Saturday, February 18, 2017

சட்டை கிழிந்த ஸ்டாலின் ஹீரோவா, ரவுடியா?

நேற்று தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை தீர்மானத்தின் வாக்கெடுப்பு நடக்கும் என்று அறிவிட்டார்கள்.
அப்போது திமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஸ்டாலினும், பன்னீர்செல்வம் ஒரே மாதிரியான கருத்துகளை தான் சொன்னார்கள்.
சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் இருக்கும் போது ஒரு நாள் இடைவெளியில் அவசர அவசரமா
வாக்கெடுப்பு நடத்துவதற்கு என்ன அவசியம்.

ஏழு நாட்களுக்கு பிறகு தான் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
எம்.எல்.ஏக்கள் தொகுதிகளுக்கு சென்று மக்களுடைய மனநிலையை அறிந்து வந்து வாக்களிக்க வேண்டும்.
அதுவும் ரகசிய வாக்கெடுப்பாக இருக்க வேண்டும் - ஸ்டாலின், ஓபிஎஸ்

தொடர்ந்து கோஷங்கள் போட்ட்டார்கள்.
சபாநாயகரை முற்றுகையிட்டார்கள். அவர் சட்டையை கிழித்தார்கள்.
சபாநாயகர் முன்னாடி இருந்த மைக்கை உடைச்சாங்க.
சபாநாயர்கர் மேடையில் இருந்த ஆவணங்களை கிழிச்சி எறிச்சிருக்காங்க.
சபாநாயகர் முன் இருந்த table தூக்கி போட்டு உடைச்சாங்க.
சபாநாயகரை தள்ளி விட்டாங்க. பிடிச்சி இழுத்தாங்க.

சபாநாயகர் நாற்காலியில் திமுக எம்.எல்.ஏக்கள் உட்கார்ந்தாங்க.
சபாநாயகரை திமுக எம்.எல்.ஏக்களிடம் இருந்து காப்பாற்றி அவை காவலர்கள் அவரை அழைத்து சென்றார்கள்.
திமுகவினர் செய்த ரகளையால் அவையை 3 தடவை ஒத்தி வைக்கறாங்க.
இது எல்லாமே எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தான் நடக்கிறது.
தன் கட்சி எம்.எல்.ஏக்களை அவர் கண்டிக்காமல் நடப்பதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

அதுக்குப்பறம் திமுக உறுப்பினர்களை வெளியேற்றுங்கள் என்று சபைக் காவலர்களுக்கு உத்தரவிடுகிறார்.
திமுக உறுப்பினர்கள் வெளியேற மறுக்கிறார்கள்.
திமுகவினரிடம் இருந்து சபாநாயகரை காப்பாற்றி அவைக் காவலர்கள் அழைத்து செல்கிறார்கள்.
திமுகவினர் குண்டுகட்டாய் வெளியேற்ற பட்டார்கள்.
ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்படுகிறது. திமுகவினர் வெளியில் வந்த் ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தாங்க.
பின்னர் காவல்துறை அவங்களை கைது செய்றாங்க.

இதில் என்ன அதிசியம்னு பார்த்தா, திமுக சபையில் வன்முறை செய்த போது அதிமுக உறுப்பினர்கள் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
ஸ்டாலின் வன்முறையை கையில் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

திமுகவினர் வெளியில் சென்றவுடன், நம்பிக்கை தீர்மானத்தின் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
சபை ஆறு பகுதிகளாய் பிரிக்கப்பட்டது.

ஒவ்வொரு பகுதியாய் எடப்பாடிக்கு ஆதரவாக எத்தனை பேர், எதிராக எத்தனை பேர்
என்று கணக்கிடப்படுகிறது.

எடப்பாடிக்கு ஆதரவாக 122 பேர்களும், எதிராக 11 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தார்கள்.
அதனால் நம்பிக்கை தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

இதில் சில முக்கிய அம்சங்களை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது:
1) சட்டசபையில் மெஜாரிட்டியை நிருபீக்க ஆளுனர் 15 நாள் அவகாசம் கொடுத்திருப்பது குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும்
என்று ஒரு நாள் முன்னாடி கூறிய ஸ்டாலின், வாக்கெடுப்பு நடந்த நாளில் ஏன் ஒரே நாளில் நடத்தறீங்க,
என்ன அவசரம்? 7 நாள் அவகாசம் குடுக்கனும் என்று சொன்னது
ஸ்டாலினின் நிலையற்ற தன்மையை தெளிவாய் காட்டியது.
 
  எதுக்கு 7 நாள் அவகாசம் கேக்கறாங்கனு தெரியலை? அதுவும் எம்.எல்.ஏக்கள் அவங்க தொகுதிகளுக்கு போகனுமாம்.
  குதிரை பேரம் செய்வதற்காக திமுக அவகாசம் கேக்கறாங்களானு சந்தேகம் வருது.
  நம்பிக்கை வாக்கு எடுப்பு இந்தியாவில் எந்த மாநிலங்களில் நடந்தாலும், எம்.எல்.ஏக்களை ரகசியமாக வைப்பது
  எழுதப்படாத விதியாக தான் இருக்கிறது. இது மாற வேண்டும் என்றால் புது சட்டம் தான் கொண்டு வரனும்

3) தமிழக வரலாற்றில் இதுவரை ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில்லை. எந்த முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
  என்பதை சபாநாயகர் தான் தீர்மானிக்க வேண்டும் என்பது தான் சட்டசபை விதிகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
  அதனால், ஸ்டாலினின் கோரிக்கையை மறுத்ததில் சட்டப்படி எந்த தவறும் இல்லை.
  ஒரு விஷயம் நாம கவனிக்கனும். சபாநாயகர் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.
  அவர் யாருக்கு சாதாகமா முடிவு எடுப்பார்?
  திமுக ஆட்சியில் இருந்தாலும் இதே நிலைமை தான?
  இங்க அடிப்படையே தப்பா இருக்கு. இப்ப கிரிக்கெட் போட்டியில் இருக்கும் நடுவர், இரு அணிகளையும் சேராதவர்.
  கால்பந்து போட்டியின் நடவர், இரு அணிகளையும் சேராதவர்.
  ஆனா, சட்டசபையில் இருக்கும் சபாநாயகர் ஆளும் கட்சியை சேர்ந்தவர்.

  திமுக இங்க ரவுடித்தனம் பண்றதில் எந்த பிரியோஜனமும் இல்லை.
  சபாநாயகர் எந்த கட்சியையும் சாராதவராய் இருக்கனும். அவர் எம்.எல்.ஏவாக இருக்க கூடாது.
  உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியை சபாநாயகர் ஆக்க வேண்டும்
  என்ற சட்ட திருத்தத்தை கொண்டு வர திமுக குரல் கொடுக்கனும். ஆனா கொடுக்க மாட்டாங்க.
  ஏனென்றால், அவங்க ஆளும் கட்சியா வரும் போது, சபாநாயகருக்கு இருக்கும் அதிகாரத்தை அவர்கள் அனுபவிக்க நினைப்பார்கள்.
  இதை மக்கள் தெளிவாய் புரிஞ்சுக்கனும். ஒரு பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பது அரசியல்வாதிக்கு தெரியும்
  அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் அவங்க கிட்ட இருக்கு. ஆனா பண்ண மாட்டாங்க.
  வெறும் அரசியல் மட்டும் தான் செய்வாங்க.

மீடியாக்கள் முதலில் பன்னீர்செல்வத்தை தீடிரென் ஹீரோவாக்கினார்கள்.
இப்போது ஸ்டாலினை திடீர் ஹீரோவாக்கியிருக்கிறார்கள்.
என்னிக்குமே மறந்துடாதீங்க. திமுக, அதிமுக இரண்டுமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் தான்.
ஊழல் கட்சிகள். ரவுடித்தனம் செய்யும் கட்சிகள்.

ஜல்லிக்கட்டு போராடத்தில் நேர்மையாக, அகிம்சையாக போராடி தான் வெற்றி பெற்றோம்.
திமுக வன்முறையை கையில் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
திமுகவின் வன்முறையை யாரும் ஆதரிக்காதீர்கள்.
திமுக தலைமையில் போராட்டம் நடந்தால் யாரும் செல்லாதீர்கள்.

டிவி சீரியல் மாதிரி தான் நம் தமிழக அரசியல் சென்று கொண்டிருக்கிறது.
தேர்தலில் இந்த இரண்டு கட்சிக்கும் முடிவு கட்டுவோம்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot