Friday, March 24, 2017

ஆர்.கே.நகரில் அரங்கேறிய கேலி கூத்துகள்

தமிழ்நாடு இளைஞர் கட்சி காமேஷ் என்கிற எம்.பி.ஏ பட்டதாரியை வேட்பாளராய் நிறுத்தினார்கள்.
கடந்த வாரம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்கள்.
இன்று தேர்தல் அதிகாரிகள் வேட்புமனுவை பரிசீலினை செய்தார்கள்.
பார்ம் 26இல் இரண்டாம் பக்கத்தை காணவில்லை என்று சொல்லி வேட்பு மனுவை நிராகரித்து உள்ளார்கள்.

இதை கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்து இருக்கிறார்கள்.

இதே போல் இன்னொரு இளைஞர் கட்சியான என் தேசம் என் உரிமை கட்சியின் வேட்பு மனுவையும் நிராகரித்து இருக்கிறார்கள்.
இளைஞர்கள் சக்தியை பார்த்து அரசியல் கட்சிகள் மிரண்டு போய்விட்டார்களா, அல்லது இந்த இரண்டு கட்சிகளை
வேறு யாராவது ஆட்டுவிக்கிறார்களா என்பது சிறிது காலத்தில் தெரிந்து விடும்.

தமிழ்நாடு இளைஞர் கட்சியில் தலைவர்கள் இல்லை.
ஐந்து ஒருங்கினைப்பாளர்கள் மட்டுமே கட்சியை தொடங்கினார்கள். கட்சியின் கட்டமைப்பை உருவாக்குவது
மட்டுமே இவர்களின் வேலை. கீழ் மட்டத்தில் இருந்து படிப்படியாக தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு
இறுதியாக ஒரு தலைமை குழு உருவாக்குவது தான் இவர்களின் திட்டம்.
எந்த பதவிகளுக்கும் இந்த ஐந்து ஒருங்கினைப்பாளர்களும்  வரமாட்டார்கள் என்று தான்
சொன்னார்கள்.

ஆனால் அந்த ஐவரில் ஒருவரான காமேஷை வேட்பாளராக களம் இறக்கியுள்ளார்கள்.
ஏன் இப்படி செய்தார்கள்? யார் அவரை தேர்ந்தெடுத்தார்கள் என்று பேஸ்புக்கிலும் தொலைபேசியிலும்
பல முறை நான் கேட்டேன். ஆனால் அவர்கள் பதில் சொல்லவில்லை.

அந்த பதில் கிடைக்கும் வரை அவர்களை நம்பும் மனநிலையில் நான் இல்லை.
பல அரசியல் கட்சிகளை நம்பி ஏமாந்த அனுபவம் இருக்கே. இனிமே ரொம்ப கவனமாக தான இருக்கனும்.

ஆர்.கே. நகரில் நிறைய கேலிகூத்துகள் நடந்திருக்கிறது:
----------------------------------------------

1) நடிகர் சரத்குமார் கட்சியின் வேட்பாளரும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் வேட்புமனுவை முன்மொழியாததால் அவரது வேட்புமனு நிராகரித்து இருக்கிறார்கள்.
அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். போலீசார் அவர்களை கைது செய்தார்கள்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/aism-cadres-arrested-protesting-road-blocked-277862.html

2) சின்னம்மா, சின்னம்மா என்று வாய்க்கு நூறு முறை சொல்லி கொண்டிருந்த சசிகலா கோஷ்டியினர்,
இப்போது தங்கள் கட்சியின் பேனர்களில் சசிகலாவை முற்றிலுமாய் தவிர்த்து விட்டார்கள். இந்த போட்டோக்களை பாருங்கள்.
சசிகலாவிற்கு தொகுதி முழுக்க எதிர்ப்பு அலை இருக்கிறது என்று இப்போது தான் இவர்கள் உணர்ந்தார்கள் போல் இருக்கிறது?

3) தீபா தாக்கல்செய்த வேட்பாளர் மனுவில், தனக்கு வாழ்க்கை துணை இல்லை என்று சொல்லியிருக்கிறார்.
  மாதவன் தானே அவர் கணவர். சமீபத்தில் தனி கட்சி என்று சொன்னாரே.
  இப்போது தீபா தனக்கு கணவன் இல்லை என்று சொல்கிறார். இது தவறான தகவல் இல்லையா.
  இதற்காக வேட்பு மனுவை நிராகரிக்க மாட்டீங்களா ஆபிஸர்ஸ்?

4) ரஜினி பிஜேபி வேட்பாளர் கங்கை அமரனுக்கு ஆதரவு தெரிவித்தார் என்று பிஜேபிகாரங்க சொல்லிக்கிட்டு இருந்தாங்க.
  ஆனால் நேற்று ரஜினியின் தரப்போ RK நகர் இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றூ கூறியிருக்கிறது.
  “ஏன் இந்த வெட்டி விளம்பரம்” என்று கங்கை அமரன் பல வருடம் முன்னாடி
   கரகாட்டக்காரன் படத்தில் எழுதியிருந்தார். பிஜேபிகாரங்களுக்கு அந்த வசனம் நல்லா பொருந்தும்.

5) தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய பிஜேபியின் வானதி சீனிவாசன் நாங்கள் SC இனத்தைசேர்ந்த கங்கை அமரனை வேட்பாளராய்
  தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என்றார்.

 “நாங்கள் சாதி அரசியல் செய்ய மாட்டோம் என்று சொல்லும் மோடியின் கட்சியை சேர்ந்தவர் எப்படி ஜாதி அரசியல் செய்றார் பாருங்களேன்”

  பிரபல இசை அமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், இளையராஜாவின் தம்பி என்று அவருக்கு நிறைய அடையாளங்கள் இருக்கிறது.
  அதை எல்லாம் விட்டுட்டு அவரின் ஜாதிக்காக தான் தான் அவரை தேர்வு செய்தோம் என்று சொல்வது
  இவர்களின் ஜாதி அரசியலை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது. 

6) தினகரன் தன் வேட்பு மனுவில் தனக்கு 77 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் இருக்குனு சொல்லிருக்கார்.
  ஆனா தந்தி டிவி 7.06 கோடினு போடறாங்க.
  இவங்க கடமை உணர்ச்சி தாங்க முடியலையே!!
  இவங்க மத்திய அரசோட அவார்டு வாங்குன டிவினு வேறு சொல்லிக்கிறாங்க.

7) ஆர்.கே.நகரில் உபி போன்றே மகத்தான வெற்றியை பெறுவோம். -தமிழிசை
  அப்படினா வாக்கு எந்திரத்தை ஹாக் செய்தால் தான் முடியும். நான் சொல்றது சரி தான மக்களே?

8) கங்கை அமரன், தினகரன், தீபா, பன்னீர் வேட்பாளர், திமுக வேட்பாளர், விஜயகாந்தின் வேட்பாளர் ஆகியோரின்
  வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

9) ஜாமினில் சிறையில் இருந்து வெளிவந்த சேகர் ரெட்டியை மீண்டும் சிறையில் அடைத்து பன்னீருக்கு செக் வைத்துள்ளது மத்திய அரசு.
கட்சியை விரைவில் அழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பன்னீர் இன்னும் தீவிரமாக செயல்படுத்துவார்
என்று நினைக்கிறேன்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot