Monday, February 27, 2017

மனசாட்சி இல்லாத மோடியின் அரசு

----ஏன் மோடி அரசு ஹட்ரோகார்பன் திட்டத்தை திணிக்கிறது?
ஹட்ரோகார்பன் திட்டத்தில் பிஜேபியின் நிலைப்பாடு என்ன?

நெடுவாசல் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் பிஜேபி
ஹட்ரோகார்பன் திட்டத்தில் பிஜேபியின்
மனசாட்சி இல்லாத மோடியின் அரசு

ஹட்ரோகார்பன் திட்டத்தை  பற்றி பிஜேபி தலைவர்கள் என்ன கருத்து சொல்லியிருக்காங்கனும் முதலில் பார்க்கலாம்.

ஒரு நாடு நல்லா இருக்கனும்னா ஒரு மாநிலம் தியாகம் செய்யனும் - இல கணேசன்

நெடுவாசல் மக்களுக்கு என்னோட வாக்குறுதி என்னனா “நீங்க எந்த போராட்டமும்
பண்ணாதீங்க. தேச விரோத சக்திகள் உங்களை தவறாக வழிநடத்துவதை அனுமதிக்காதீங்க.
மக்கள் வேண்டாம்னு சொன்னா, நாங்க ஹட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வர மாட்டோம். - எச்.ராஜா

“ஹ்ட்ரோகார்பன் திட்டத்தை தமிழக மக்கள் ஏத்துக்கலனா, அது தமிழ்நாட்டுக்கு தான் நஷ்டம்.” - பொன் ராதாகிருஷ்ணன்

“என்னவென்றே தெரியாமல் எல்லாதுக்கும் போராடுவது நல்லதல்ல” - தமிழிசை

இந்த பிரச்சனையில் மட்டும் தான் கட்சியில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கருத்து சொல்றாங்களா, இல்லை.
ஜல்லிக்கட்டு பிரச்சனையிலும் இதே மாதிரி தான். மக்களை குழப்பனும், ஒரு பிரச்சனையில் கட்சியின் நிலைப்பாடு என்னவென்று யாருக்கும் தெரிய கூடாது என்ற
நோக்கத்தில் தான் இவர்கள் இப்படி செயல்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

சில கருத்துகளை நான் பகிர்ந்துக்க விரும்புகிறேன்.

1) என்னங்க உங்க கட்சியில் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு கருத்தை சொல்றாங்களே.
யார் சொல்றது கட்சியின் அதிகார்பூர்வ கருத்துனா கேட்டா?
எங்க கட்சி ஜனநாயக கட்சி, எல்லாருக்கும் அவங்க கருத்தை சொல்றதுக்கு உரிமை இருக்குனு சொல்வாங்க.

2) பிஜேபியிடம் இன்னொரு விஷயத்தை நம்மால் கவனிக்க முடியும்.
யார் எல்லாம் இவர்களின் திட்டங்களை எதிர்க்கிறார்களோ,அவர்களை தேச விரோதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பார்கள்.
நேற்று நியுஸ் 7 விவாதத்தில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தியும், பிஜேபியின் ராகவனுக்கும் இடையில்
காராசாரமான விவாதம். திருமுருகனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத ராகவன் மே 17 இயக்கத்தை தேச விரோத அமைப்பு என்று கூறினார்.
இதே மாதிரி தான் கூடங்குளம் அனு ஆலைக்கு எதிரா போராடிய ட்உதயகுமாரை தேச விரோதியா சித்தரிச்சாங்க.

என்னுடைய கேள்வி ஒன்று தான். மத்தியில் ஆட்சி செய்வது ராகவனின் பிஜேபி கட்சி.
ஒரு அமைப்போ, கட்சியோ தேச விரோத அமைப்பு என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமே.
அதிகாரம் இல்லாத மக்கள் புலம்பலாம். சர்வ அதிகாரமும் கையில் இருக்கும் பிஜேபி அரசு புலம்பலாமா?
நடவடிக்கை எடுக்கலாமே? ஏன் எடுக்கலை?

3) ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாதுனு பெட்ரோலிய துறை அமைச்சர் நேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
மண்ணேய் எடுக்க போறாம்னு விவசாயிகளிடம் நிலத்தை குத்தகைக்கு வாங்கிட்டு, அவங்க கிட்ட சொல்லாமலே தனியார்
நிறுவனத்திடம் நிலத்தை கைமாற்றி விட்டு, ஹட்ரோகார்பன் வாயுவை எடுக்க திட்டம் போட்டீங்க..
இப்படி ஏமாற்றும் அரசாங்கத்தின் அறிக்கையை மக்கள் எவ்வாறு நம்புவார்கள்?

”அரசாங்கம் சொல்றதை ஏன் நம்ப மாட்றிங்கனு” பிஜேபிகாரங்க கேக்கறாங்க.
“நாம என்ன சொன்னாலும் மக்கள் நம்ப மாட்றாங்களே, அது ஏன் என்று உங்க மனசாட்சிக்கு கிட்ட கேட்டாலே உங்களுக்கு பதில் கிடைக்கும்.”
மனசாட்சி சொல்றதை எல்லாம் கேட்டா, அரசியல்வாதியா இருக்க முடியுமானு நீங்க சொல்வீங்க.
கரக்டு தான், நீங்க கார்பரேட் சொல்வதை மட்டும் தான் கேப்பீங்க.
கர்நாட்க பிஜேபிகாரரின் நிறுவனம் தான இங்க ஹட்ரோகார்பன் எடுக்க வந்துருக்காங்க.
நீங்க ஆதரிச்சு தான் பேசுவீங்க.
கர்நாடாகவிற்கு காவிரி தண்ணீரை தியாகம் செய்தோம்.
கர்நாடகா பாஜக காரரின் நிறுவனத்துக்காக ஹட்ரோகார்பன் திட்டட்த்தை அனுமதிச்சு தியாகம் பண்ணனுமா?

4) சமீபத்தில் மோடி ஈஷா யோகா மையத்திற்கு வந்து 112 சிவன் சிலையை திறந்து வைத்தார்.
  அந்த விழாவில் ஜக்கி வாசுதேவ் மோடிக்கு சிவன் பொறித்த பொன்னாடையை அணிவித்தார்.
  “அந்த பொன்னாடை நன்றாக இருக்கிறது. அதை மோடி எனக்கு தர வேண்டும்” என்று ஒரு பெண் டிவிட்டரில் பதிவி பண்றாங்க.
  அதற்கு பதில் அளித்த மோடி, சரி நான் பொன்னாடையை உங்களுக்கு அனுப்புகிறேன் என்றார்.

  எவ்வளவு நல்ல பிரதமர்? டிவிட்டரில் கேட்டதை கொடுக்கிறாரே?
  ஹட்ரோகார்பன் திட்டம் வேண்டாம் என்று நாம் மோடியிடம் டிவிட்டரில் கேட்போம்.
  நாம் கேட்பது மோடியின் காதில் விழுகிறதா என்று பார்ப்போம்.

நெடுவாசலில் ஹட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் திவீர்மடைஞ்சிக்கிட்டு இருக்கு.
நாமும் நம்மால் இயன்ற ஆதரவை கொடுக்க வேண்டும்.
அது நம்முடைய கடமை.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot