Wednesday, December 20, 2017

சாதனையாளர்கள் காலையில் இந்த மூன்றையும் செய்ய மாட்டார்கள்

நாம் அனைவரும் காலையில் எழுந்திருக்கும் போது ஒரு முழு நாள்
நமக்கு முன்னே இருக்கிறது. அதை சிறப்பாக பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு கட்டிடம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் அதன் அடித்தளம் பலமாக இருக்க வேண்டும். அதை போல ஒரு முழு நாளை நீங்கள் சிறப்பாக உற்சாகமாக பயன்படுத்த வேண்டும் என்றால், அதன் முதல் ஒரு மணி நேரத்தை நீங்கள் சிறப்பாக பயன்படுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் அந்த முதல் ஒரு மணி நேரத்தை மனம் போன போக்கில்
செலவு செய்து காலை உற்சாகத்தை தொலைத்து விரக்தி அடைந்து விடுகிறார்கள். எனவே, நீங்கள் காலையில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய மூன்று பழக்கங்கள் இருக்கிறது. சாதனையாளர்கள் காலையில் இந்த மூன்றையும் செய்ய மாட்டார்கள். அதை பற்றி இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன்.

அதன் பிறகு, நீங்கள் இந்த ஒரு மணி நேரத்தில் என்ன செய்யலாம் என்றும் சொல்லியிருக்கிறேன். இதில் சொன்ன யோசனையை நான் பின்பற்றுகிறேன். முதல் ஒரு மணி நேரத்தை நான் திட்டமிட்டு ஜெயிக்கிறேன். அதன் மூலம் ஒட்டு மொத்த நாளையும் என் கட்டுப்பாட்டில் வைத்து சிறப்பாக செயல்பட்டு உற்சாகத்துடன் செயல்பட்டு வெற்றி பெற முடிகிறது. நீங்கள் தவறாமல் இந்த வீடியோவை பாருங்கள். பயன் அடையுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.
மறக்காம எங்களின் பேஸ்புக் பக்கத்தை லைக் பண்ணுங்க, யுடியுப் சானலை subscribe பண்ணுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

No comments:

Post a Comment

Blog Archive

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.