Tuesday, February 28, 2017

மோடியும், எடப்பாடியும் இந்த 10 கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?|ஹட்ரோகார்பன் திட்டம்

ஹட்ரோர்பன் திட்டம் - பதில் தெரியாத 10 கேள்விகள்:
மோடியும், எடப்பாடியும் இந்த 10 கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?

ஹட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் மத்திய அரசும், அதற்கு
துணையாக இருக்கும் மாநில அரசும் பதில் அளிக்கவேண்டிய சில கேள்விகளை பார்க்கலாம்.

1) மண்ணென்ணேய் எடுக்க போகிறோம் என்று நிலத்தை குத்தகைக்கு வாங்கிட்டு, அதுக்கு அப்புறம்
நில உரிமையாளர்களிடம் சொல்லாமலேயே தனியார் நிறுவனத்திடம் நிலத்தை கைமாற்றி விட்டு
ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டம் தீட்டியது ஏன்? மக்களை ஏமாற்ற நினைத்தது ஏன்?

2)
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு காவிரி தண்ணீரை தராமல் மத்திய பிஜேபி அரசும்,
கர்நாட்கா காங்கிரஸ் அரசும் துரோகம் செய்தார்கள். இப்போது மக்கள் நம்பி இருப்பதே நிலத்தடி நீரை தான்.
ஹட்ரோகார்பன் திட்டத்திற்கு நிறைய தண்ணீர் செலவாகும்.
எங்கு இருந்து தண்ணீர் எடுக்க போறீங்க? நிலத்தடி நீரை உறிச்சு எடுக்க போறீங்களா?
அப்படி செய்தால் விவசாயிகளுக்கு தண்ணீர் எப்படி கிடைக்கும்?
ஏன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்க நினைக்கறீங்க?

3) ஹட்ரோகார்பன் திட்டத்திற்கு நிறைய மணல் தேவைப்படும்.
எங்கிருந்து மணலை எடுப்பீர்கள்?
ஏற்கனவே ஆறுகளில் இருந்து அளவுக்கு அதிகமாக மணலை அள்ளி ஆறுகளை நாசம் செய்து விட்டார்கள்.
மிச்சம் மீது இருக்கும் ஆறுகளையும் நீங்கள் நாசம் செய்ய போறீங்களா?

4) 600 விதமான ரசாயன பொருட்களை பூமிக்குள் அனுப்புவார்கள் என்பதே hydraulic fracking பற்றி
அனைவரும் தெரிந்து கொண்ட செய்தி. என்னனேன்ன ரசாயன பொருட்கள்
என்பதை வெளிப்படையாக சொல்லாதது ஏன்? அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஏன் பேச மாட்றீங்க?

5) ஹட்ரோகார்பன் என்பது பொது வார்த்தை. மீத்தேன், ஷேல், கெய்ல் மற்றும் இன்னும் பல வாயுகள் அதனுள் அடக்கம்.
நீங்கள் உண்மையாக எந்த வாயுவை எடுக்க போறீங்க? ஏன் அதை வெளிப்படையாக சொல்ல மாட்றீங்க?

6) ஆள் கிணற்றில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் விஷ கழிவுகளை எப்படி பாதுகாப்பாய் வெளியேற்றுவீர்கள்?
அந்த கழிவுகளால் விவசாய நிலத்திற்கும், காற்றுக்கும் எந்த மாசும் ஏற்படாது என்று ஏன் பொய் சொல்றீங்க?

7) பூமியின் அடியில் செலுத்தப்படும் ரசாயண பொருட்களும், மீத்தேனும் நிலத்தடி நீருடன் கலக்க வாய்ப்பில்லை என்பதை
விஞ்ஞான பூர்வமாக நிருபிப்பீர்களா? உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த திட்டத்தினால்
நிலத்தடி நீர் மாசுப்பட்டதாய் தகவல் இருக்கிறதே? அதற்கு உங்கள் பதில் என்ன?

8) 10,000 அடி வரை ஆளமான கிணறுகள் வெட்டப்பட்டு, பின்னர் பக்கவாட்டில் பல ஆயிரம் அடிகள்
பாறைக்குள் தோண்டப்பட்டு, தண்ணீர், மணல் மற்றும் ரசாயண கலவையின் மூலம் பாறையில் விரிசலை
ஏற்படுத்தி, பாறையை வெடிக்க செய்து, மீத்தேன் எடுக்க போறீங்க.
இப்படி பாறைகளை சேதப்படுத்தவதால், நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது
என்று சர்வதேச விஞ்ஞானிகள் சொல்றாங்களே, அதற்கு உங்கள் பதில் என்ன?

9) சுற்றுச்சுழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஐரோப்பாவில் இந்த fracking முறை தடை செய்யப்பட்டு
இருக்கிறதே. சுற்றுச்சுழலுக்கு ஆபத்து இல்லை என்றால் ஏன் அவர்கள் அந்த திட்டத்தை தடை செஞ்சாங்க?
இந்த திட்டத்தின் மூலம் தான் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அமெரிக்காவிலும் சில மாநிலங்களில் இதை தடை செய்து இருக்கிறார்களே.
பல நாடுகள் தடை செய்த திட்டத்தின் மீதி இந்திய அரசுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?
இந்த திட்டத்தை செயல்படுத்துவது பாஜக பிரமுகரின் நிறுவனம் என்பது தான் காரணமா?

10) தேசத்தின் நலனுக்காக தமிழகம் தியாகம் செய்ய வேண்டும் என்று சொல்றீங்க.
தமிழக விவசாயிகளின் உரிமையான காவிரி தண்ணீரை கர்நாடகா தர மறுத்தார்கள்.
இதை போல் கர்நாடகா அரசுக்கு நீங்கள் ஏதேனும் கருத்து சொல்லியிருக்கீங்களா?

11)ஹட்ரோகார்பன் திட்டத்தின் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும். இந்தியா பொருளாதாரம் உயரும் என்று சொல்றீங்க.
500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்னு சொல்றீங்க.
கிட்டத்தட்ட 5 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகுமே?
லாபத்தை விட நஷ்டம் தான் அதிகம் என்பது உங்களுக்கு தெரியலையா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறீங்களா?

12)ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அங்குள்ள மக்களை பாதுகாக்க ஏதேனும் திட்டம் இருக்கா?
அல்லது அங்குள்ள மக்களுக்கு ஏதேனும் முகாம் நடத்தப்பட்டு அசம்பாவிதம் நடந்தால், எப்படி செயல்படனும் என்று
சொல்லி கூடுத்தீங்களா? சென்னை கடலில் கொட்டப்பட்ட கச்சா எண்ணேயை வாலியில் தானே நீங்க
எடுத்தீங்க? எங்களை நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்று நாங்கள் எப்படி நம்ப முடியும்?

13) ஏகப்பட்ட நீர் மற்றும் மணல் செலவாகும். பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிகும்.
சுற்றுச்சுழல் கெட்டுப்போகும். ஏன் இந்த திட்டத்திற்கு பதிலாக பிரச்சனை குறைவாக உள்ள பிற திட்டங்களை நிறைவேற்றக் கூடாது?

மாட்டு சானியிலும், மனித கழிவுகளிலும், குப்பைகளிலும் மீத்தேன் எடுக்கலாமே.
அந்த திட்டங்களை எல்லாம் பெரிய அளவில் செயல்படுத்தலாமே?

ஏன் சூரிய சக்தியில் மின்சாரம் எடுக்கும் திட்டத்தை விரிவுப்படத்தாம இருக்கீங்க?
இந்தியாவில் வெயிலுக்கா பஞ்சம்?வருடம் முழுவது வெயில் தானே.


மத்திய, மாநில அரசுகள் எங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
இது ஜனநாயக நாடு. மக்களுக்காக தான் இங்கு அரசாங்கம் நடக்க வேண்டும்.
இங்கு மன்னர் ஆட்சியை நடத்தாதீர்கள்.
இங்கு அராஜக ஆட்சியை நடத்தாதீர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot