Wednesday, February 8, 2017

பன்னீர் பற்றி முக்கியமான தகவல்கள்

1951 இல் பிறந்த பன்னீர்செல்வம், 1969 இல் தன்னுடைய 18 வயதில் அரசியலில் குதிக்கிறார்.
படிபடியாக முன்னேறி அமைச்சராகவும், முதல் அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார்.
அதிமுக ஒரு ஊழல் கட்சி. எம்.ஜி. ஆர் காலத்தில் இருந்தே ஊழல் தான் முக்கிய கொள்கை.
கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், முதல் அமைச்சர் என்று அனைவருமே
தம்மால் முடிந்த அளவு பணம் கொள்ளை அடிப்பார்கள்.
அடிக்கும் கொள்ளையில் தலைமைக்கு ஒரு பங்கை கொடுத்து விட வேண்டும்.

அந்த கொள்கைக்கு கட்டுப்பட்டால் தான் அந்த கட்சியில் இருக்கவே முடியும்.
சசிகலாவிற்கு ஊழல் தவிர வேறு எதுவுமே தெரியாது. ஆனால், பன்னீர் மிகவும் நேர்மையானவர்.
இது வரை ஒரு பைசா கூட ஊழல் செய்ததில்லை. அவ்வளவு நல்லவர்.
அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அவரிடம் இருந்த சொத்தையும், இப்போது அவரிடம் இருக்கும்
சொத்துகளையும் ஒப்பிட்டு பார்த்தால், அவரின் நேர்மை கண்டு இந்த உலகமே பாராட்டும்.
சசிகலா அளவிற்கு இவரும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சொத்து சேர்த்து வைத்து இருக்கிறார்
அப்படின்னு சொல்றது பன்னீரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக பரப்பி விடப்பட்ட வதந்திகள்.
கழக உடன்பிறப்புகளும், மக்களும் அதை நம்ப வேண்டாம்.
காமராஜரை போல் மக்கள் நலனில் மட்டும் தான் பன்னீர் அக்கறை கொண்டிருக்கிறார்.

அதிமுக அனைத்து தொகுதியிலும் தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு பணம் கொடுப்பார்கள்.
ஆனால், பன்னீர்செல்வம் மிகவும் நேர்மையானவர் என்பதால் அவர் தொகுதியில் மட்டும் வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்க
அனுமதிக்க மாட்டார். ஜெயலலிதாவும், சசிகலாவும் கண்டித்தாலும், கட்டாயப்படுத்தினாலும்
அவர் அதை பற்றி கவலைப்பட மாட்டார்.
அந்த அளவிற்கு நேர்மையானவர். பதவியே போனாலும் பரவாயில்லை, தன் நேர்மையில் எந்த வித
சமரசமும் செய்து கொள்ள மாட்டார்.

பன்னீர்செல்வம் குடும்ப ஆட்சிக்கு எதிரானவர். சசிகலாவின் குடும்பம் ஆட்சியில் குறுக்கீடு
செய்தால், தைரியமாக அதை தட்டி கேட்பார். அந்த அளவிற்கு தைரியமாக செயல்படும் தன்மானம் சிங்கம் தான் பன்னீர்.
பன்னீர்செல்வத்தோட மகன் எம்.எல்.ஏ வா இருக்காரே? அது எப்படி பன்னீர் குடும்ப ஆட்சிக்கு எதிரானவர்னு கேக்கறீங்களா?
பன்னீரோட மகனின் திறமையை பார்த்து ஜெயலலிதாவும், சசிகலாவும் எம்.எல்.ஏ சீட் கொடுத்தாங்க.
பன்னீர் மகன் என்ற காரணத்தில் கொடுக்கலை. ”எதிர்கட்சி தேவையில்லாம என்னை மாட்டி விட அப்படி பேசறாங்க.
“நான் குடும்ப ஆட்சிக்கு எதிரானவன் என்பதை ஆணித்தரமாய் சொல்லிக் கொள்கிறேன்.” அப்படினு பன்னிர் சொல்றார்.

பன்னீருக்கு தன்மானம் தான் முக்கியம். யாராவது அவமானம் செய்தால் அவரால தாங்கிக்க முடியாது.
“ஜெயலலிதா, சசிகலா காலில் விழுந்து வணங்கினாரே. அது அவருக்கு அவமானமா இல்லையா”னு கேக்கறீங்க.
நாங்க எல்லாரும் உடம்பை பீட்டா வச்சிக்கனும்னு கட்சி தலைமை சொல்வாங்க.
அதனால் தான், நாங்க கீழே விழுந்து உடற்பயிற்சி செய்வோம்.
அதை போய் நான் காலில் விழுந்தேன்னு தப்பா புரிஞ்சிக்குட்டீங்க.

ஜெயலலிதா, சசிகலாவிற்கு அடிமையா பன்னீர்
இருந்தார்னு கதை கட்றாங்க. அது எல்லாம் பொய். பன்னீர் ஒரு சுதந்திர பறவை. அதை கூண்டில் அடைக்க முடியாது.

மெரினாவில் போலீஸ் கண்மூடுடித்தனமாக வன்முறை செய்தது.
காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் தான் இருக்கு. அப்ப பன்னீர் தூண்டி விட்டு தான, காவல்துறை வன்முறை
செஞ்சாங்களானு கேப்பீங்க. “இல்லை. நிச்சயம் இல்லை. நான் அன்றைக்கு உடம்பு சரி இல்லை என்று விடுமுறை எடுத்துக்
கொண்டேன். சசிகலா தான் காவல்துறை வன்முறை செய்ய கட்டளை இட்டுருகாங்க. எனக்கு
எதுவுமே தெரியாது. யாருக்கும் தீங்கு நினைக்காதவன் நான். நான் மக்களை அடிக்க சொல்வனா?
நான் மீனவர்களோட குடிசைகளை எரிக்க சொல்வனா? நிச்சயம் இல்லை. மக்கள் நலனே என் உயிர் மூச்சு.

பன்னீரின் விஸ்வருபத்திற்கு பின்னால் பிஜேபியோ, திமுகவா நிச்சயம் இல்லை.
அவர் எப்பவுமே தில்லா சுதந்திரமாக செயல்பட கூடியவர்.

ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை வெளிகொண்டுவர விசாரணை கமிசன் அமைக்கப்படும் என்று பன்னீர் சொல்லியிருக்கார்.
75 நாளில் ஒரு நாள் கூட பார்க்க விடலைனு சொல்றாரு. அப்பவே வாயை திறந்திருக்கலாமேனு கேக்கறீங்களா?
இறந்த இரண்டு மாதம் ஆகுது. இப்ப பொய்யை உண்மையா காட்டும் விதமாய் எல்லா ஆதாரங்களையும் செட்டப் செஞ்சி முடிச்சிருப்பாங்களேனு
கேக்கறீங்களா?
அட, பன்னீர் நல்லவருங்க. நம்புங்க.
அப்பல்லோவில் 75 நாளும் இருந்தார். ஆனா மர்மம் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது.
இப்ப தான், விசாரனை கமிசன் வைக்கனும்னு அம்மா ஆத்மா சொல்லியிருக்கு.
ஏன் தாமதமனு அம்மா ஆத்மா கேளுங்க. பன்னீரை கேக்க கூடாது.

கடைசியா ஒன்னை சொல்லி முடிச்சுக்கறேன்.
சசிகலா, பன்னீர்  - இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
பன்னீருக்கு பின்னால் இருக்கும் அரசியலை புரிந்து கொண்ட பிறகு, பன்னீருக்கு சப்போர்ட் பண்ணுங்க.
நன்றி.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot