Friday, January 27, 2017

நடிகர் ராகவேந்திரா லாரன்ஸ் அரசின் கைகூலியா?

இளைஞர்கள் அரசியலுக்கு வர கூடாது - நடிகர் லாரன்ஸ்

பசு தோல் போர்த்திய புலி போல நடிகர் லாரன்ஸ்

நடிகர் லாரன்ஸ் அரசின் கைகூலியா?

26 ஜன்வரி 2017

லாரன்ஸ் மாண்வர்களுடன் இணைந்து ஒரு வீடியோ வெளியிட்டார்.
1) போராட்டத்தை ஆரமித்த அனைத்து மாணவரகளும் அவருடன் இருப்பதாக சொன்னார். 
  சட்டத்தை கொண்டு வந்த மத்திய மாநில அரசுக்கு நன்றி
  நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க போவதாக சொல்லியிருக்கிறார்.

2) உடைமைகளை இழந்த மீனவ மக்களுக்கு 10 லட்சம் நிதி. மற்றவர்களையும் உதவ சொல்லியிருக்கிறார்.

3) 29 ம் தேதி மாணவர்கள் மெரினாவில் கட்சி ஆரம்பிக்க போவதாக தகவல்கள் வருகிறது.
  போராட்டத்தை தொடங்கிய அனைத்து மாணவர்களும் இங்க தான் இருக்காங்க.
  இவங்க ஜல்லிக்கட்டுக்கு தான் போராடினாங்க. யாரும் கட்சி ஆரம்பிக்க வரலை.
  அதனால், கட்சி ஆரம்பிக்க போறவங்களுக்கும், இந்த மாணவர்களுக்கும் சம்பந்தம் இல்லை.

சில கருத்துகள்.

1) 23 ம் தேதிக்கு முன்னர் இவர் பேசிய பேச்சிற்கும்,
அதற்கு பின்னர் இவர் பேசும் பேச்சிற்கும் துளியும் சம்பந்தமில்லை.

2) அராஜகம் செய்த காவல்துறையையும், அவர்களை ஏவி விட்ட அரசையும்,
ஏன் இவர் கண்டிக்கவில்லை?

3) பெண்கள், குழந்தைகள் என்று கூட பார்க்காமல் இந்த போலீஸ் மிருகங்கள் தாக்கியிருக்கு.
கர்ப்பிணி பெண்களையும் விட்டு வைக்கலை.
மீனவ குப்பத்தில் ஒவ்வொரு வீட்டின் உள்ளும் சென்று ஆண்களை கைது செய்திருக்கிறார்கள்.
பெண்களிடம் தகாத வார்த்தைகள் பேசியிருக்கிறார்கள்.
தகாத செயல்களையும் செய்திருக்கிறார்கள்.
இது எவ்வளவு பெரிய தவறு. இதை கண்டிக்கனும்னு உங்களுக்கு தோணலையா?
இதை செஞ்ச காவல்துறையும், அரசும் மன்னிப்பு கேக்கனும்னு சொல்ல உங்களுக்கு தைரியுஅம் இல்லையா?
உங்களுக்கு எல்லாம் சுத்தமா மனசாட்சியே இல்லையா?
அரசாங்கத்துக்கு அவ்வள்வு பயமா? பயம் இருக்கவங்க பொது வேலைக்கு வர கூடாது.
சினிமாவில் நடிச்சமோ, போனமோனு இருங்க.

4) மீன்வர்களின் உடைமைகளை எரித்தது காவல்துறை.
அதற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று ஏன் இவர் அரசாங்கத்தை கேட்கவில்லை?

5) கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்று ஏன் இவர் அரசாங்கத்தை கேட்கவில்லை?

6) மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் தான் வந்தாங்களாம்?
அது ஒரு கருவியே தவிர. அதற்கு மட்டும் வரவில்லை.
தமிழன் என்ற உணர்வுக்காக வந்தான். வந்தவன் ஜல்லிக்கட்டை பற்றி மட்டு அங்கு பேசவில்லை.
காவிரி, முல்லை பெரியாறு, விவசாயிகள் பிரச்சனை, பன்னாட்டு நிறுவனங்களின் உணவு அரசியல்
உட்பட பல விசயங்களை அங்கு பேசினான். அதனால் இது ஜல்லிக்கட்டிற்காக மட்டும் கூடிய கூட்டம் என்று
வாய் கூசாமல் ஆதி, ஆர் ஜே பாலாஜி ஆகியோர் போல பொய் சொல்வது எதற்காக?

மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு மட்டும் தான் வந்தார்கள். கட்சி ஆரம்பிக்க வரலைனு சொல்றீங்க.
மாணவர்கள் கட்சி ஆரம்பிக்க கூடாது என்று நீங்க ஏன் சொல்றீங்க?
அரசாங்கம் அப்படி தான் சொல்ல சொன்னாங்களா?

7) வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது என்று சொல்வார்கள்.
  இவர் 10 லட்சம் கொடுக்கிறேன் என்று பெருமையாக சொல்லிப்பது ஏன்?
  ஏற்கனவே சாப்பாட்டிற்காக ஒரு கோடி தர போகிறேன் என்று சொன்னவரும் இவர் தான்.
  எதுக்காக இந்த விளம்பரம்?

8) போலீஸ் வன்முறைக்கு பிறகு, இவரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்று நடக்கிறது.
  அவருக்கு பின்னால் 20 போலீஸ் நிக்கறாங்க. அதில் இருந்தே அவர் யாருடைய வார்த்தைகளை பேசுகிறார் என்பது தெரியும்.
  அந்த பேச்சில் ஒன்று நன்றாக தெரிந்தது.
  அவருக்கு அவசர சட்டத்திற்கும், நிரந்திர சட்டத்திற்குமே வித்தியாசம் தெரியவில்லை.
  இவரை ஏன் முன்னிலைப்படுத்தினார்கள். உண்மை என்னவெனில், இவரை யாரும் முன்னிலைப்படுத்தவில்லை.
  இவர் தன்னை தானே முன்னிலைப்படுத்திக் கொண்டார். எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது.
  பத்து லட்சம் பேர் கூடிய கூட்டத்தில் முன்னிலைப்படுத்திக் கொண்டு மைக்கில் பேச, இவர் கொடுப்பதாய் சொன்னது ஒரு கோடி ரூபாய்.
  ஆனால் உண்மையில் எவ்வளவு கொடுத்தார் என்ற விவரத்தை அவர் வெளியிட வில்லை. வெளியிட மாட்டார்.

9)
ஒரு கூட்டம் சேர்ந்தா, உடனே மைக்கை பிடித்து மார்கெட்டிங் செஞ்சிக்க் ஓடி வருவாங்க சினிமாகாரங்க.
மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் உழைப்பால் இந்த மாபெரும் எழுச்சி போராட்டத்தை நடத்தினார்கள்.
இடையில் புகுந்து இவர் தான் இதற்கு தலைவர் என்பது போல் பில்டப் கொடுப்பது ஏன்?
யார் தலைவன் என்று இவங்களுக்குள் போட்டி வேற?
ஆர்.ஜே பாலாஜி, சிம்புவும் கூட இந்த கூட்டத்துக்கு தலைவன் ஆக துடித்தாங்க.


இவரின் நோக்கம் இப்போதைக்கு ஒன்று தான்.
முடிந்தவரை நல்லவன் என்ற இமெஜ்ஜை பரப்புவது. தனது டிரஸ்டிற்கு நிதி சேர்ப்பது. தனது படங்களுக்கு அதிக வசுல் குவிப்பது.
எவன் ஒருவன் தான் செய்யும் உதவிகளை தம்பட்டை அடித்து ஊருக்கு சொல்கிறானோ, அவனை
நம்ப கூடாது என்று அர்த்தம்.

இவர் அந்த வகையில் தான் வருகிறார்.
சினிமாகாரனை நம்பாதீங்க மக்களே?
சினிமாகாரர்களுக்கும், காவல்துறைக்கும் வித்தியாசமே இல்லை.
இருவருமே அரசாங்கத்தின் அடிமைகள் தான்.

போலீஸ் அராஜகம் செஞ்சி மூனு நாள் கூட ஆகல.
அதுக்குள்ள தனது அடுத்த படத்தின் டிரெயிலரை வெளியிட்டார்.
இப்ப புரியுதா, இவர் volunteer ஆ எதுக்கு போரட்டத்துக்கு தன்னை தலைவராய் முன்னிறித்திக் கொண்டார் என்று.

தியேட்டருக்கு போறீங்களா, படம் பாருங்க. கை தட்டுங்க. விசில் அடிங்க.
அவ்வளவு தான்.
இன்னொரு சினிமா காரனை முதலமைச்சர் ஆக்காதீங்க.
50 வருசம் சினிமாகார முதலமைச்சர்களால் தமிழ் நாடு சீரழிந்தது.
போதும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot