Saturday, December 30, 2017

கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச ரகசியம் தெரியுமா?

நினைத்தது நடக்குமா? கேட்டது கிடைக்குமா? நினைத்தது நடந்து விட்டால், கேட்டது கிடைத்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.
நிச்சயம் இது சாத்தியம் தான். இந்த பிரபஞ்சம் உங்களுக்காக தான் வேலை செய்கிறது. நீங்கள் ஒன்றை ஆழமாக ஆணித்தரமாக கேட்டு விட்டால், எப்படியாவது அந்த பிரபஞ்சம் அதை உங்களுக்கு கொடுக்கும். அது தான் பிரபஞ்ச ரகசியம். இந்த ரகசியத்தை சரியாக பயன்படுத்தியவர்கள் வாழ்க்கையில் சாதிக்கிறார்கள்.
வெற்றி மேல் வெற்றிகளை குவிக்கிறார்கள். இது தான் பிரபஞ்ச ஈர்ப்பு விதி.

நம் மனதில் இருக்கும் எண்ணங்கள் தான் செயல்களாய் மாறும்.
நாம் என்ன அதிகமாக நினைக்கிறோமோ, அதை தான் இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுக்கும். நாம் என்ன அதிகமாக பேசுகிறோமோ, அதை தான் இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுக்கும்.
நாம் அதிகளவில் புலம்பி கொண்டிருந்தால், நம்மை இன்னும் அதிகளவில் புலம்ப வைக்கும் சூழ்நிலைகளை தான் அந்த பிரபஞ்சம் கொடுக்கும். எனவே எண்ணங்களை  முறைப்படுத்துங்கள். பிரபஞ்ச ரகசியத்தை முழுமையாக பயன்படுத்த முதலில் உங்கள் எண்ணங்களை செம்மைப்படுத்த வேண்டும். சிறப்பாக்க வேண்டும். இப்படி செய்தால், நீங்கள் கண்டிப்பாக சாதிக்கலாம். பணக்காரர் ஆக முடியும். நீங்கள் விரும்பிய மகிழ்ச்சியான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். தவறாமல் இந்த வீடியோவை பாருங்க. பலன் அடையுங்க.
நண்பர்களுக்கும் பகிருங்க.


மறக்காம எங்களின் பேஸ்புக் பக்கத்தை லைக் பண்ணுங்க, யுடியுப் சானலை subscribe பண்ணுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Wednesday, December 27, 2017

உங்களை பணக்காரன் ஆக்க போகும் 7 பழக்கங்கள்

தோற்றுட்டா முட்டாள்னு சொல்வாங்க. ஜெயித்தால் , அதிர்ஷ்டம்னு சொல்லிடுவாங்க. ஆனால் வெற்றி பெற்றவருக்கு பின்னால் கடுமையான உழைப்பும், விடாமுயற்ச்சியுடன் கடைப்பிடிக்கும் சில பழக்கங்களும் இருக்கும். அப்படி தான் பில்கேட்ஸும் உலகத்தின் பெரும் பணக்காரன் ஆனார். அவரிடம் இருந்த 7 பழக்கங்கள் தான் அவரை பணக்காரன் ஆக்கியது. அந்த 7 பழக்கங்கள் என்னென்னு தெரிஞ்சிகிட்டு கடைப்பிடிச்சா, நிச்சயம் உங்களின் வாழ்க்கையும் மாறும். நீங்களும் பணக்காரன் ஆவிர்கள். அந்த 7 பழக்கங்களை பற்றி தெரிஞ்சுக்க இந்த வீடியோவை பாருங்க.


எங்களின் பேஸ்புக் பக்கத்தையும் யுடியுப் சானலையும் மறக்காம லைக் பண்ணிடுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Monday, December 25, 2017

கல்யாண பந்தி கேரட் முட்டைகோஸ் பொரியல்

கல்யாண பந்தியில் கேரட் முட்டை கோஸ் பொரியல் சாப்பிட்டு இருக்கீங்களா? அருமையாக இருக்கும். வீட்டிலும் அதை போல் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கீங்களா. அதை எப்படி செய்வது என்று இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறோம். தவறாமல் பாருங்கள்.



தேவையான பொருட்கள்:
கடுகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
பூண்டு - 2-4 பல்
எண்ணெய் - 1-2 மே.கரண்டி
உப்பு - தேவைக்கு
கேரட்- 2
முட்டைகோஸ்- 2-3 கப்
தேங்காய், துறுவியது- 2-3 மே.கரண்டி
காய்ந்த மிளகாய்- 1-2
கருவேப்பிலை - சிறிது

செய்முறை:
1. ஒரு சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வெடிக்க விடவும்.
2.பிறகு நறுக்கிய பூண்டு சேர்த்து சில விநாடிகள் வதக்கவும்.
3. வதங்கியதும் நறுக்கிய கேரட், முட்டைகோஸ், உப்பு சேர்த்து கலக்கவும்.
4. மிதமான தீயில் கடாயை மூடி சுமார் 7-10 நிமிடம் காய்களை  வேகவிடவும். இடையில் கிலறவும்.
5. பின்பு காய்கள் வேந்தவுடன், துறுவிய தேங்காய், கைகளால் நொறுக்கிய சீரகம் சேர்த்து கலக்கவும்.

சுவையான கேரட் முட்டைகோஸ் பொறியல் தயார்!

Friday, December 22, 2017

உங்களால் மட்டும் தான் முடியும்

நம்முடைய வளர்ச்சியை யாரோ கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
என்ற எண்ணம் நமக்குள் எப்போதும் இருக்கிறது. இந்த வீடியோவில் ஒரு சின்ன கதை சொல்லியிருக்கிறேன். அதன் முடிவில் நம் வாழ்க்கையை மாற்ற போகும் ஒரு உன்னதமான கருத்து இருக்கிறது. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் தான்.
உங்களால் முடியும். உங்களால் கண்டிப்பாக முடியும்.
உங்களால் மட்டும் தான் முடியும். தவறாமல் பாருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

மறக்காம எங்களின் பேஸ்புக் பக்கத்தை லைக் பண்ணுங்க, யுடியுப் சானலை subscribe பண்ணுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Wednesday, December 20, 2017

சாதனையாளர்கள் காலையில் இந்த மூன்றையும் செய்ய மாட்டார்கள்

நாம் அனைவரும் காலையில் எழுந்திருக்கும் போது ஒரு முழு நாள்
நமக்கு முன்னே இருக்கிறது. அதை சிறப்பாக பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு கட்டிடம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் அதன் அடித்தளம் பலமாக இருக்க வேண்டும். அதை போல ஒரு முழு நாளை நீங்கள் சிறப்பாக உற்சாகமாக பயன்படுத்த வேண்டும் என்றால், அதன் முதல் ஒரு மணி நேரத்தை நீங்கள் சிறப்பாக பயன்படுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் அந்த முதல் ஒரு மணி நேரத்தை மனம் போன போக்கில்
செலவு செய்து காலை உற்சாகத்தை தொலைத்து விரக்தி அடைந்து விடுகிறார்கள். எனவே, நீங்கள் காலையில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய மூன்று பழக்கங்கள் இருக்கிறது. சாதனையாளர்கள் காலையில் இந்த மூன்றையும் செய்ய மாட்டார்கள். அதை பற்றி இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன்.

அதன் பிறகு, நீங்கள் இந்த ஒரு மணி நேரத்தில் என்ன செய்யலாம் என்றும் சொல்லியிருக்கிறேன். இதில் சொன்ன யோசனையை நான் பின்பற்றுகிறேன். முதல் ஒரு மணி நேரத்தை நான் திட்டமிட்டு ஜெயிக்கிறேன். அதன் மூலம் ஒட்டு மொத்த நாளையும் என் கட்டுப்பாட்டில் வைத்து சிறப்பாக செயல்பட்டு உற்சாகத்துடன் செயல்பட்டு வெற்றி பெற முடிகிறது. நீங்கள் தவறாமல் இந்த வீடியோவை பாருங்கள். பயன் அடையுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.
மறக்காம எங்களின் பேஸ்புக் பக்கத்தை லைக் பண்ணுங்க, யுடியுப் சானலை subscribe பண்ணுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Sunday, December 17, 2017

உன்னால் ஜெயிக்க முடியும் தோழா

என்னால் இதை செய்ய முடியுமா? என்னால் வாழ்க்கையில் சாதிக்க முடியுமா? என்னால் பணக்காரன் ஆக முடியுமா? என்னால் தைரியமாக பேச முடியுமா? என்னால் ஒரு பிசினஸை வெற்றிக்கரமாக நடத்த முடியுமா? என்னால் மக்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க முடியுமா?

இன்னும் ஏராளமான “முடியுமா” கேள்விகளை உங்களுக்குள் நீங்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்களா? உங்களால் முடியவில்லை என்றால், வேறு யாரால் முடியும்? ஆதிவாசிகளாய் இருந்த நாம், இன்று நாகரீகமாய் வாழ்கிறோம்? எப்படி இது சாத்தியமானது?
உங்களின் நம்பிக்கை, உங்களின் மன தைரியம், உங்களின் விடாமுயற்சி ஆகியவை தான் இதை சாத்தியமாக்கியது.

உங்களுக்குள் இருக்கும் சக்தி இப்போது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதை  நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அந்த சக்தி உங்களின் வாழ்க்கையை பிரகாசமாக மாற்றும். வெற்றி மேல் வெற்றி வந்து உங்களை புகழின் உச்சியில் கொண்டு சேர்க்கும். செல்வத்திலும், மன அமைதியுலும் உங்களை பணக்காரன் ஆக்கும். அந்த சக்தி ஆழ்மனதின் சக்தியை உணர வைக்கும். அந்த சக்தி பிரபஞ்சத்தின் சக்தியை உணர வைக்கும்
அந்த அபார சக்தியை உணர முடியவில்லையா? கண்டிப்பாக இந்த வீடியோவை பாருங்க.



மறக்காம எங்களின் பேஸ்புக் பக்கத்தை லைக் பண்ணுங்க, யுடியுப் சானலை subscribe பண்ணுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Friday, December 15, 2017

எதிர்மறை எண்ணங்களை மாற்றுவது எப்படி

ஒரே ஒரு எதிர்மறை எண்ணம் ஒருவன் வாழ்க்கையை முழுமையாக சிதைத்து விடும். எதிர்மறை எண்ணங்கள் அவ்வளவு வலிமையானவை. எதிர்மறை எண்ணங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும். அதை எப்படி கையாள வேண்டும் என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், அதற்கான கடுமையான விளைவுகளை நீங்கள் நிச்சயம் சந்தித்தாக வேண்டும்.

எல்லா பூட்டுகளுக்கும் கண்டிப்பாக ஒரு சாவி இருக்கிறது. ஆனால் சவாலான விசயம் என்னவென்றால், சரியான சாவியை தேடிக் கண்டுப்பிடிக்க வேண்டும். அதே போல், உங்களின் எதிர்மறை எண்ணங்களை கையாள நீங்கள் முறையான ஒரு வழிமுறையை பின்பற்ற வேண்டும். அதன் மூலம் உங்களின் எதிர்மறை எண்ணங்களை வெட்டி, நேர்மறை எண்ணங்களை வளர்த்து விடலாம். உங்களின் குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழலாம்.

இந்த வீடியோவில் எதிர்மறை எண்ணங்களை
மாற்றுவது எப்படி, எதிர்மறை எண்ணங்களை கையாள்வது எப்படி, எதிர்மறை எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாய் மாற்றுவது எப்படி என்பது குறித்து பேசியிருக்கிறேன். திடீர் என்று தோன்றும் இனம் புரியாத சோகம், வலி, வருத்தம் ஆகியவற்றை எப்படி துரத்துவது என்பது குறித்தும் இந்த வீடியோவில் பேசியிருக்கிறேன்.
மறக்காமல் இந்த வீடியோவை பாருங்க. உங்களுக்கு பிடித்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Thursday, December 14, 2017

மேடையில் தைரியமாக பேசனுமா. கண்டிப்பாக இந்த வீடியோவை பாருங்க.

90% மக்களுக்கு மேடையில் ஏறி பேச பயம். மேடையில் பேசுவதை தவிர்ப்பதற்கு விதவிதமான காரணங்களை கண்டுபிடிப்பார்கள். விதவிதமாக மன்னிப்பு கேட்பார்கள். உயிரே போனாலும் மேடையில் ஏறி பேச மாட்டேன் என்று சொல்வார்கள். உங்களுக்கும் மேடையில் பேச பயமா? கவலையை விடுங்கள். 90 சதவீத மக்களுக்கு அந்த பயம் இருக்கிறது. நீங்கள் இந்த வீடியோவை பார்க்க வந்திருக்கிறீர்கள். இதை படிக்கிறீர்கள். இதுவே வெற்றிக்கரமான முதல் படி. நீங்கள் தைரியமாக நம்பிக்கையாக முதல் படியை எடுத்து வைத்து விட்டீர்கள். இனி வெற்றி தான்.

இந்த வீடியோவை குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு தினமும் கேளுங்கள். இரவு தூங்குவதற்கு முன்னால் கண்டிப்பாக கேளுங்கள். மேடையில் நீங்கள் தைரியமாக பேசுவதை போல் முழு மனதுடன், முழு உணர்வுடன், கற்பனை செய்து கொண்டு கேளுங்கள். நீங்களே வியக்க வைக்கும் அதிசயம் நடக்கும். நீங்கள் ஒரு தலைசிறந்த மேடை பேச்சாளர் ஆவிர்கள். மேடையில் தன்னம்பிக்கையுடன் தைரியமாக பேசுவீர்கள். உங்கள் வாழ்க்கையே வெற்றிக்கரமாக மாறும். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

கேள்விகள், கருத்துகள், சந்தேகங்கள் ஆகியவற்றை மறக்காமல் கமண்ட் செய்யுங்கள். அல்லது fb.com/tamilmotivationalvideos க்கு மெசெஜ் ஆக அனுப்புங்கள். அனைவருக்கும் கண்டிப்பாக பதில் அளிப்போம்.



எங்களின் பேஸ்புக் பக்கத்தையும் யுடியுப் சானலையும் மறக்காம லைக் பண்ணிடுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Monday, December 11, 2017

உங்களின் மகிழ்ச்சியை கெடுக்கும் எதிரி யார்?

இவ்வுலகில் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறோம். ஆனால் பல சமயத்தில் நாம் எதிர்ப்பார்த்த மகிழ்ச்சியான வாழ்க்கை நமக்கு கிடைப்பதில்லை. பல காரணங்களால் நம்முடைய ஆசைகள், லட்சியங்கள் ஆகியவற்றை தூக்கி எறிந்து விட்டு,  வேறு வழி இல்லாமல் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழ வேண்டியதாய் உள்ளது.

பெரும்பாலான நேரங்களில் நம் மகிழ்ச்சியை கெடுப்பது ஒரே எதிரி தான்.  அந்த எதிரியின் மூலமே நம் ஆசைகள் நிராசையாய் போகிறது. அந்த எதிரியின் மூலமே நம் லட்சியங்கள் மண்ணுக்குள் புதைகிறது. அந்த எதிரியின் மூலமே நாம் விரும்பிய வாழ்க்கையை வாழ முடியாமல் போகிறது. அந்த எதிரி யார் என்று நான் தேடிக் கண்டுபிடித்து விட்டேன். இந்த வீடியோவில் அது யார் என்று உங்களுக்கும் சொல்கிறேன். அந்த எதிரி யார் என்று தெரிந்து கொண்டு,  அந்த எதிரியை ஓட ஓட விரட்டி விட்டு, உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்.

மறக்காம எங்களின் பேஸ்புக் பக்கத்தை லைக் பண்ணுங்க, யுடியுப் சானலை subscribe பண்ணுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Saturday, December 9, 2017

பணக்காரன் ஆவது எப்படி?

பணக்காரன் ஆவது எப்படி? இந்த கேள்வி தான் பெரும்பாலானோர் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். பணக்காரன் ஆவது அவ்வளவு கடினம் இல்லை. மிகவும் சுலபம் தான். ஒரு சின்ன ரகசியத்தை தெரிந்து கொண்டால் போதும். நீங்களும் பணக்காரன் ஆகலாம்.

இந்த விடீயோவில் சொல்வதை செய்தால் நீங்களும் பணக்காரன் ஆகலாம். சாதனை மேல் சாதனை புரியலாம். பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று இல்லாமல் சாதனை வாழ்க்கை வாழலாம். இறந்த பிறகும் உலகம் உங்கள் பெயர் மறையாமல் இருக்க செய்யலாம். தவறாமல் இந்த வீடியோவை பாருங்க.

மறக்காம எங்களின் பேஸ்புக் பக்கத்தை லைக் பண்ணுங்க, யுடியுப் சானலை subscribe பண்ணுங்க.

பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Thursday, December 7, 2017

வெற்றியின் ரகசியம் இதோ..

அனைவருக்கும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே வெற்றி மேல் வெற்றி பெற்று வாழ்க்கையில் சாதனை மேல் சாதனை புரிகிறார்கள். அவர்களால் மட்டும் எப்படி வெற்றி பெற முடிகிறது? அவர்களுக்கு மட்டும் எப்படி பணமும், புகழும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அதற்கு ஒரு ரகசியம் இருக்கிறது. அந்த ரகசியம் தெரிந்தால் நீங்களும் வெற்றி பெறலாம்.  கண்டிப்பாக இந்த வீடியோவை பாருங்கள். நீங்களும் அந்த ரகசியத்தை தெரிந்து கொண்டு, வாழ்கையில் வெற்றி மேல் வெற்றி பெற்று சாதனை புரியுங்கள்.



எங்களின் பேஸ்புக் பக்கத்தையும் யுடியுப் சானலையும் மறக்காம லைக் பண்ணிடுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Tuesday, December 5, 2017

மூளை சலவை செய்தால் நீங்களும் சாதிக்கலாம்

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் மட்டும் மேலே படியுங்க.  ”மூளை சலவை என்பது கெட்ட வார்த்தை ஆச்சே? மூளை சலவை செய்தால் சாதிக்கலாம்னு சொல்றீங்க. அப்படினா கெட்டது செய்து சாதிக்க சொல்றீங்களா?” அப்படினு நீங்க கேக்கறது புரியுது.

மூளை சலவையை கெட்டதுக்கும் பயன்படுத்தலாம், நல்லதுக்கும் பயன்படுத்தலாம். சாதிக்கனும்னு வெறி உங்களுக்கு இருக்கா? நேர்மையா சாதிக்கனும்னு வெறி உங்களுக்கு இருக்கா? அப்ப கண்டிப்பா இந்த வீடியோவை பாருங்க.

பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Friday, December 1, 2017

வழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்

வெண்டைக்காய் என்றாலே அதன் வழவழப்பு தான் முதலில் நினைவுக்கு வரும். வழவழப்பின்   காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வழவழப்பு இல்லாமல் வெண்டைக்காய் பொரியல் செய்ய முடியும். சுவை மற்றும் சத்து மிகுந்த வெண்டைக்காய் பொரியல் தயார் செய்யும் முறை பற்றி இந்த வீடியோவில்  பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 1-2 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 4-6 பல்
வெங்காயம் - 1
வெண்டைக்காய் - 1/4 கிலோ
உப்பு - தேவைக்கு
மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1-2 தேக்கரண்டி
தக்காளி - 1

செய்முறை:
1) ஒரு சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து வெடிக்கவிடவும்.
2) பிறகு பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
3) வதங்கியதும் நறுக்கின வெண்டைக்காய், உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து சுமார் 3-5 நிமிடம் நன்கு வதக்கினால் பிசுபிசுப்பு போகும்.
4) கடைசியில் மிளகாய்த்தூள் மற்றும் நறுக்கின தக்காளி சேர்த்து கிலரி 5 நிமிடம் கடாயை மூடி தக்காளியை வேகவிடவும்.
5) தக்காளி வெந்ததும், நீர் சுண்டி தொக்காகும் வரை வதக்கி எடுக்கவும்.

சுவையான சூப்பரான பிசுபிசுப்பு இல்லாத வெண்டைக்காய் பொரியல் தயார்.

வெண்டைக்காயின் பலன்கள்:

1) வெண்டைக்காயின் வழ வழ கொழ கொழாவுக்குக் காரணம் அதில் இருக்கும் gum மற்றும் pectin. இவையிரண்டும் சொல்யுபில் பைபர் (soluble fiber) அதாவது கரையக் கூடிய நார்சத்து. இவை சீரம் கொலஸ்ட்ரால்(serum cholesterol) -ஐ குறைப்பதுடன் மாரடைப்பு நோய் வருவதையும் குறைக்கின்றன. வெண்டைக்காயில் பாதிக்கு மேல் சொல்யுபில் பைபர் இருக்கிறது. மறு பாதியில் இன் சொல்யுபில் பைபர் (insoluble fiber) அதாவது உணவு செரிமானத்திற்கு பின் கரையாதது. இந்த வகை நார் சத்து குடலை ஆரோக்கியமாக வைக்கிறது. மலக்குடலில் உண்டாகும் புற்று நோய் வராமல் காக்கிறது.

2) வெண்டைக் காயில் இருக்கும் உயர்ந்த வகை நார் சத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒரே நிலையில் வைக்க உதவுகிறது.

3) வெண்டைக் காயில் இருக்கும் கோந்து (gum) கொலஸ்ட்ராலை கட்டுப் படுத்தி பித்த அமிலத்தால் எடுத்து செல்லப்படும் நச்சுப் பொருட்களை வடிகட்டவும் உதவுகிறது.

மேற் சொன்ன செயல்களைப் புரிவதால் இந்த அற்புதமான கறிகாய் பல நோய்கள் நம்மை அண்டாமல் தடுக்கிறது. எந்த விதமான நச்சுப் பொருட்களும் இதில் இல்லவே இல்லை. சாப்பிடுவதால் பக்க விளைவுகளும் கிடையாது. சுலபமாக குறைந்த விலையில் கிடைக்கிறது. நம் உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியா கிருமிகளையும் ஊக்குவிக்கிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் இரவு ஒரு இளம் வெண்டை காயை நீரில் ( மேல் அடிக் காம்புகளை நீக்கிவிட்டு)ஊறப் போட்டு அதிகாலை எழுந்தவுடன் அந்நீரைக் குடித்துவிட்டு காயையும் மென்று தின்ன வேண்டும். தொடர்ந்து செய்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.

அசிடிட்டி இருப்பவர்கள் தினமும் 6 வெண்டைக் காய்களை சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி குறையும்.

Blog Archive

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.