Tuesday, December 13, 2016

சசிகலாவிற்கு செக் வைக்கும் மூன்று பெண்கள்

ராஜாஜி அரங்கில் ஜெயலலிதா உடல் அருகே தனது குடும்பத்தாரை நிற்க வைத்து,
இனிமேல் தமிழ்நாடு தனக்கும் தனது குடும்பத்துக்கும் தான் சொந்தம் என்பதை மறைமுகமாக ஒட்டு மொத்த
இந்தியாவிற்கும் சொல்லினார் ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலா.
உயிர் தோழி என்றால் உயிரை எடுக்க கூட தயங்க மாட்டார்கள் என்று ஒரு புது விளக்கத்தையும் தந்து விட்டார்.

ஜெயலலிதா இறந்து அடுத்த நாளே, தனது அடிமைகளை வைத்து ஊர் முழுக்க தனக்கு
ஆதரவாய் poster அடிக்க வைத்தார் சசிகலா. இந்த நாளைக்கு தான் பல வருடங்களாய் காத்திருந்ததை போல
அவர் செயல்பாடுகள் அமைந்தன.

கட்சியில் பெரிய தலைகள் இவருக்கு விலை போனார்கள். ஜால்ரா அடிக்க தொடங்கினார்கள்.
காலில் விழ தொடங்கினார்கள். வைகோ ஒரு படி மேலேயே போய், அதிமுக அடிமை மாதிரி சசிகலாவை புகழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் தொண்டர்களும், மக்களும் சசிகலாவின் தலைமையை விரும்பவில்லை.
அதனால் தான், ஒரு செண்டிமெண்ட் டிராமா போடுவதற்காக, ஜெயலலிதா சமாதிக்கு சென்று தேம்பி தேம்பி அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
செண்டிமெண்ட் மூலம், தன் மீது இருக்கும் bad image ஐ மாற்றி விடலாம் என்று சசிகலா நம்புகிறார்.

ஆனால், ஒருவருக்கு எல்லாமே அவர் திட்டமிட்டபடியே நடந்து, வாழ்க்கை எளிதாக அமைந்து விடுமா?
சசிகலா சற்றும் எதிர்பாராத விதமாய் மூன்று பெண்களிடம் இருந்து அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அந்த மூன்று பெண்களை இவரால் சமாளிக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்.
யார் என்று பார்ப்போம்.

1) கவுதமி:
------
எந்த அரசியல் கட்சியும் மரணத்தை பற்றி சந்தேகம் எழுப்பவில்லை.
ஊடகங்களும் அதை பற்றி எல்லாம் பேசாமல், சசிகலாவை எப்படி பொதுச்செயலாளர்
ஆக்கலாம் என்பதில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்கள்.
சமூக வலைத்தளங்களில் மட்டுமே இந்த மரணத்தை பற்றிய கேள்விகள்,
சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.

அதை பொய் என்று நிருபீக்கவும், மரணத்தில் எந்த மர்மமும் இல்லை
என்பதை திணிக்க தான் ஊடகங்கள் அதை பற்றி பேசினார்கள்.

இந்த நிலையில் இரண்டு சினிமா பிரபலங்கள் இந்த மரணத்தில் சந்தேகம் இருக்கிறது
என்று சொன்னார்கள். ஒன்று மன்சூர் அலிகான். இன்னொருவர் கவுதமி.
மன்சூர் அலிகான் தன் மனதில் பட்டதை எப்போதும் யாருக்கும் பயப்படாமல்
பேசக் கூடியவர். அதனால், அவருக்கு பின் யாரும் இருப்பதாக தெரியவில்லை.

ஆனால், கவுதமி அப்படி இல்லை. அவரை பின்னால் இருந்து பேச வைப்பது
பிஜேபி. கவுதமி ஜெ மரணத்தை பற்றி சில கேள்விகள் இருக்கிறது, அதற்கு
பதில் தெரிய வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரதமர்
இன்னும் பதில் அளிக்கவில்லை.

சசிகலா எப்பவும், தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக பிஜேபி செய்ததது தான் இந்த
ஏற்பாடு. சசிகலா மத்திய அரசிடம் எதற்காவது ஒத்து போகவில்லை என்றால்,
மறுபடியும் கவுதமியை பேச வைப்பார்கள். முதல் கடிதத்தில் கேள்விகள் மட்டுமே
கேட்டார். இரண்டாவது கடிதத்தில் சந்தேகம் இருக்கிறது என்று அடுத்த கட்டத்துக்கு
நகர்வார்.

சசிகலாவின் ஜால்ராவான தந்தி டிவி, கவுதமியை அழைத்து பேசிய நேர்காணலை நீங்கள் பார்த்தீர்கள் என்றால்
ஒன்று புரிந்திருக்கும். நேர்கானலுக்கு அழைத்து விட்டு அவரை முழுமையாய் பேசவே அனுமதிக்கவில்லை.
மோடிக்கு எழுதிய கடிதம் பற்றி பேசலாம் என்று கூறிவிட்டு, தந்தி டிவி கவுதமியின் சொந்த வாழ்க்கை பற்றியெல்லாம் கேள்வி எழுப்பினார்கள்.
ஏன்? உங்க வாழ்க்கையே சரி இல்ல, நீங்க எப்படி ஜெயலலிதா மரணம் பற்றி கேள்வி எழுப்பலாம் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் திணிக்க முயற்சித்தார்கள்.

2) சசிகலா புஷ்பா:
----------
திருச்சி சிவாவை அறைந்து விட்ட காரணத்தால், கட்சி தலைமை இவரை ராஜ்ய சபா எம்.பி பதவியை
ராஜினாமா செய்ய சொன்னார்கள். அதற்கு மறுத்து விட்டார். பின்னர் பாராளுமன்றத்தில், ஜெயலலிதா
தனை அறைந்து விட்டார் என்றும் பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பே இல்லை என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது, ஜெயலலிதாவின் சிகிச்சையில் மர்மம் இருப்பதாக தெரிவித்தார்.
ஜெயலலிதா தான் கையெழுத்து இடுகிறாரா என்று தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும் என்று இடைத் தேர்தல்
வேட்பு மனு தாக்கலுக்கு முன்னரே சொல்லியிருந்தார். இவருக்கு பயந்தே, ஜெயலலிதாவின் விரல் ரேகையை
சசிகலா பதிவு செய்தார் என்றும் சொல்கிறார்கள்.

அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு,
இவர் டில்லியில் தான் தங்கி இருக்கிறார். இவர் மீது தமிழக அரசு நிறைய வழக்குகளை போட்டது.
இதில் இருந்து இவரை காக்க பிஜேபியின் சுப்ரமணியசுவாமி தான் உதவி செய்கிறார்.
அதிமுகவில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களை இவர் மூலம் தன் கட்டுப்பாட்டில் பிஜேபி வைத்து இருக்கிறது.
சசிகலா பிஜேபியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டால், சசிகலா புஷ்பா தலைமையில் அதிமுக அதிருப்தி
அணி வெளியில் வரும். அதிமுக ஆட்சி கலைக்கப்படும் என்று பிஜேபி மிரட்டுவார்கள்.

3) ஜெ அண்ணன் மகள் தீபா:
------------------
பல வருடஙகளாக ஜெவை தீபா நெருங்க விடாமல் சசிகலா தடுத்து இருக்கிறார்.
ஜெ மருத்துவமனையில் இருக்கும் போதும், பல முறை அங்கு வந்து தன் அத்தையை சந்திக்க முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஜெயலலிதா இறந்த பிறகு, அவருடைய உடல் போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அத்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்தலாம் என்று சென்றிருக்கிறார். அங்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
கடைசியாக ராஜாஜி அரங்கில் அத்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு சென்றிருக்கிறார்.

இவரின் பேச்சை பார்த்த பின் இவர் மீது ஒரு அனுதாப அலை வீசுகிறது.
இவர் தான் அதிமுகவிற்கு தலைமை ஏற்க வேண்டும் என்று நிறைய பேர் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
அடிதட்டு ஏழை மக்களுக்கு கூட இவர் யார் என்று தெரிந்திருக்கிறது. இவர் மீது ஒரு இரக்கம் வந்திருக்கிறது.

இவருக்கு பின்னால் இருப்பதும் பிஜேபி தான்.
இது வரை அவர் மென்மையாக தான் பேசுகிறார். சசிகலாவை அவ்வளவாக விமர்சிக்க வில்லை.
ஆனால், சசிகலா கட்டுப்பாட்டை மீறி சென்றால், தீபா சசிகலாவை நேரடியாக தாக்கி பேச தொடங்குவார்.
சசிகலாவை பற்றி தீபா விமர்சித்தால் உண்மை என்று மக்கள் நம்புவார்கள்.
அதனால், தான் தீபா பிஜேபிக்கு ஒரு முக்கிய ஆயுதமாக இருக்கிறார்.

இந்த தாக்குதல்களுக்கு சசிகலா தாக்குபிடிக்க மாட்டார் என்று தான் நான் நினைக்கிறேன்.
செய்த பாவத்திற்கு பலனை அனுபவிக்க வேண்டாமா?
பிஜேபியிடம் சரணாகதி அடைவதை தவிர சசிகலாவிற்கு வேறு வழி இருப்பதாய் தெரியவில்லை.
சசிகலா கட்சிக்கு தலைவராக செயல்படுவார்.
ஆனால் ஆட்சி பிஜேபியின் விருப்பப்படியே நடக்கும்.

மொத்தத்தில் மூன்று பெண்கள் சசிகலாவின் திட்டங்களை எல்லாம் தவிடு பொடி ஆக்குகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot