Wednesday, February 22, 2017

122 எம்.எல்.ஏக்களை என்ன செய்யலாம்?

கூவத்தூர் எம்.எல்.ஏக்களை என்ன செய்யலாம்?

பிப்ரவரி 7 அன்று ஜெயலலிதாவின் சமாதி முன்பு தியானம் செய்தவுடன்
பன்னீர்செல்வம் திடிரென்று  ஞானி ஆகி விடுகிறார்.
ஜெயலலிதா, சசிகலாவுடன் இணைந்து கொள்ளையடித்த பன்னீர்செல்வம்
திடிரென்று உத்தமர் ஆகி விடுகிறார்.

பிஜேபி ஐடி விங், திமுக ஐடி விங் மற்றும் கட்சி சாராத இளைஞர்கள்
டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் பன்னீர்செல்வத்தின் புகழை பரப்புகிறார்கள்.
தொலைக்காட்சிகளிலும் தொடர் நேரலையாக பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள்
காட்டப்படுகிறது.

அந்த நேரத்தில் தான் ஹாசினினி என்ற 6 வயது குழந்தையை கொடூரமான முறையில்
கொலை செய்து எரித்த குற்றவாளி கைது செய்யப்பட்டான். இன்று வரைக்கும் நமது தமிழ் ஊடகங்களில்
ஒரு நாள் கூட விவாத நிகழ்ச்சிகளில் அந்த கொடுமையான சம்பவம் பற்றி விவாதிக்கப்படவில்லை.

மாறாக அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தை தொடர் நேரலையாக காட்டி கொண்டிருந்தார்கள்.
breaking news க்கு break இல்லாமல் போனது.

பன்னீருக்கு ஆதரவு பெருகுவதாய் ஊடகங்கள் சொல்கிறார்கள்.
ஓவ்வொரு நாளும் ஒரிரண்டு எம்.எல்.ஏக்கள் எம்பிக்கள் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
சில நாட்களுக்கு பிறகு ஒரு அமைச்சரும் வந்தார்.
யார் அந்த அமைச்சர்? கட்சி தாவுவதையே குறிக்கொளாக  வைத்துக் கொண்டிருக்கும் மாவா பாண்டியராஜன்.

எம்.எல்.ஏக்கள் பன்னீர் பக்கம் பாய்ந்து விட கூடாது என்பதற்காக அவர்களை மன்னார்க்குடி கும்பல் கூவத்தூரில் அடைத்து வைத்தார்கள்.
சகல வசதிகளும் அவர்களுக்கு செய்து தரப்பட்டது. மன்னார்க்குடி கும்பல்  பணம், தங்கம், கார், வீடு ஆகியவற்றை அவர்களுக்கு
வாரி வழங்கினார்கள்.

கூவத்தூரில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடிக்கு எதிராக
வாக்களிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வமும், மக்களும் கூறினார்கள்.
ஆனால் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்யவில்லை. எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்து விட்டார்கள்.
இதனால் மக்கள் எம்.எல்.ஏக்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
அந்த மக்களுக்கு சில கேள்விகள்.

1) உங்கள் தொகுதியில் ஓட்டு கேட்க வருபவர்கள் பிரமாண்டமாக காரில் அணிவகுத்து வந்து ஓட்டு கேட்டிருப்பார்கள்.
  நிறைய இரு சக்கர வாகனங்களும் அணி வகுத்து வந்திருக்கும். ஏராளமான ஆட்கள் கூடவே நடந்து வந்திருப்பாங்க.
  தெருக்களில் மேடை அமைத்து பிரச்சாரம் செய்திருப்பார்கள்.
  இதற்கு எல்லாம் நிறைய பணம் செலவாகுமே.
  அவ்வளவு பணம் அவர்களுக்கு எப்படி வந்தது என்று கேட்டீர்களா?
  செல்வழித்த பணத்தை எப்படி திரும்ப பெறுவாங்க என்று அவர்களை கேட்டீர்களா?

2) சில இடங்களில் கருணாநிதி, ஸ்டாலின், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் பெரும் மாநாடு நடத்தியிருப்பார்கள்.
  உங்களை லாரிகளில் கூட்டிட்டு போய் பிரியாணியும், மதுவும், பணமும் கொடுத்து மாநாட்டில்
  உட்கார சொல்லியிருப்பாங்க. ஏன் இவ்வளவு பணம் செலவழிக்கிறீர்கள் என்று கேட்டீர்களா?
  செலவழிக்கும் பணத்தை எம்.எல்.ஏ ஆனவுடன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கொள்ளையடிப்பீர்களா என்று கேட்டீர்களா?

3) தேர்தலில் தங்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று திமுகவும், அதிமுகவும் பணம் கொடுத்தார்களே.
  ஏன் அதை வாங்கினீர்கள்?
  இன்று எடப்பாடிக்கு ஆதரவாய் வாக்களித்த எம்.எல்.ஏக்கள் காசு வாங்கிட்டு மக்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்று சொல்றீங்களே.
  நீங்கல் வாக்குக்கு பணம் வாங்கியது தமிழ்நாட்டிற்கே செய்த துரோகம் என்று உங்களுக்கு தெரிய வில்லையா?

4)

ஓவ்வொரு எம்.எல்.ஏவும் தேர்தலின் போது இரண்டிலிருந்து ஐந்து கோடி வரை செலவு செய்து இருக்கிறார்கள்.
அது அவர்களின் முதலீடு, ஐந்தாண்டுகள் ஆட்சி செய்து முதலீட்டை எடுத்திட்டு லாபம் சம்பாதிக்கனும்.
அவர்கள் வெறும் வியாபாரிகள். அப்படி பட்டவ வியாபாரிகளை சட்டசபைக்கு அனுப்பி வைத்தது யார்? நீங்கள் தானே?
மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களை எம்.எல்.ஏ ஆக்கியிருந்தால் மக்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு
எடப்பாடிக்கு எதிராக வாக்களித்திருப்பார்கள்.

சினிமாவில் வரும் வில்லன்களை போல இந்த எம்.எல்.ஏக்கள் ஒரு நாளில் திருந்தி விட முடியுமா?
இவர்கள் கொள்ளையடிக்க வந்தவர்கள்.
கூவத்தூரிலும் அதை தான் செய்தார்கள். இரண்டு கோஷ்டிகளில் யார் நிறைய பணம் கொடுத்தார்களோ
அவர்களுக்கு வாக்களித்தார்கள்.

அவர்களை தொலைபேசியில் திட்டுவதும், ஆண் எம்.எல்.ஏக்கள் வீட்டிற்கு சேலையை தபாலில் அனுப்புவதும் சரியா என்று யோசிக்க வேண்டும்.
சசிகலா கோஷ்டிக்கு ஓட்டு போட்டவர்கள் சேலையை உடுத்த தான் லாய்க்கு அப்படினு சொல்றீங்க.
அப்படி சொல்வதன் மூலம் நீங்கள் ஓட்டு மொத்த பெண்களையும் இழிவுப்படுத்துகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லையா?
உங்கள் ஆணாதிக்க எண்ணங்களை வெளிப்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லையா?

அந்த எம்.எல்.ஏக்கள் வானில் இருந்து சட்டசபையில் குதித்தவரகள் இல்லை.
தேர்ந்தெடுத்து அனுப்பியது நீங்கள் தான்.

இனி வரும் தேர்தல்களில் பணத்துக்காக வாக்களிக்காமல், உண்மையாக மக்களுக்கு உழைப்பவர்களுக்கு வாக்களியுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot