Wednesday, December 7, 2016

ஆப்பரேஷன் சசிகலா ஆரம்பம்

டிசம்பர் 2011க்கு பழி தீர்த்தாரா சசிகலா

ஜெயலலிதா இறந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை.

”ஒரு வாரத்திற்கு முன் வரை, அம்மா நல்லாயிருக்காங்க, சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுவாங்க என்று தினமும் பேசிய சி.ஆர்.சரஸ்வதி,
இப்போது என்ன சொல்கிறார் தெரியுமா “அம்மா தேர்தல்களில் வெற்றி அடைய முக்கிய காரணம் சின்ன அம்மா தான்”

இன்னொரு அதிமுக பிரமுகர் “எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் அதிமுக உடைந்தது.
இரட்டை சிலை சின்னம் முடங்கியது. அதை திரும்ப பெற்றதில் சின்ன அம்மா ஆற்றிய பங்கு மிக பெரியது என்கிறார்”.

பன்னீர்செல்வம் - அதிமுக-வில் உருவாகியுள்ள வெற்றிடத்தை நிறைவு செய்ய சின்னமா பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா இருக்கும் போது, சசிகலா பெயரை இவர்கள் பொதுவெளியில் சொன்னார்களா?
இப்போது எப்படி இந்த திடீர் மாற்றம்?

ஜெயலலிதா இறந்த ஒன்றரை மணி நேரத்திற்குள் பன்னீர்செல்வம் முதலமைச்சராய் பதவியேற்கிறார்.
ஒரு வாரர்திற்குள் அதிமுகவின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சசிகலாவை தலைமை ஏற்க
வாருங்கள் என்று கெஞ்சுகிறார்கள். ஊர் முழுக்க சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டுகிறார்கள்.
நாளிதழ்களில் முழு பக்கம் விளம்பரம் கொடுக்கிறார்கள்.

ஜெயலலிதா மறைந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை.
அதற்குள், எந்த குழப்பமும் இல்லாமல் இவ்வளவு எளிதாக அதிகாரம் எப்படி கைமாறியது?

“அம்மா இறந்ததது கூட அதிர்ச்சி இல்லைடா. நீங்க அடுத்த அம்மாவை அதுக்குள்ள தயார் பண்ணீட்டிங்களே, அது தான் டா அதிர்ச்சி”
என்று ஒருவர் டிவிட்டரில் போட்டிருந்தார்.

ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, இறுதி அஞ்சலி, ஊர்வலம் மற்றும் தகனம் செய்யும் காட்சிகளை நேரடியாக ஒளிப்பரப்பிய தந்தி டிவி,
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சசிகலாவை புகழ்ந்து பேசினார்களே.
அன்று தொடங்கிய ஜால்ரா நிற்காமல் நடநது கொண்டிருக்கிறதே, எப்படி அது சாத்தியமானது?

தினமலர், தினமனி, புதிய தலைமுறை மற்றும் பல ஊடகங்கள் சசிகலாவிற்கு அவ்வளவு சீக்கிரம்
ஜால்ரா அடிக்க தொடங்கியது எப்படி சாத்தியமானது?

ஒன்று நிச்சயமாய் தெரிகிறது. ஜெயலிதா 5ந் தேதி இறக்கவில்லை. அதற்கு முன்னராகவே இறந்து விட்டிருக்கிறார்.
மேற்சொன்ன அனைத்தையும் செய்ய சசிகலா மற்றும் குடும்பத்திற்கு நேரம் தேவைப்பட்டது. அதை பற்றி பார்ப்பதற்கு முன் இன்னொரு தகவல்.
டிசம்பரில் ஜெயலலிதா மரணம் என்பது தற்செயலா அல்லது திட்டமிட்ட செயலா?
அப்படி டிசம்பருக்கும் சசிகலாவிற்கும் என்ன சம்பந்தம்?

டிசம்பர் 2011ஆம் ஆண்டு, தனக்கு எதிராக சதி செய்கிறார்கள், தனக்கு slow poison கொடுத்து கொல்ல பார்க்கிறார்கள்
என்று சசிகலாவையும், குடும்பத்தையும் போயஸ் கார்டனை விட்டே துரத்தினார் ஜெயலலிதா.
அதற்கு பழி தீர்க்க இந்த டிசம்பர் மாதம் ஜெயலலிதாவை சசிகலா திட்டமிட்டு போயஸ் கார்டனை விட்டு துரத்தினாரா
என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

சில மாதங்களுக்கு பிறகு சசிகலா மன்னிப்பு கேட்டு விட்டு, போயஸ் கார்டன் திரும்பினார்.
ஆனால், அவரின் குடும்பத்தினர் சில பேரை ஜெயலலிதா அனுமதிக்கவில்லை.
அதற்கு பழி தீர்க்க தான், ராஜாஜி அரங்கில் ஜெயலலிதா உடல் அருகே, தன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் நிறுத்தி வைத்தாரா சசிகலா
என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஜெயலலிதாவின் மரண செய்தியை அறிவிப்பதற்கு முன்னர் எதனால் சசிகலாவிற்கு நேரம் தேவைப்பட்டது:
1) பணம், சொத்துகளை பத்திரப்படுத்தனும்.
2) கட்சியின் மூத்த பிரமுகர்களை விலைக்கு வாங்கி தன் தலைமையை ஏற்றுக் கொள்ள வைக்கனும்.
3) ஊடகங்கள் எவ்வாறு தன் புகழை பரப்ப வேண்டும் என்ற திட்டம் வகுக்கனும்.
4) எதிர் கட்சிகளின் வாயை அடைக்கனும். இன்று வரை பாமக மட்டும் தான் சசிகலா பொதுச்செயலாளர் ஆவதை எதிர்க்கிறது.
  மற்ற எந்த கட்சியும் எதிர்க்கவில்லை.
5) ஜெயலலிதா உடல்நிலையில் மெல்ல மெல்ல முன்னேற்றம் என்று காட்டி, பின் பரிபூரண குணம் அடைந்து விட்டார் என்று சொல்லி,
  பின்னர் திடிரென்று மாரடைப்பால் இறந்து விட்டார் என்று சொல்லனுன்.
இதற்கு தான் சசிகலாவிற்கு நேரம் தேவைப்பட்டிருக்கும்.

சசிகலாவின் எதிர்கால திட்டம் என்ன:
---------------------------
1) சசிகலா தன்னை மக்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும். வெகு விரைவில் தந்தி டிவியிலோ அல்லது ஜெயா டிவியிலோ
  அவருடைய நேர்காணல் வரும். பார்க்கும் மக்களை செண்டிமண்டால் ஈர்க்கும் வகையில் அந்த நேர்காணலை உருவாக்குவார்கள்.
  ஜெயலலிதா தன்னுடைய மரண தருவாயில் இருக்கும் போது, “நீ தான் இந்த கட்சியை பார்த்துக் கொள்ளனும்.
 நீ தான் என்னுடைய அரசியல் வாரிசு” என்று கூறியதாக சசிகலா கண்ணீர் மல்க தெரிவிப்பார்.
 “எனக்கு கட்சி, பதவி எல்லாம் விருப்பம் இல்லை. அம்மா ஆணையிட்டார்கள், கட்சிக்காரர்களும் வற்புறுத்துகிறார்கள், அதனால்
  தான் நான் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றேன்.

2) போயஸ் கார்டனில் பொது மக்களை அனுமதித்து, அவர்களுக்கு சசிகலா ஆறுதல் சொன்னார்.
  இது வெறும் ஆரம்பம் தான். ஸ்டாலினின், “நமக்கு நாமே” திட்டத்தை போல, சசிகலாவும்
  தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து, மக்களின் ஆதரவை பெற முயற்சி செய்வார்.
  வழக்கம் போல் பணம் கொடுத்து பெற்ற உள்ளாட்சி தேர்தலின் வெற்றியை காட்டி, தனக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்று தன் அடிமை ஊடகங்களை வைத்து
  மக்களை நம்ப வைப்பார்.

3) ஆர்.கே நகர் இடைத்தேர்த்தலில் போட்டியிடுவார்.
  மக்களின் ஆதரவு கிடைத்தால், முதலமைச்சராய் பொறுப்பேற்பார்.

4) ஏற்கனவே சசிகலாவின் குடும்பத்தினர் தங்களுக்குள் இலாக்காகளை பிரித்து வைத்துக் கொண்டு நிழல் மந்திரிகளாய்
  செயல்பட்டு வருகிறார்கள். அது தொடரும். அவர்களில் ஒரு சிலர் உள்ளாட்சி தேர்தல்களில் மேயர் பதவிக்கு போட்டியிடுவார்கள்.
  சில பேர் ராஜ்ய சபா எம்.பி ஆவார்கள்.

ஏற்கனவே திமுக குடும்ப ஆட்சியின் அட்டகாசம் தாங்க முடியாமல், மக்கள் அதிமுகவை தேர்ந்தெடுத்தார்கள்.
அங்கும் இனிமே குடும்ப ஆட்சி தான்.

நம் எண்ணங்கள் மிகவும் வலிமையானவை.
தமிழக மக்கள் இந்த மன்னார்குடி மாபியாவிடம் இருந்து  தப்பிக்கனும்.
அனைவரின் வாழ்க்கையும் மேன்பட வேண்டும். என்று நாம் எல்லாரும் வேண்டிக் கொள்வோம்.
அனைவரும் ஒன்று நடக்க வேண்டும் என்று நினைக்கும் போது அது நிச்சயம் நடக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot