Sunday, May 27, 2018

பணக்காரன் ஆக முடியவில்லையா? 4 காரணங்கள் இருக்கிறது



இவ்வுலகில் 1 சதவீத மக்கள் தான் சாதனையாளர்களாய் இருக்கிறார்கள். 1 சதவீத மக்கள் தான் பணக்காரர்களாய் இருக்கிறார்கள். ஏன் 99% மக்களால் சாதிக்க முடியவில்லை, பணக்காரன் ஆக முடியவில்லை. அதற்கு 4 காரணங்கள் இருக்கிறது. அது என்ன என்று தெரிந்து கொண்டு, அதை சரி செய்தால் போதும். அனைவராலும் ஈசியாக பணக்காரன் ஆக முடியும். அது என்னவென்று தெரிந்து கொள்ள இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.



ஒய்வு நேரத்தில் இதை செய்தால் சாதனையாளர் ஆகலாம்


இவ்வுலகில் 1 சதவீத மக்கள் தான் சாதனையாளர்களாய் இருக்கிறார்கள். 1 சதவீத மக்கள் தான் பணக்காரர்களாய் இருக்கிறார்கள். அவர்களின பழக்கங்கள் மீதமுள்ள 99% மக்களை விட வித்தியாசமாய் இருக்கிறது.  அவர்கள் தங்கள் ஒய்வு நேரங்களில் என்ன செய்கிறார்கள் தெரியுமா? டிவி பார்க்க மாட்டார்கள், படம் பார்க்க மாட்டார்கள். வேறு என்ன தான் அவர்கள் செய்வார்கள் என்று கேக்கறீங்களா?

அவர்கள் 5 விசயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.
அது என்னவென்று தெரிந்து கொண்டு, நாமும் அதில் கவனம் செலுத்தினால், நாமும் சாதனையாளர்களாய் ஆக முடியும்.
பணக்காரர்களாய் ஆக முடியும். அது என்னவென்று தெரிந்து கொள்ள இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.


பிரபஞ்ச ஈர்ப்பு விதியில் நினைத்ததை அடைவது எப்படி?


பிரபஞ்ச ஈர்ப்பு விதியின் மூலம் நினைத்ததை அடைவது எப்படி என்பதை அனைவருக்கும் புரியும் விதமாக மிக எளிமையாக இந்த விடீயோவில் சொல்லியிருக்கிறேன். ஆங்கிலத்தில் law of attraction என்று சொல்லுவார்கள். இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்ததை அடைய முடியும். உங்கள் குறிக்கோள்களை அடைய முடியும். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்.



Monday, April 30, 2018

உடனடியாக மன அமைதி அடைவது எப்படி?


வணக்கம் நண்பர்களே! பரப்பரப்பான இன்றைய காலகட்டத்தில், எப்போதும் எண்ணங்கள் வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. மன அமைதி என்பது எட்டாக் கனியாக இருக்கிறது.

இப்படி ஒரு சூழ்நிலையில், உடனடியாக மன அமைதி கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்??? இது சாத்தியமா என்று கேட்கிறீர்களா? கண்டிப்பாக சாத்தியம் நண்பர்களே. உடனடியாக மன அமைதி அடைவது எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.

 

Tuesday, April 17, 2018

இதை செய்தால் உங்களின் மதிப்பு 1 கோடி!!


உங்களின் இப்போதைய பொருளாதார நிலைமை என்னவென்று எனக்கு தெரியாது. ஆனால், நான் சொல்வதை செய்தால் உங்களின் மதிப்பு 1 கோடியாகும். உங்களின் குடும்பத்தினர் நிம்மதியாய் வாழ்வார்கள். பல மக்கள் செய்ய தவறும் இந்த விசயத்தை நீங்களும் செய்ய தவறாதீர்கள். உங்களின் மதிப்பு 1 கோடி ரூபாயாவது எப்படி என்று தெரிந்து கொள்ள தவறாமல் இந்த வீடியோவை பாருங்க.


Thursday, March 29, 2018

பிரபஞ்ச ஈர்ப்பு விதியின் மாபெரும் வெற்றி கதை|என் வாழ்க்கையில் நடந்த அதிசயம்


பிரபஞ்ச ஈர்ப்பு விதி வேலை செய்யுமா? அதை நம்பலாமா? என்று நிறைய பேர் என்னை கேட்கிறார்கள். இந்த வீடியோவில் அவர்கள் எல்லாருக்கும் பதில் கிடைக்கும். பிரபஞ்ச ஈர்ப்பு விதி மீது நம்பிக்கை உள்ளவர்களும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும். பிரபஞ்ச ஈர்ப்பு விதியின் மேல் இருக்கும் நம்பிக்கை வலுவடையும். உங்கள் குறிக்கோளை அடைய ஒரு உத்வேகம் தரும். பிரபஞ்ச ஈர்ப்பு விதியை சரியாக பயன்படுத்தினால் எதுவும் சாத்தியம் என்பதை புரிய வைக்கும். பிரபஞ்ச ஈர்ப்பு விதியின் மூலம் என்னுடைய வாழ்க்கையில் நான் அடைந்த மிக பெரிய வெற்றியை பற்றி இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன்.தவறாமல் பாருங்க.


Monday, March 26, 2018

இந்த 7 கெட்ட பழக்கங்களை துரத்துங்கள்


இந்த 7 கெட்ட பழக்கங்கள் எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கும், உங்களை ஒரு எதிர்மறை மனிதனாய் மாற்றி விடும். இந்த 7 பழக்கங்களில் உங்களுக்கு என்ன பழக்கங்கள் இருக்கிறது என்பதை கவனமாக பாருங்கள். அதை கண்டிப்பாக நீங்கள் தூக்கி எறிய வேண்டும். அப்படி செய்தால், நிச்சயம் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் ஆனந்தமாகவும் இருக்கும். நிச்சயம் வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும்.


Thursday, March 22, 2018

சவால்கள் இல்லை என்றால் சாதனை இல்லை


நம் வாழ்க்கையில் சில தருணுங்களில் நம்முடைய முயற்சிகள் தோல்வி அடைகிறது. கனவுகள் சிதைந்து போகிறது. மனம் வேதனை அடைகிறது. மீண்டும் முயற்சி செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது.

பல சவால்கள் நம் வாழ்க்கையில் வந்து கொண்டே இருக்கும். சவால்களை மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். சவால்களை மன உறுதியுடன், தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் சவால்களை கண்டு அஞ்ச கூடாது. ஏனென்றால் சவால்கள் இல்லை என்றால் சாதனை இல்லை. சவால்களை எதிர்க்கொண்டு பெரிய வெற்றி பெற்று பெரும் சாதனை படைக்க வேண்டும் நண்பர்களே.

நம்பிக்கை ஊட்டும் இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.


கர்ப்ப காலம் இனிமையாக இருக்க சுய பிரகடனம். தினமும் கேளுங்கள்


உங்களின் கர்ப்பகாலம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசையா?

உங்களின் குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டும் என்று ஆசையா?

சுக பிரசவத்தில் அழகான ஆரோக்கியமான குழந்தையை பெற்று எடுக்க வேண்டும் என்று ஆசையா?

கர்ப்ப காலம் இனிமையாக இருக்க சக்தி வாய்ந்த இந்த சுய பிரகடனத்தை கேளுங்கள்.

கர்ப்ப பையில் குழந்தை நல்லப்படியாக வளர சக்தி வாய்ந்த இந்த சுய பிரகடனத்தை கேளுங்கள்.

சுக பிரசவத்தில் அழகான ஆரோக்கியமான குழந்தை பெற்று எடுக்க சக்தி வாய்ந்த இந்த சுய பிரகடனத்தை கேளுங்கள்


இந்த ஆடியோவை தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேளுங்கள். குறிப்பாக தூங்க செல்வதற்கு முன்னால் கண்டிப்பாக கேளுங்கள். தூங்கும் போது playlist இல் போட்டு விட்டு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தால் அதிக நன்மை.

கேட்கும் போது முழு மனதுடன் கேளுங்கள். முழு உணர்வுடன் கேளுங்கள். உங்களின் கர்ப்பகாலம் மகிழ்ச்சியாக இருப்பது போல் கற்பனை செய்து கொண்டே கேளுங்கள். நீங்களும் உங்களின் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பது போல் கற்பனை செய்து கொண்டே கேளுங்கள். சுக பிரசவத்தில் அழகான ஆரோக்கியமான குழந்தையை பெற்று எடுப்பது போல் கற்பனை செய்து கொண்டே கேளுங்கள். நீங்களே வியக்கும் அதிசயம் நடக்க போகிறது.

உங்களின் கர்ப்பகாலம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்களுக்கு சுக பிரசவத்தில் அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்க போகிறது. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

Wednesday, March 21, 2018

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான வாழைப்பழ மவின்ஸ்


இந்த காலத்தில் குழந்தைகளை சாப்பிட வைப்பதற்குள் நாம் சாப்பிட்ட உணவு எல்லாம் ஜீரணமாகி விடுகிறது. அவ்வளவு சவாலாக இருக்கிறது. எது கொடுத்தாலும் வேண்டாம் வேண்டாம் என்கிறார்கள். பிஸ்கட் சாக்லட்டை மட்டும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இவர்களுக்கு எப்படி ஆரோக்கியமான உணவு கொடுப்பது என்ற குழப்பத்தில் இருக்கீங்களா? கவலையை விடுங்க. இந்த அருமையான வாழைப்பழ மவின்ஸ் செஞ்சி கொடுங்க. இதில் சர்க்கரை இல்லை. ஆனால் தித்திப்பாக இருக்கும். பழ ஜாம் மட்டுமே சேர்க்க போகிறோம். சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தை இந்த மவின்ஸை விரும்பி சாப்பிடுவாங்க.

எனவே சர்க்கரை சேர்க்காத தித்திப்பான, சுவையான, ஆரோக்கியமான muffins ஐ குழந்தைகளுக்கு செஞ்சி கொடுங்க. இதில் இரும்பு சத்து இருக்கிறது. உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.



இந்த மவின்ஸில் வீட்டில் செய்யும் சுவையான ஜாம்மை சேர்க்கிறோம். அதை எப்படி செய்வது என்று இங்கே காணலாம்

Tuesday, March 20, 2018

எப்போதும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம் தெரியுமா?


வாழ்க்கையில் நாம் எதிர்பார்த்தது சில நேரம் நடக்கும். சில நேரம் நடக்காமல் போகும். எதிர்ப்பார்த்தது நடந்தால் மகிழ்ச்சியாகிறோம். எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் வருத்தம் அடைகிறோம். ஆனால் வெளிப்புற சூழல் எப்படி இருந்தாலும், நமக்குள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? கண்டிப்பாக முடியும். என்ன நடந்தாலும் சரி, அதனால் பாதிப்படையாமல் நமக்குள் மகிழ்ச்சியாக இருக்க முடியும். வாழ்க்கையை ஆனந்தமாக கொண்டாட முடியும். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்ற ரகசியத்தை ,தெரிந்து கொள்ள இந்த வீடீயோவை பாருங்க.


Wednesday, March 14, 2018

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ”வெள்ளை நிற பன்னீர் கிரேவி”


நம் வீட்டு குழந்தைகள் நன்றாக சாப்பிட்டால் தானே நமக்கு மகிழ்ச்சியும், மன நிறைவும் கிடைக்கும். ”வெள்ளை நிற பன்னீர் கிரேவி”யை நான் எனது குழந்தைக்கு செஞ்சி கொடுத்தேன்.
எது கொடுத்தாலும் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லும் குழந்தை இதை விரும்பி சாப்பிட்டது. என் மனமும் மகிழ்ச்சியில் நிறைந்தது. நீங்களும் ”வெள்ளை நிற பன்னீர் கிரேவி”யை செஞ்சி பாருங்க. நிச்சயம் உங்கள் வீட்டு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.



விரிவான செய்முறை இதோ

Tuesday, March 13, 2018

திருமண வாழ்க்கையில் மீண்டும் நெருக்கமும், காதலும், மகிழ்ச்சியும் வேண்டுமா?



திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாக இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல, காதலும் நெருக்கமும் குறைந்து கொண்டே இருக்கிறது என்பது தான் பெரும்பாலான திருமணம் ஆனவர்களின்
கவலை. இந்த நிலைமையை கண்டிப்பாக மாற்ற முடியும். இந்த வீடியோவை கண்களை மூடிக் கொண்டு பாருங்கள். உங்களுக்குள் மகிழ்ச்சி பரவும், உங்கள் வாழ்க்கை துணை மேல் காதல் அதிகரிக்கும்.


Monday, March 12, 2018

இரண்டையும் இரண்டையும் கூட்டினால் 5. இது புரிந்தால் திருமண வாழ்க்கை சூப்பரா இருக்கும்


இரண்டையும் இரண்டையும் கூட்டினால் எவ்வளவுங்க வரும்?
”4” என்பது உங்கள் பதிலா?
”5” தான் சரியான பதில்.
புரியலையா. இரண்டையும் இரண்டையும் கூட்டினால் எப்படி 5 வரும் என்பதை கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? தெரிந்து கொண்டால் தான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும். தவறாமல் இந்த வீடியோவை பாருங்க.

 

Wednesday, March 7, 2018

சுவையான, ஆரோக்கியமான சிகப்பரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி?


சுவையான, ஆராக்கியமான மற்றும் தித்திப்பான சிகப்பரிசி கொழுக்கட்டை சாப்பிட்டு போருங்கள். சூப்பராக இருக்கும். சர்க்கரை இல்லாத அருமையான இந்த கொழுக்கட்டையை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சர்க்கரை இருப்பவர்களும் ஜாலியாக இந்த தித்திப்பான கொழுக்கட்டையை சாப்பிடலாம். எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள இந்த வீடீயோவை(ஆங்கிலத்தில்) பாருங்கள்.

Tuesday, March 6, 2018

குறிக்கோளை அடையும் வரை போராடு. தன்னம்பிக்கை ஊட்டும் வீடீயோ


குறிக்கோளை அடையும் வரை ஓய கூடாது.
குறிக்கோளை அடையும் வரை மனம் தளர கூடாது.
குறிக்கோளை அடையும் வரை விலக கூடாது.
குறிக்கோளை அடையும் அரை நிற்க கூடாது.

உன் குறிக்கோள் உன்னை முறைப்படுத்தும்.
மன தைரியத்துடன் போராடி குறிக்கோளை அடையும் போது நீ உயர்கிறாய். நீ சாதனையாளர் ஆகிறாய். நீ வெற்றியாளன் ஆகிறாய்.

 ”யாருமே என் மேலே நம்பிக்கை வைக்க மாட்றாங்க?”
”பல காலமாக முயற்சி செஞ்சிட்டேன். என்னால் முடியலை.”
”எங்கே தொடங்குவது என்று தெரியலை.”
”எதிர்ப்பார்த்த முடிவுகள் கிடைக்கலை.”
இந்த கேள்விகளும் குழப்பங்களும் உங்களிடம் இருந்தால் தவறாமல் நம்பிக்கையூட்டும் இந்த வீடியோவை பாருங்க. உங்களுக்குள் சுறுசுறுப்பு மலரும். குறிக்கோளை அடைய வேண்டும் என்ற மன வலிமை தோன்றும்.

Monday, March 5, 2018

இந்த 5 எண்ணங்களை மாற்றினால் கண்டிப்பாக பணக்காரன் ஆக முடியும்


உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஆழ்மனதில் பதிந்து இருக்கும் இந்த 5 எண்ணங்கள் தான் உங்களை பணக்காரன் ஆக விடாமல் தெரிகிறது. அது என்ன என்பதை தெரிந்து கொண்டு, ஆழ்மனதில் இருக்கும் அந்த எண்ணங்களை மாற்றி விட்டால் போதும். நீங்கள் கண்டிப்பாக பணக்காரன் ஆவிர்கள். அந்த 5 எண்ணங்கள் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த வீடியோவை முழுசா பாருங்க.

Tuesday, February 27, 2018

தோல்விகளை வெற்றியாய் மாற்றும் ரகசியம்

”வாழ்க்கையில் தொடர் தோல்விகளாய் இருக்கிறதே. இந்த தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வந்து என்னால் சாதிக்க முடியுமா” என்ற சந்தேகம்  உங்களுக்குள் எழுகிறதா ? தவறாமல் இந்த வீடியோவை பாருங்க.

Thursday, February 22, 2018

காதலை ஈர்க்கும் சக்தி வாய்ந்த சுய பிரகடனம்

அன்பான வாழ்க்கை துணை அமைந்து விட்டால் வாழ்க்கை நிச்சயமாக மகிழ்ச்சியாக  இருக்கும். அன்பான வாழ்க்கை துணையை பெற வேண்டும் என்று உங்களுக்கு ஆசையா? உங்கள் மேல் பாசமாய் இருக்கும் வாழ்க்கை துணையை பெற வேண்டும் என்று ஆசையா? இந்த ஆடியோவை தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேளுங்கள். குறிப்பாக தூங்க செல்வதற்கு முன்னால் கண்டிப்பாக கேளுங்கள். தூங்கும் போது playlist இல் போட்டு விட்டு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தால் அதிக நன்மை.

கேட்கும் போது முழு மனதுடன் கேளுங்கள். முழு உணர்வுடன் கேளுங்கள். அன்பான வாழ்க்கை துணையை நீங்கள் பெற்றது போல் கற்பனை செய்து கொண்டே கேளுங்கள்.  நீங்களே வியக்கும் அதிசயம் நடக்க போகிறது.

உங்களுக்கு அன்பான ஒரு வாழ்க்கை துணை வர போகிறார்.
உங்களின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமாய் ஆக போகிறது.
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

Tuesday, February 20, 2018

அவமானங்களை எதிர்கொள்வது எப்படி?

அவமானங்களையும், விமர்சனங்களையும், வலிகளையும், காயங்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவது எப்படி என்ற அருமையான ரகசியத்தை இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உங்களின் கேள்விகளையும் சந்தேகங்களையும் கமண்ட்டில் பதிவு செய்யுங்கள் அல்லது vaangapesalam12@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு ஒரு தகவல் அனுப்புங்கள்.

Monday, February 19, 2018

தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்

தன்னம்பிக்கை இருந்தால் எவ்வளவு பெரிய சாதனையை வேண்டுமானாலும் நிகழ்த்த முடியும். ஆனால் தன்னம்பிக்கை இல்லை என்றால் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது. அதை விளக்கும் இந்த அருமையான வீடியோவை காணத்தவறாதீர்கள்.

Friday, February 16, 2018

சுவையான இறால் பெப்பர் மசாலா செய்வது எப்படி?

செட்டிநாட்டு ஸ்டலைலில் சுவையான இறால் பெப்பர் மசாலா செய்து சாப்பிடலாமா நண்பர்களே. கண்டிப்பாக இந்த வீடியோவை பாருங்க(ஆங்கிலத்தில்)

Wednesday, February 14, 2018

கவனத்தை கூர்மையாக்க ஈசியான வழிமுறைகள்

வாழ்க்கையில் எந்த ஒரு வேலையை செய்தாலும், முழு கவனத்துடன் செய்வது மிகவும் அவசியம். முழு கவனம் இல்லாமல் செய்யும் எந்த வேலையும் முழுமை பெறாது. பெரும்பாலான நேரங்களில் அந்த வேலையை திரும்ப செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படும். குடும்ப வாழ்க்கை மற்றும் அலுவலகத்தில்,
முழு கவனத்துடன் செயல்பட்டால், வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று மன நிறைவுடன் வாழலாம். முழு கவனத்துடன் இருப்பது எப்படி? இந்த வீடியோவில் ஈசியான சில வழிமுறைகளை சொல்லித்தருகிறேன். தவறாமல் இந்த வீடியோவை பாருங்க.

ஒரே மந்திரத்தில் கடன் அடையும் அதிசயம்

உங்களின் கடனை முழுமையாய் அடைத்து விட்டு, செல்வந்தனாய் வாழ்வதற்கு ஒரு அருமையான மந்திரம் இருக்கிறது. ஆமாம். ஒரே ஒரு மந்திரம் தான். உங்கள் கடன் அடையும். வாழ்க்கை  மகிழ்ச்சிகரமாய் இருக்கும். தவறாமல் இந்த வீடியோவை பாருங்க.

Monday, February 5, 2018

பிரபஞ்ச ஈர்ப்பு விதியை புரிய வைக்கும் அருமையான கதை

இந்த வீடியோவில் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். பிரபஞ்ச ஈர்ப்பு விதியை பற்றி மிக அருமையாக புரிய வைக்கும். அனைவரும் இந்த விதியை பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், நம்முடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அதிசய சக்தியை நாம் எப்படி பயன்படுத்துவது என்பதை பிரபஞ்ச ஈர்ப்பு விதி நமக்கு சொல்லித் தரும். கண்டிப்பாக இந்த வீடியோவை பாருங்க.

Wednesday, January 31, 2018

பணம் கொட்டும் சொர்க்க வாழ்க்கை வேண்டுமா?

பணம் என்பது மனித வாழ்க்கையில் மிகவும் அத்தியாவசியமான தேவை. பணம் கொட்டும் சொர்க்க வாழ்க்கை வேண்டும் என்பது பலரின் கனவாகும். ஆனால் அந்த கனவு ஒரு சிலருக்கு மட்டுமே பலிக்கிறது. அந்த ஒரு சிலருக்கு ஒரு ரகசியம் தெரிந்ததால் மட்டுமே, அவர்களுக்கு பணம் கொட்டும் சொர்க்க வாழ்க்கை கிடைத்தது.
செல்வந்தர்கள் ஆனார்கள். தொழிலதிபர்கள் ஆனார்கள். அந்த ரகசியம் தெரிந்தால் நீங்களும் பெரிய பணக்காரன் ஆக முடியும்.
உங்கள் வாழ்க்கையில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.
அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால், கண்டிப்பாக இந்த வீடியோவை பாருங்க.

Monday, January 29, 2018

தன்னம்பிக்கை இழக்காதீர்கள். வெற்றி நமதே!

வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது.
சமாளிக்கவே முடியவில்லை. வாழ்க்கையை வாழவே முடியவில்லை என்ற விரக்தி ஏற்படுகிறதா? கவலையை விடுங்க. எந்த ஒரு சுழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காதீர்கள். தைரியத்தை இழக்காதீர்கள். சாதிக்க முடியும் என்ற 100% நம்பிக்கையுடன் வாழ வேண்டும். இந்த வீடியோவில் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். இந்த கதையை கேட்ட பிறகு நிச்சயம்
உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக மன அமைதி நிறைந்ததாக இருக்கும்.

Thursday, January 25, 2018

ஐடி வேலையில் வெற்றி பெற 8 டிப்ஸ்

ஐடி துறையில் அடிக்கடி ஆள் குறைப்பு வேலைகளை செய்கிறார்கள். இதனால் ஐடி ஊழியர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அதிக சம்பளம் கிடைத்தாலும், எப்போது வேண்டுமானாலும் வேலையில் இருந்து தூக்கி விடுவார்கள் என்ற அச்சம் அதிக அளவில் இருக்கிறது. ஐடி ஊழியர்கள் தப்பிக்க என்ன தான் வழி? ஐடி ஊழியர்கள் இதிலிருந்து தப்பித்து சாதிக்க உதவும் 8 டிப்ஸ்களை நான் இந்த வீடியோவில் சொல்கிறேன். தவறாமல் பாருங்கள். பயன் அடையுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Wednesday, January 24, 2018

அளவில்லா பணத்தை ஈர்க்கும் ஈசியான வழி

பணக்காரன் ஆக வேண்டும் என்று ஆசையா?
உங்களிடம் அதிக அளவில் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசையா? இந்த ஆடியோவை தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேளுங்கள். குறிப்பாக தூங்க செல்வதற்கு முன்னால் கண்டிப்பாக கேளுங்கள். தூங்கும் போது playlist இல் போட்டு விட்டு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தால் அதிக நன்மை.

கேட்கும் போது முழு மனதுடன் கேளுங்கள். முழு உணர்ச்சியுடன் கேளுங்கள். பணம் அதிக அளவில் வந்து கொண்டே இருப்பது போல் கற்பனை செய்து கொண்டே கேளுங்கள். உங்களின் கற்பனை ஆழ்மனதிற்குள் செல்லும். பின்னர் ஆழ்மனதில் இருந்து பிரபஞ்சத்துடன் இணையும். பின்னர் பிரபஞ்ச ஈர்ப்பு விதி படி உங்களின் கற்பனை நிஜமாக நடக்கும். நீங்களே வியக்கும் அதிசயம் நடக்க போகிறது.

உங்களின் வாழ்க்கை செல்வ செழிப்பாக ஆக போகிறது. உங்களிடம் அதிக அளவில் பணம் வந்து கொண்டே இருக்க போகிறது. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

Friday, January 19, 2018

நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன?

நேர்மறை எண்ணங்களை நாம் வளர்த்தால் நம் வாழ்வில் வியக்க வைக்கும் மாற்றங்கள் நிகழும். நாம் என்ன நினைக்கிறோமோ அதையே தான் இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுக்கும். எனவே நல்ல விஷயங்களை மட்டுமே நினைக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும். எண்ணங்கள் மிகவும் வலிமையானது. நாம் அதிகளவில் சக்தி கொடுக்கும் எண்ணங்கள் நம் ஆழ்மனதிற்குள் செல்லும். ஆழ்மனதிற்குள் செல்லும் எண்ணங்கள் நிச்சயம் நடந்தே தீரும் என்பதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். எனவே நேர்மறை எண்ணங்களை நாம் அனைவரும் வளர்க்க வேண்டும். தவறாமல் இந்த வீடியோவை பாருங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Monday, January 15, 2018

தோல்வியில் இருந்து மீள்வது எப்படி?

தோல்வி உங்களை சோர்வு அடைய வைக்கும், விரக்தியை கொடுக்கும், வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாத நிலையை உருவாக்கிவிடும். ஆனால் தோல்வியில் இருந்து சுலபமாக மீள முடியும். தொடர்ந்து நம் குறிக்கோளை நோக்கி கடுமையாக உழைக்க முடியும். கண்டிப்பாக இந்த வீடியோவை பாருங்க. நண்பர்களுக்கும் பகிருங்க. மறக்காம எங்களின் பேஸ்புக் பக்கத்தை லைக் பண்ணுங்க, யுடியுப் சானலை subscribe பண்ணுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

எண்ணங்களின் அற்புத சக்தி தெரியுமா?

எண்ணங்கள் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது என்பது இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு நிச்சயம் புரியும். அதை புரிந்து கொண்ட பின்பு, உங்களுக்குள் நிச்சயம் ஒரு மாற்றம் நிகழும். மகிழ்ச்சி பெருகும். செல்வம் செழிக்கும். உறவுகளுக்குள் அன்பு அதிகரிக்கும்.  எனவே தவறாமல் இந்த வீடியோவை பாருங்க. நண்பர்களுக்கும் பகிருங்க. எங்களின் பேஸ்புக் பக்கத்தையும் யுடியுப் சானலையும் மறக்காம லைக் பண்ணிடுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Friday, January 12, 2018

உங்கள் வேலையில் வெற்றி பெற சூப்பர் டிப்ஸ்

பல வருடங்களாக அலுவலகத்தில் தினமும் ஒரே வேலையை செய்வதால் நிறைய பேருக்கு வேலைக்கு போனால் ஒரே போர் அடிக்கும், அலுப்பாய் இருக்கும், சலிப்பாய் இருக்கும். போர் அடிக்கும் எல்லா வேலைகளையும் விரும்பத்தக்க வேலைகளாய் மாற்ற முடியும் என்பது இந்த வீடியோவை பார்த்த பிறகு உங்களுக்கு புரியும்.

தவறாமல் இந்த வீடியோவை பாருங்கள். போர் அடிக்கும் உங்களின் வேலையை விரும்பத்தக்க வேலையாய் மாற்றுங்கள். அலுவலகத்திற்கு உற்சாகமாய் போக முடியும். ஆர்வமாய் போக முடியும். அலுவலகத்தில் சாதிக்க முடியும். பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும்.

எங்களின் பேஸ்புக் பக்கத்தையும் யுடியுப் சானலையும் மறக்காம லைக் பண்ணிடுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Tuesday, January 9, 2018

நினைத்ததை நடத்தும் ஆழ்மனதின் அற்புத சக்தி தெரியுமா?

உங்களின் எண்ணங்களின் சக்தியை பற்றி உங்களுக்கு தெரியுமா? உங்கள்  ஆழ்மனதின் சக்தியை பற்றி உங்களுக்கு தெரியுமா?  உங்களின் ஆழ்மனதின் அபார சக்தியை பற்றி தெரிந்து கொண்டால், நீங்கள் நினைத்ததை நடத்த முடியும். வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றிகளை குவிக்க முடியும், செல்வந்தர் ஆக முடியும், இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக அமைத்துக் கொள்ள முடியும். தவறாமல் இந்த வீடியோவை பாருங்கள்.
எங்களின் பேஸ்புக் பக்கத்தையும் யுடியுப் சானலையும் மறக்காம லைக் பண்ணிடுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Monday, January 8, 2018

உங்களால் ஜெயிக்க முடியும். உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வீடியோ

வாழ்க்கையில் சில தருணங்களில் உங்களுக்கு உதவ யாரும் முன் வர மாட்டார்கள். தனித்து விடப்பட்டது போல் ஒரு உணர்வு உங்களுக்கு தோன்றும். சவால்களை எதிர் கொள்ள ஒரு தைரியம் இருக்காது. இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையை எப்படி கையாள்வது. இழந்த நம்பிக்கையை எப்படி மீட்டு எடுப்பது? வாழ்க்கையில் சவால்களை எதிர்கொண்டு எப்படி வெற்றி பெறுவது? இந்த கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள
தவறாமல் இந்த வீடியோவை பாருங்க. இந்த வீடியோ உங்களுக்கு நம்பிக்கையை தரும். வெற்றி பெற முடியும் என்ற உணர்வை கொடுக்கும். உடனே வேலையை செய்ய தொடங்குவோம்
என்ற ஒரு தெளிவு பிறக்கும்.



மறக்காம எங்களின் பேஸ்புக் பக்கத்தை லைக் பண்ணுங்க, யுடியுப் சானலை subscribe பண்ணுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Wednesday, January 3, 2018

எப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது? - ஈசியான 7 டிப்ஸ்

ஆங்கிலம் பேச தெரிந்தால் உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ முடியும். ஆங்கிலம் தெரிந்தால், உங்களின் தொழிலை உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும். ஆங்கிலம் பேச தெரிந்தால், என்னற்ற நன்மைகள் உண்டு.

எனினும் ஆங்கிலம் பேச தயக்கமாக இருக்கிறதா? தாழ்வு மனப்பான்மை இருக்கிறதா? கவலைப்படாதீங்க. நானும் அப்படி தான் இருந்தேன். ஆனால் அதில் இருந்து மீண்டு வந்து ஆங்கிலம் பேச கற்றுக் கொண்டு இப்போது அருமையாக ஆங்கிலம் பேசுகிறேன்.

இந்த வீடியோவில், நான் எப்படி ஆங்கிலத்தை சரளமாக பேச கற்றுக் கொண்டேன் என்பதை சுருக்கமாக கூறுகிறேன். பிறகு நீங்கள் ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கு 7 சுலபமான ஐடியாக்களை சொல்லியிருக்கிறேன். இன்னும் என்ன யோசனை? உடனடியாக இந்த வீடியோவை பாருங்க, பலன் அடையுங்க, நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்க.

எங்களின் பேஸ்புக் பக்கத்தையும் யுடியுப் சானலையும் மறக்காம லைக் பண்ணிடுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Monday, January 1, 2018

இரவு தூங்குவதற்கு முன்னால் இதை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை மாறும்

பெரும்பாலான மக்கள் வாழ்க்கையில் எதிர்மறை எண்ணங்களை தான் அதிகளவில் சிந்திக்கிறார்கள். வாழ்க்கை எவ்வளவு சிரமமாய் இருந்தாலும், எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், எவ்வளவு
கடினமான பொருளாதார நிலையில் சிக்கி தவிச்சாலும், உங்கள் வாழ்க்கையில் ஒன்றிரண்டு நல்ல சம்பவங்கள் நடக்குது அல்லவா? அவை மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்துகின்றது அல்லவா?
அதை பற்றி தான் ஒரு முக்கியமான கருத்தை இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன்.

அதில் சொல்லியிருக்கும் விசயத்தை தினமும் இரவில் தூங்க போவதற்கு முன்னால் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை கண்டிப்பாக பிரகாசமாய் மாறும். மகிழ்ச்சியான வாழ்க்கையாய் மாறும். செல்வம் செழிக்கும் வாழ்க்கையாய் மாறும். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

மறக்காம எங்களின் பேஸ்புக் பக்கத்தை லைக் பண்ணுங்க, யுடியுப் சானலை subscribe பண்ணுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Blog Archive

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.