Friday, February 10, 2017

எப்போது மக்கள் பன்னீரை முதல்வர் ஆக்கலாம்?

கொஞ்ச நேரம் ஆடியோவை கேட்டுட்டு நீ சசிகலா ஆதரவாளர்னு ஒரு கமண்ட் போட்டு விட்டு தயவு செய்து
நிறுத்தி விடாதீங்க. முழு ஆடியோவையும் கேளுங்க.

எப்போது மக்கள் பன்னீரை முதல்வர் ஆக்கலாம்?| When should we make pannerselvam as CM?

1) ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தில் இவருக்கு எந்த பங்கும் இல்லை என்று நிருபித்தால் மக்கள் பன்னீரை ஆதரிக்கலாம்.
2) அப்பல்லோவின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டால் மக்கள் பன்னீரை ஆதரிக்கலாம்.
3) சசிகலா மற்றும் திமுகவினரின் மதுபான ஆலைகளை மூடி விட்டு தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வருவேன்
  என்ற வாக்குறுதியை தந்தால், மக்கள் பன்னீரை ஆதரிக்கலாம்.
4) இனி தேர்தல்களில் ஒட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்ற வாக்குறுதியை தந்தால், மக்கள் பன்னீரை ஆதரிக்கலாம்.

5) பன்னீர் தன் மகன் மற்றும் குடும்ப்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆட்சியில் எந்த பதவியும் தர மாட்டேன்
என்ற வாக்குறுதி கொடுத்தால், மக்கள் பன்னீரை ஆதரிக்கலாம்.
6) 2016 மார்ச் மாதம் இவர் மற்றும் நத்தம் விஸ்வனாதன் உள்ளடங்கிய அதிமுக ஐவர் அணியை ஏன் ஜெயலலிதா
  இரண்டு மாதங்களுக்கு கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தார் என்ற உண்மையை சொன்னால் மக்கள் பன்னீரை ஆதரிக்கலாம்.
7) வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை என்று நிருபீத்தால், மக்கள் பன்னீரை ஆதரிக்கலாம்.
8) இதுவரை தன் பொது வாழ்கையில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கியதில்லை என்று நிருபீத்தால், மக்கள் பன்னீரை ஆதரிக்கலாம்.
9) ஜெ மற்றும் சசியுடன் இணைந்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபடவில்லை என்றூ நிருபீத்தால், மக்கள் பன்னீரை ஆதரிக்கலாம்.

10) மெரினாவில் காவல்துறை அராஜகம் செய்தார்கள். காவல்துறை முதல் அமைச்சரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.
  காவல்துறை அதிகாரிகளுக்கு இவர் உத்தரவிடவில்லை அல்லது காவல்துறை அதிகாரிகள் இவர் பேச்சையே கேட்கவில்லை
  என்பதை ஒப்புக் கொண்டால், மக்கள் பன்னீரை ஆதரிக்கலாம்.
11) சசிகலாவின் பிடியில் இருக்கும் எம்.எல்.எக்களிடம் இவரின் ஆட்கள் குதிரை பேரத்தில் ஈடுபடவில்ல என்று
  நிருபீத்தால், மக்கள் பன்னீரை ஆதரிக்கலாம்.
12) 15 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு இவர் அனுமதி கொடுத்துள்ளார்.
பிஜேபியுடன் இவருக்கு எந்த உறவும் இல்லை என்று நிருபீத்தால் மக்கள் பன்னீரை ஆதரிக்கலாம்.
13) இவர் ஒரு முதல் அமைச்சர். மிரட்டுனாங்க ராஜினாமா பண்ணிட்டேன்னு கொஞ்சம் கூட வெக்கப்படாம சொல்றாரு.
“என்னை கட்டாயப்படுத்தினாங்க. அதனால் தான் அந்த தப்பை செஞ்சேன்” என்று இனிமே சொல்லாம
தைரியமாக ஆட்சி செய்வேன் என்று அவர் வாக்குறுதி தந்தால், மக்கள் பன்னீரை ஆதரிக்கலாம்.
14) சசிகலா எம்.எல்.ஏக்களை கைதிகளாய் வைத்திருக்கிறார். போலீஸ் துறையை வைத்திருக்கும் பன்னீர்
அவர்களை மீட்க வில்லை. எம்.எல்.ஏக்களை கைதிகளாய் வச்சிருக்காங்கனு கோர்ட்டில் எம்.எல்.ஏ உறவினர் வழக்கு போடுறார்.
எம்.எல்.ஏக்கள் விருப்பட்டு தான் ரிசார்ட்டில் இருக்காங்க. யாரும் அவங்களை கட்டாயப்படுத்தி வைக்கலை
என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சொல்றார்.
பன்னீர் சொல்றதை காவல்துறையும் கேக்க மாட்டறாங்க, அரசு வழக்கறிஞர்களும் கேக்க மாட்றாங்க.
இவங்க எல்லாரும் இவர் சொல்றதை கேப்பாங்கனு நிருபீச்சா மக்கள் பன்னீரை ஆதரிக்கலாம்.

இந்த வாக்குறுதிகளை இவர் கொடுக்கலைனா, இவரை ஆதரிப்பது நம் தலையில் நாமே மண்ணை போட்டுக்கறதுக்கு சமம்.

மெரினா போராட்டத்தின் போதும், போராட்டத்தின் இறுதியில் போலீஸ் துரத்தி அடித்த போதும்
நமக்குள் இருந்த கோபம் இப்ப எங்க போச்சு? எந்த அரசியல்வாதியையும் நம்ப மாட்டோம்னு சொன்னது ஏன் மறந்து போச்சு?
பன்னீர்செல்வம், சசிகலா - இருவருமே அரசியலில் இருந்தே துரத்தி அடிக்கப்பட வேண்டிய ஊழல் பேர்விழிகள்.
மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திவிட்டு, பின்னர் தேர்தல் வைப்பாங்கனு நினைக்கறேன்.
தயவு செய்து எந்த அரசியல்வாதிக்கும் ஓட்டு போடாதீங்க.
தேர்தலில் நிற்க போகும் நம் இளைஞர்களுக்கு ஓட்டு போடுங்க.
நாம் விரும்பும் நேர்மையான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

1 comment:

 1. Hi,
  I am regular reader of your news feeds. I thought of sharing my analysis of recent political events .
  Please visit my blog post
  (Titled: Save Tamilnadu from deadly BJP plan)
  https://agathiarboomi.wordpress.com/2017/02/12/save-tamilnadu-from-bjps-deadly-plan/

  ReplyDelete

Post Top Ad

Your Ad Spot