தானிய அரசிடமிருந்து தங்களை விடுவித்துக் கொண்டார்கள்.

இப்ப புரியுதா மோடி அவர்களை ஏன் துக்ளக் என்று கூறுகிறார்கள் என்று.
சரியாக திட்டமிடாமல் புழக்கத்தில் இருக்கும் 85% பணத்தை செல்லாது என்று அறிவித்தார்.
130 கோடி மக்களும் இன்னலுக்கு உள்ளானார்கள்.

நகரத்தில் இருப்பார்களுக்கு ஒரு சில மாதங்களில் பிரச்சனை முடிந்தாலும், கிராமங்களில் வாழும் 93 கோடி மக்களின் வாழ்வு
எப்போது சரி ஆகும் என்று கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்.

மத்திய அரசு ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.
4000 ரூபாயை கொடுத்து புது நோட்டுகள் பெறலாம் என்றார்கள், பின்னர் 4500 என்றார்கள், பின்னர் 2000 என்றார்கள்.
பின்னர் அதுவும் இல்லை, வங்கியில் மட்டும் தான் டெபாசிட் செய்ய முடியும் என்றார்கள்.

திருமணத்திற்கு 2,50,000 லட்சம் பணம் எடுக்கலாம் என்றார்கள். பின்னர் நிறுத்தினார்கள்.
பின்னர் தொடங்கினார்கள்.

டிசம்பர் 31க்குள் அனைத்து பிரச்சனை முடியும் என்றார்கள். பின்னர் பணம் அச்சடித்து நாடு முழுக்க கொண்டு செல்லும்
பணிகள் சரியாக திட்டமிடாத காரணத்தினால் debit card, credit card, mobile banking
பயன்படுத்துங்கள் என்று சொன்னார்கள்.

சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் மக்களுக்கு கடும் சிரமத்தை கொடுக்கும் மோடி அவர்களை
துக்ளக் என்று சொல்வதில் தவறு ஒன்றும் இல்லையே!

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot