Wednesday, December 7, 2016

திட்டமிட்ட கொலை?

தந்தி டிவியின் நாடகம் அம்பலம்

வெள்ளிக்கிழமை ஆயுத எழுத்து நிகழ்ச்சி பார்த்தீங்களா?
தந்தி டிவி சசிகலாவிற்கு எப்படி ஜால்ரா அடித்தார்கள் என்று பார்க்கலாம்.

1) ஹரிஹரன் சொல்றார், ஜெயலலிதாவின் மரணம் பற்றிய மர்மங்களை எதிர் கட்சிகள் எழுப்பவில்லை.
  ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் எழுப்புகிறார்கள் என்று நெக்கலாக கூறுகிறார்.

 என் மனதில் தோன்றிய கருத்து:
  பாமரர்கள் கேள்வி கேட்டா
  இவங்களுக்கு எல்லாம் எப்படி எரியுது பாத்தீங்களா? மக்களே, கேக்கனும், நாம தொடர்ந்து கேக்கனும்.
  அப்ப தான் இவங்களோட சாயம் வெளுக்கும். இவங்க மட்டும் தான் ஊடகங்கள் என்ற நிலை மாறி,
  நாம் எல்லாரும் செய்திகளை அலசி ஆராய்ந்து பரப்ப வேண்டிய அவசியம் இருக்கிறது. அபோது தான்
  இந்த ஊடகங்களின் விபச்சார வேலைகள் அழியும்.

  ஹரி சார், ஜெயலலிதா மரணம் ஆயிட்டாங்கனு வதந்தி கிளப்பினீங்களே, உங்க டிவியில் மன்னிப்பு கேட்டிங்களா?
  டிவியில் வதந்தி கிளப்பிட்டு, உங்க அண்ணன் பாண்டே பேஸ்புக்கில் மன்னிப்பு கேக்கறார். என்னங்க நியாயம் இது?

இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொண்டார்கள்?
2) மருத்துவர், மூத்த பத்திரிக்கையாளர், அதிமுக பிரமுகர், மதிமுகவின் கட்சிகாரர் ஆகிய 4 பேர் கலந்து கொள்கிறார்கள்.
  பெரும்பாலும், ஜெயலலிதா மரணத்தின் மர்மங்களை பற்றி தான் இங்கு விவாதித்தார்கள்.
  ஆனால், இவர்கள் எல்லாருமே ஒன்று சேர்ந்து, மர்மம் ஏதும் இல்லை என்று தான் பேசினார்கள்.
  மறுபக்கத்தின் கருத்துகளை எடுத்து வைக்க விவாதத்தில் ஒருவர் கூட இல்லை.

3) முதலில், ஜெயலலிதாவின் கன்னத்தில் நான்கு துளைகள் இருக்கும் புகைப்படத்தை காட்டி இது சமூகவலைத்தளங்களில் பல சர்ச்சை
  கருத்துகளை எழுப்புகிறது. இது என்ன என்று மருத்துவரை கேட்கிறார்?
  அவர் எம்பாமிங் பற்றி விளக்குகிறார். ஒரு நாள், இரண்டு நாள் உடல் கெடாமல் பாதுகாக்கவும், முகம் பொலிவுடன் இருக்கவும் தான் இதை
  செய்வார்கள். எல்லாரும் செய்வது தான். இதில் சந்தேகிக்கும் வகையில் எந்த மர்மமும் இல்லை.

குறுக்கிட்டு ஹரி ஒரு கருத்தை சொல்றார், “என் நண்பரின் தந்தை சென்னையில் உயிரழந்தார். எம்பாமிங் செய்து தான் உடலை
5 மணி நேர விமான பயணத்தில் சிங்கப்பூர் கொண்டு சென்றார்கள்”

ஹரியின் அடுத்த கேள்வி:
உடல் இருக்கும் பெட்டியை மூடவில்லையே, அது ஏன்? அதற்கும் எம்பாமிங்கிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று கேட்கிறார்.
எம்பாமிங் செய்ததால் தான் பெட்டியை மூடாமல் வைத்திருந்தார்கள் என்று மருத்துவர் சொல்கிறார்.

இதை கேட்டவுடன் என் மனதில் எழுந்த் கேள்வி - எம்பாமிங் ஏற்கனவே பல நாட்களாய் செய்த காரணத்தினால், பெட்டி திறந்து வைத்தார்களா?
அல்லது பெட்டியை திறந்து வைக்க வேண்டும் என்பதால் என்பாமிங்க் செய்தார்களா?

மருத்துவர் பேசியவுடன், ஹரி சொல்கிறார், “
உள் அரங்கத்தில் கூட இல்லை, வெளி அரங்கத்தில் தான் உடலை வைத்திருந்தார்கள்.
வெயில் அதிகம், பெட்டியில் இல்லாம் வெளியில் வைத்திருக்கனும் என்ற சூழ்நிலையில்
இது தேவைப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார். ”

இதை தொடர்ந்து இரண்டு முறை கூறினார்.

என்னுடைய கேள்வி
1) இதுவரை இறந்த பிரபலங்கள் எல்லாரையும் பெட்டியில் தானே வைத்தார்கள். உங்களை யார் பெட்டி இல்லாமல் வெளியில் வைக்க சொன்னார்கள்
2) மருத்துவர் பேசியவுடன், ஹரி எவ்வளவு அருமையாய் இதில் மர்மம் இல்லை என்று விவரிக்கிறார்.
  திமுக காரன் கிட்ட, அதிமுக காரன் போல கேள்வி கேட்பார்.
  அதிமுக காரன் கிட்ட, திமுக காரன் போல கேள்வி கேட்பார்.
  மருத்துவரிடம், ஒரு பாமரனாய் கேள்வி கேட்டிருக்கலாமே. ஏன் அப்படி செய்யவில்லை?

4) ஹரியின் அடுத்த கேள்வி மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷ் எம்.சாமி
  “ஏன் 75 நாட்களாய் யாரையும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிகக்வில்லை”
  கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம, இவரும் திரும்ப எம்பாமிங் பத்தி பேசறாரு
  “அமெரிக்காவில் யார் இறந்தாலும், அந்த உடல் எம்பாமிங் செய்யாமல் கொடுக்க மாட்டார்கள்” என்று கூறினார்.
 
 என்னுடைய கேள்வி - ஐயா, நாம எல்லாம் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கோம்.
அமெரிக்காவின் புள்ளி விவரம் நமக்கு எதுக்கு. அமெரிக்காவை உதாரணம் சொல்லிட்டா எல்லாரும் நம்புவாங்கனு
அவர் நெனைச்சிட்டார் போல.

எம்பாமிங் பற்றி சொன்ன பிறகு தான், அவருடைய கேள்விக்கு பதில் சொல்றாரு.
முதல்வருக்கு நொய் தொற்று ஏற்பட்டு விடக் கூடாது என்ற காரணத்தினால் தான், யாரையும் அனுமதிக்கவில்லை.
எய்ம்ஸ் டாக்டர்கள் வந்தார்கள், லண்டன் டாக்டர் வந்து சிகிச்சை அளித்தார். இவர்கள் தமிழக அரசின் மருத்துவர்கள் இல்லை.
உண்மைக்கு புறம்பாக ஏதாவது நடந்திருந்தால் எய்ம்ஸ் டாக்டர்கள் மத்திய அரசுக்கு தெரிவித்திருப்பார்கள்.
லண்டன் டாக்டர் அப்பல்லோவில் வேலை செய்யலையே. ஏதாவது மர்மம் இருந்தால், அவர் எப்படி சிகிச்சை அளித்திருப்பார்.
கையிலை போன் இருந்தா என்னவேனா பேசலா, என்னவேனால் எழுதலாம். ஆனால் அதெல்லாம் உண்மையாய் இருக்க முடியாது என்கிறார்.

என்னுடைய கேள்விகள்:

1) நோய் தொற்று இருந்தாலும், மருத்துவர்கள் என்னென்ன பாதுகாப்பு உபகரணங்களை போட்டு செல்கிறார்களோ,
  அதை யார் வேண்டுமானாலும் போட்டு செல்லாமே. குறைந்த பட்சம் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை அந்த
  ஏற்பாட்டின் மூலம் ஜெயலலிதாவை பார்க்க அனுமதி கொடுத்திருக்கலாமே. தீபா பெண் தானே. அதை ஏன் செய்யவில்லை?
2) மூத்த பத்திரிக்கையாளரே, தந்தி டிவி கிட்ட காசு வாங்கிட்டு  நீங்க பேசறீங்க. சசிகலா கிட்ட காசு வாங்கிட்டு தந்தி டிவி பேசறாங்க.
  அப்படி இருக்கும் போது, லண்டன் டாக்டர்க்கு ஒரு விலை இருக்காதா?
  வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்பதை எல்லாம், இனிமேலும் நாங்கள் நம்புவதாய் இல்லை.
3) இன்னொன்று எய்ம்ஸ் மருத்துவர்கள் பிரச்சனை இருந்திருந்தால், மத்திய அரசிடம் சொல்லியிருப்பார் என்று சொல்கிறார்.
  ஐயா, மத்திய அரசும் தான் இந்த கொலைக்கு உடந்தை என்று ஊரே பேசுகிறது. உங்களுக்கு தெரியாமல் போனதே?


ஹரியின் அடுத்த கேள்வி அதிமுக பிரமுகருக்கு, “சந்தேகத்திற்கும், வதந்திகளூக்கும் இடம் இல்லாமல்
இன்னும் வெளிப்படையாய் நீங்கள் தகவல்களை வெளியிட்டிருக்க்லாமே. புகைப்படமாவது வெளியிட்டு இருக்கலாமே.” என்று கேட்கிறார்.

அவர் பதிலில், ”இந்த சந்தேகங்கள், மர்மங்களை திமுக தான் பரப்பி விடுகிறது.
எம்.ஜி. ஆர் இறந்த பின் கூட, அவருக்கு லிப்ஸ்டிக், தொப்பி எல்லாம் போட்டு தான் காட்டினார்கள்.
ஏனென்றால், அவருக்கு என்று ஒரு இமெஜ் இருக்கிறது. அப்படி தான் அவர்களை காட்டிக் கொள்ள விரும்புவார்கள்.
அதே போல தான ஜெயலலிதாவும் என்று கூறினார்.

வருபவர்களுக்கு நோய் பரவி விட கூடாது என்ற காரணத்தினால் தான், உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
வெளியில் அமைச்சர்கள் இருக்கிறார்கள், சின்ன அம்மா இருந்தார்கள்.
அனைவரும் அவர்களிடத்தில் விவரங்களை தெரிஞ்சிட்டு போனாங்களே என்று கூறினார்.

என்னுடைய கருத்துகள்:
1) எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்த போது, அவர் எப்போதும் அணியும் தொப்பி இல்லாமல் அவருடைய வீடியோவை வெளியிட்டார்கள்.
  கூச்சப்பட்டாமல் குறுக்கிடும் ஹரி, இதை ஏன் குறுக்கிட்டு சொல்லவில்லை?
2) இந்த அதிமுக ஆள் cycle gap la சின்ன ஆமா என்ற பெயரை எப்படி மார்கெட்டிங் பண்ணறார் பாத்தீங்களா?

அடுத்தது மதிமுக பிரமுகர் பேசுகிறார்.
“அண்ணாதுரை உடல்நிலை பற்றி ஒரு வெளிநாட்டு டாக்டர் கூறியதை மக்கள் நம்பினார்கள்.
 எம்.ஜி.ஆர் உடல்நிலை பற்றி ஒரு வெளிநாட்டு டாக்டர் கூறியதை மக்கள் நம்பினார்கள்.
 அதே போல ஜெயலலிதா உடல்நலம் குறித்து லண்டன் டாக்டர் கூறியதை மக்கள் நம்பி தான் ஆக வேண்டும்.


1) வைகோ எப்படிப்பட்டவர் என்பது எல்லாருக்கும் தெரியும்.
  தலைவர் எவ்வழியோ அப்படியே தொண்டர்களும் என்பது போல தான் இவர் பேசினார்.
  நம்பிக்கை தான் வாழ்க்கைனு சொல்றார். நம்பித்தன் ஆக வேண்டும் என்று மிரட்டுகிறார்.

அடுத்த கேள்வி மருத்துவருக்கு.
1) பல நாட்களாக எம்பாமிங் செய்து உடலை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் என்ற சமூக வளைத்தளங்களில் பரவுகிறது.
  உடலை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

அவரின் பதில் “முகத்தை பார்க்கும் போது இறந்து பல நாட்கள் ஆனது போல தெரியவில்லை. இறந்து சில மணி நேரங்கள், அல்லது ஒரு நாள்
தான் ஆகியிருக்கும் என்று தெரிகிறது. எய்ம்ஸ் டாக்டர்கள் வந்திருக்கிறார்கள், லண்டன் டாக்டர் வந்திருக்கிறார். நாம எல்லாதுக்கும் சந்தேகப்பட
கூடாது ”

என்னுடைய கேள்வி, “பிரேத பரிசோதனை செய்யாமல், உடலை கண்ணால் பார்த்தே அவர் எப்போது இறந்திருக்க கூடும்
என்று சொல்லும் ஒரே மருத்துவர் இவர் தான். இதில் இருந்தே இவர் லட்சணத்தை நல்லா புரிஞ்சிக்க முடியுதே”.

அடுத்த கேள்வி மூத்த பத்திரிக்கையாளருக்கு, “எய்ம்ஸ் டாக்டர்களிடம் வேண்டுமானால் மத்திய அரசு தகவல்களை பெற முடியுமா”
பதில்:
“அவர்களிடம் மத்திய அரசு தகவலை பெற முடியும். ஒரு வேளை, எய்ம்ஸ் மருத்துவர்கள் ஏதாவது மர்மங்களை பார்த்திருந்தால்,
அதை நிச்சயமாக மத்திய அரசிடம் தெரிவித்து இருப்பார்கள்.  ஏதாவது தவறு நடந்திருந்த தகவல் மத்திய அரசுக்கு கிடைத்திருந்தால்,
அவர்கள் சும்மா இருப்பார்களா. நல்லா இருந்தாங்க இறந்துட்டாங்களேனு சொல்றாங்க. ஹார்ட் அட்டாக் சொல்லிட்டா வரும்
திடீர்னு தான் வரும்”

கடைசியாக அதிமுக பிரமுகர்,

சின்னம்மா 30 வருடமாய் அம்மாவுடன் இருக்கிறார்கள்.
முதலில் தோழியாக, பிறகு சகோதரியாக, பிறகு ஆலோகசராக இருந்தார்கள்.
அதிகாரிகளிடம் பேசினார்கள், தலைமை செயலரிடம் பேசினார்கள், கோப்புகளையும் பார்த்தார்கள்.

“அம்மா எப்படி ஆட்சி செய்தார்களோ, அது போல சின்ன அம்மாவும், பன்னீர் செல்வமும்
நல்லது செய்வார்கள். சின்னம்மா மட்டும் தான் பொதுச்செயலாராக முடியும். அவர் வந்தால் மட்டுமே கட்சியும்
நன்றாக நடக்கும், ஆட்சியும் நன்றாக இருக்கும்.


அவ்வளவு தான். இதில் முக்கியமா மூன்று விஷயத்தை மக்களிடம் திணிக்க தந்தி டிவி பாடுபட்டாகள்.
1) எம்பாமிங்க் செய்வது சாதாரண ஒன்று தான். அதில் எந்த மர்மமும் இல்லை.
2) எய்ம்ஸ் டாக்டர்கள், லண்டன் டாக்டர்கள் எல்லாம் நேர்மையானவர்கள். உண்மையானவர்கள். காசுக்கு விலை போகாதவர்கள்.
   அவர்கள் இறந்தவருக்கு சிகிச்சி கொடுப்பது சாத்தியமே இல்லை.
3) சசிகலா தான் அடுத்து பொதுசெயலாளர்.

நண்பர்களே, நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம்.
நாம் கேள்விகள் கேட்டதால் தான், மர்மங்களை பற்றி விவாதத்தில் பேசினார்கள்.
அவர்களின் விவாதம் எவ்வள்வு ஒருதலைப்பட்சமாய் இருந்தது என்பதை பார்த்தவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

மக்களே, சாதாரண மக்கள் என்ன செஞ்சிட முடியும்னு நினைக்காதீங்க?
முழு விவாதத்திலும் அடுத்த அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பதை பற்றி தான் விவாதிக்க இருந்தார்கள்.
சாதாரண மக்களாகிய நாம் இந்த விலை போன தந்தி டிவியின் திட்டத்தையே மாற்ற வைத்தோம்.

தொடருட்டும் நம் எல்லாருடைய பணியும்.
No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot