Saturday, March 4, 2017

மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் தான் பிரதமரா?

மார்ச் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோக்,பெப்சி குளிர்பானங்களை விற்பனை செய்யப்படாது என தமிழக வணிகர் சங்கம் அறிவித்தது.
இதுதொடர்பாக மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் பேசுகையில்,”தமிழகத்தில் பெப்சி, கோக் புறக்கணிப்பு என்பது
ஜனநாயக விரோத செயல். இந்த குளிர்பானங்கள் தடை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.”

பார்த்தீங்களா. பெப்சி கோக்கிற்கு தடை செய்வது ஜனநாயக விரோதமாம்?

2ம் தேதி குளிர்பான நிறுவனம் பெப்சியின் தலைவர் மோடியையும், அருண் ஜெட்லியையும் சந்திக்கிறார்.
சந்திப்பிற்கு சில மணி நேரங்களிற்கு பின் சென்னை ஜகோர்ட்டில் ஒரு தீர்ப்பு வருது.

கோக் பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணி ஆறில் இருந்து தண்ணீர் எடுக்க கூடாது
என்று சில மாதங்களுக்கு முன்னர் வழங்கிய தீர்ப்பை கோர்ட் ரத்து செய்தது.
அதாவது தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க கோர்ட் அனுமதி வழங்கியது.

இந்த சந்திப்பிற்கும் பெப்சிக்கு சாதகமான தீர்ப்பு வந்ததற்கும் என்ன சம்பந்தம்னு கேக்கறீங்களா?
கவர்னர் ஒரு வாரம் தமிழகத்திற்கு வராமல் தலைமறைவு ஆனதற்கும், சசிகலாவிற்கு சிறை தண்டனை
கிடைத்தற்கும் என்ன சம்பந்தமோ அதே சம்பந்தம் தான்.

தீர்ப்பு வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன் பிரதமருடன் நடந்த சந்திப்பு நமக்கு எந்த தகவலை சொல்லுது தெரியுமா?
எங்களை யாரும் ஒன்னும் செய்ய முடியாது. பிரதமரே எங்க ஆளு என்று கோக் பேப்சி சொல்வது போல்
தான் இருந்தது. கூடிய சீக்கிரம், மோடியின் நல்லாசியுடன் தமிழ்நாட்டில் கோக் பேப்சி விற்பனையின் தடையை நீக்கவும் தீவிரம் காட்டுவார்கள்.

கோக், பெப்சி நிறுவனங்கள் தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் தாமிரபரணியில் இருந்து எடுப்பாங்க
1000 லிட்டர் தண்ணீரோட விலை வெறும் 37 ரூபாய் தான்.

2014 பிரதமர் ஆவதற்கு முன் தேர்தல் பிரசாரத்தில் பேசும் போது விவசாயிகளின் நலன் கருதி அனைவரும்
பழ சாறுகளை குடிக்கனும், கோக் பெப்சியை தவிர்க்கனும்னு சொன்ன மோடி, இன்னிக்கு
அந்த நிறுவனங்கள் வளர்வதற்காக விவசாயிகளுக்கு இருக்கும் கொஞ்சம் தண்ணீரையும் அவங்களுக்கு தாரை வார்க்கறாரு.
நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு. அரசியல்வாதிகளின் பேச்சு ஆளும்கட்சி ஆனா போச்சு.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மாட்டோம்னு கர்நாடகா சொல்லும் போது மோடி அரசு வாயை திறக்கலை.
ஆனா தாமிரபரணியில் கோக் பெப்சி நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க கூடாது, தமிழகத்தில் கோக் பெப்சி விற்பனைக்கு தடை என்றதும் மோடி அரசு தவிக்குது.
நாட்டில் பிஜேபியில் இருப்பவர்கள் மட்டும் தான் தேசபக்தர்கள், பிஜேபியை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள்னு சொல்றாங்க.
வெளிநாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காக, நம் நாட்டு விவசாயிகளை சாகடிக்க நினைக்கும்
மோடி தேச பக்தரா? தேச விரோதியா? பிஜேபி காரங்களே பதில் சொல்லுங்க.

சரி, மோடிக்கு அந்நிய நாட்டு நிறுவனங்களான கோக் பெப்சி நிறுவனங்கள் மீது ஏன் இவ்வளவு அக்கறை?
மோடி உண்மையிலேயே யாருக்கு பிரதமர்? அப்படினு கேக்கறீங்களா?
மோடி இந்தியாவில் இருக்கும் நாட்களை விட வெளிநாட்டில் தான் அதிக நாட்கள் இருக்கார்.
அதனால தான் வெளிநாட்டு நிறுவனங்கள் மீதி மோடிக்கு அப்படி ஒரு அக்கறை.
மோடி நிச்சயமா மக்களுக்கு பிரதமர் அல்ல.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தான் மோடி பிரதமர்.

மோடி மட்டும் தான் துரோகியா. தமிழக அரசும் தான் துரோகம் செஞ்சிருக்கு.
விவசாயிகளின் தேவைக்கு போக மீதி இருக்கும் தண்ணீரை தான் அந்த நிறுவனங்கள்
எடுக்கறாங்கனு கோர்ட்டில் தமிழக அரசு சொல்றாங்க.
இவங்களுக்கு விவசாயிகள் பற்றி சுத்தமா கவலை இல்லை.
விவசாயிகளின் முதுகெலும்பை உடைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அவர்களை பணியாட்கள் ஆக்குவது தான்
மத்திய மாநில அரசின் நோக்கம்.

கோர்ட் தீர்ப்பை கண்டித்து தாமிரபரணியில் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக மக்களை இவங்க நிம்மதியா வாழ விட மாட்டங்க.
இனி வரும் காலத்தில் பெரும்பாலான நாட்கள் போராட்டக் களத்தில் இருக்கும் சூழ்நிலை தான் நிலவுகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்.
வேலைக்கும் செல்லனும், போராட்டத்திற்கும் நேரம் ஒதுக்கனும்.
நேரத்தை சரியாக பயன்படுத்தனும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot